ஞானக்கடல் ஆன்மீக குரு இறைநேசர் ஹழ்ரத்.முஹம்மது கமாலுத்தீன் ஆரணி பாவா ரஹ்மத்துல்லாஹி அலைஹி !!!
மிகப் பெரும் பிரபால்யமான சம்பவம்!!!
மிகப் பெரும் இறைநேசர் ஒருவர் தன் மூரிது மார்களை அழைத்து தான் சிறிது நாளில் வபாத்தாகிவிடுவேன் என்னை இந்த இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என்னை அடக்கம் செய்யும் போது இந்த ஊர்க்காரர்கள் ஜமாத் காரர்கள் என்னை பொது கபர்ஸ்தானில் அடக்கம் செய்ய வேண்டும் என பிரச்சனை செய்வார்கள்.
இந்த பிரச்சனையை சரி செய்ய ஒரு (தலப்பா )வரும் என்று ஒரு ஆலிம் ஆன்மீக பெரியாரை பெயர் சொல்லாமல் குறிப்பிட்டு இவர்கள் இந்த பிரட்சனையை சரி செய்வார்கள் வஸிலா செய்தார்கள்.
அதே போல் அந்த இறைநேசர் சிறிது நாளில் வபாத்தாகிறார்கள் அவர்களின் மூரீதுகள் தன் ஷெய்குவின் வஸிலா படி அவர்களை அவர்கள் சொல்லிய இடத்தில் அடக்கம் செய்யும் பொழுது அந்த ஊர் ஜமாத்தார்கள் இவர்களை பொது கபர்ஸ்தானில் தான் அடக்கம் செய்ய வேண்டும் பிரட்சனை செய்கிறார்கள்.
பெரிய சலசலப்பு எற்பட்டு கொண்டிருக்கிறது இச்சலசல இடையே அந்த கூட்டத்திற்க்குள் ஒரு அமைதி ஆம் அந்த கூட்டத்தில் மிகப்பெரும் இறைநேசர் ஒருவர் வருகிறார்கள் அவர்களை பார்த்தவுடன் அந்த ஊர் ஜமாத்தார்கள் அமைதியாகி விட்டார்கள்.
அந்த இறைநேசர் அங்கு சென்று இவர்களை அடக்கம் செய்யும் இடத்தின் உரிமையாளர் யார்? அவரை அழைத்து இவர்களை இந்த இடத்தில் அடக்கம் செய்யலாமா என அனுமதி கேட்க அந்த மனிதர் இவர்களுக்கு இடம் தராமல் நான் யாருக்கு இடம் தரப்போகிறேன் என்று அந்த இறைநேசரை அடக்கம் செய்ய அந்த மனிதர் அனுமதியளிக்கிறர்கள்.
அந்த ஊர் ஜமாத்தார்கள் அதன் பின் எதுவும் பேசவில்லை அந்த இறைநேசரின் உடல் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்து.
அந்த முன் அறிவிப்பை அறிவித்த தென் தமிழகத்தின் ஞானச்சுடர் இறைநேசர் ஆன்மீக குரு ஹழ்ரத்.காஜா பஷீர் அஹமது(ரஹ்) அண்ணவர்களின் கலீபா இறைநேசர் ஆன்மீக குரு ஹழ்ரத். ஹக்கிம் குலாம் முஹம்மது(ரஹ்) ஆவார்கள்.
அவர்கள் சொன்ன அந்த (தலப்பா) அந்த ஆலிம் பட்டத்தின் அடையாளத்தை குறித்தது ஆம் அவர்கள் குறிப்பிட்ட அந்த தலப்பா தென் தமிழகத்தின் ஞானச்சுடர் ஆன்மீக குரு ஹழ்ரத் காஜா பஷீர் அஹமது (ரஹ்)அண்ணவர்களின் கலீபா இன்றைக்கு உள்ள இமாம்களால் தமிழகத்தின் ஞானக்கடல் என்று அழைக்கபடும் ஆன்மீக குரு இறைநேசர் ஹழ்ரத்.முஹம்மது கமாலுத்தீன் ஆரணி பாவா(ரஹ்) அண்ணவர்கள் ஆவார்கள்.
Comments
Post a Comment