அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா !!!



எனது ஈரக் கொழுந்து என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டவரும் அன்னவர்களின் இளைய புதல்வியுமான பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்று வாழ்ந்த வாழ்க்கையை இன்று கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் சகோதரிகளே! மனம் உருகுது அல்லவா!

​​நுபுவ்வத் 10 – ஆம் ஆண்டு அன்னை கதீஜாவை இழந்தார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள். மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது தனது மகளை, ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மணம் முடித்து வைத்தார்கள். அப்போது பாத்திமா நாயகியார் அவர்களுக்கு வயது பதினெட்டு. ஹஸ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இருபத்தி மூன்று வயதாகும். மிகவும் ​எளிமையான முறையில்
ஹிஜ்ரி – 2 ஆம் ஆண்டு இவர்களின் திருமணம் நடந்தது.


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தனது மகளுக்கு மரக் கட்டில், தலையணை, போர்வை, திரிகை, நீர் சேகரிப்பதற்கான பாத்திரம் போன்ற பொருட்களை அன்பளிப்புச் செய்தார்கள். பாத்திமா நாயகியார் அவர்கள் தனது வேலைகளை, அதாவது மாவு அரைத்தல், ரொட்டி சுடுதல், நீர் அள்ளுதல், வீடு பெருகுதல் போன்ற வீட்டு வேலைகளை தாமே செய்து கொண்டார்கள். தகப்பன் மனதிலும், கணவன் கண்ணிலும் நிறைவாக வாழ்ந்தார்கள். இவரிடம் இறையச்சம், நாணம், பொறுமை, எளிமை, தருமம், பக்தி, பற்றற்ற வாழ்வு போன்ற நற்பண்புகள் நிறைந்தவராகக் காணப்பட்டார்கள்.


கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் வபாத்தான போது மிகவும் கலங்கித் துடித்தார்கள். இத்தனை பாசங்கள், னசம் கொண்ட அவர் தந்தை வபாத்தாகி ஆறு மாத காலத்தின் பின் அவரும் வபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் இவர் ஹிஜ்ரத்தின் பின் பத்தாம் ஆண்டு ரமழான் மதம் தனது 29 –ஆம் வயதில் வபாத்தானார்கள். அவரின் வேண்டுகோளின்படி இரவில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

நன்றி ;- www.mailofislam.com

DOWNLOAD PDF BOOK

(c) www.mailofislam.com - All rights reserved

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு