இந்தியாவின் 70 வது குடியரசு தின விழா !!!
70 வது குடியரசு தின விழா இனிதே நடைபெற்றது. தேசியக் கொடி உயர்ந்து, அவிழ்ந்து, பூமாரி பொழிந்து பட்டொளி வீசிப் பறக்கிற போது இந்தியன் என்ற பெருமிதத்தில் எல்லா சிரமங்களையும் கடந்து நெஞ்சு புடைக்கத்தான் செய்கிறது. 1947 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரம் பெற்றோம். மூன்றாண்டுகள் நமது தேசத்தின் அறிவாற்றலும் தியாக உணர்வும் மிக்க நேரு , அம்பேத்கர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் போன்ற மூத்த தலைவர்கள் பாடுபட்டு உருவாக்கிய அரசியல் சாசணம் நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி 26 ம் தேதி. அன்றைய தினம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட குடியரசாக மலர்ந்தது. இங்கிலாந்து அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் அரசியல் சாசணங்களை முன்னோடிகளாக கொண்டு இந்திய அரசியல் சாசணம் உருவாக்கப் பட்டது என்றாலும் உலகில் உள்ள அனைத்து அரசியல் சாசணங்களையும் விட இந்திய அரசியல் சாசணம் பெரியது. குடிமக்களுக்கு அதிக உரிமைகளை தரக் கூடியது. எந்த ஒரு குடுமபமோ அதிகார பீடமோ அரசியல் சாசனத்தை விட உயர்ந்தது அல்ல. இந்தியக் குடியரசு, நாட்டு மக்களுக்கு அதிக உரிமைகளை தந்துள்ளது. இந்தக் குடியரசை காப்பாற்ற மக்கள் செய்ய வேண்டிய முக்க...