தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் !!!
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக
தமிழகம் தழுவிய இமாம்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம்
தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
10-04-2018 அன்று அதிகாலை முதலே தமிழகத்தின்
நெற்களஞ்சியமான தஞ்சை மாநகர் உலமாகளால்
விழா கோலம் பூண்டது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்
350க்கும் மேற்பட்ட உலமாக்கள்
இப்பயிலரங்கில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் மூத்த உலமா பெருமக்கள் நிகழ்வில்
கலந்து பயிலரங்கை மிகச் சிறப்பாக வழிநடத்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்...
கவனிக்க வேண்டிய சின்ன சின்ன மஸாயில்கள்
தொடங்கி இன்றைய கால சூழலுக்கு ஏற்றவாறு
உரை_தயாரிப்பது_எப்படி என்பது உட்பட
பல விஷயங்கள்அலசி தரப்பட்டது.
நிகழ்வை மிகச் சிறப்பாக தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல்
உலமாசபை ஏற்பாடு செய்து இருந்தது.
பயிலரங்கின் இறுதியில் மாநில தலைவர்
மற்றும் செயலாளர் அவர்களும் இன்ஷா அல்லாஹ்
வருகிற மே மாதம் 12,13 மதுரையில்
நடைபெற இருக்கும் தாருல் உலமா திறப்பு விழா
மற்றும் தேசம் காப்போம் மாநில மாநாடிற்கு
தமிழகத்தின் கடைக்கோடி உலமாவும் பங்கெடுக்க
வேண்டும் என்று அழைப்பு கொடுத்தது கூடுதல்
சந்தோஷமும்,தமிழகம் இதுவரை காணாத ஒரு
மாபெரும் உலமா சங்கமத்தில் நாமும் ஒருவராய்
பங்கெடுக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியோடும்
அனைவரும் திரும்பினர்.தமிழ் முஸ்லிம் சமூகம்
இனிவரும் காலங்களில் ஜமாஅத்துல் உலமா
மற்றும் ஆலிம்கள் பின்னால் அணி அணியாக
திரளும் காலம் கனிந்து விட்டது என்று
எல்லோரும் நம்புகிறோம்...
அல்லாஹ் ஜமாஅத்துல் உலமா சபை மற்றும்
அதன் நிர்வாகிகளுக்கும் அங்கீகாரத்தை தந்தருள்வானாக...
آمين آمين يارب العالمين
Comments
Post a Comment