Posts

நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் அரபுக் கல்லூரிகள் துவங்கியது!!!

Image
முதஅவ்விதன்!முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த  ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம் ஆகிவிட்டது. மார்க்கக்     கல்வியை தேடிப் பெறுவது  முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை  என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால்,  முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது  குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல், அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட (மக்தப்) அனுப்பாமல்  உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம்  எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, நரகவாதிகளின் குழப்பங்கள் அனாச்சாரங்கள், தீமைகள்,     அதிகமான பிரச்சினைகள்     காணப்படுகிறது. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை     மார்கக்  கல்வியுடன் உலகக் கல்வியையும்     நமது இஸ்லாமிய  பெற்றோர்கள்     தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணியமிகு     ஹாஃபிழ்களாகவும், பட்டதாரிக...

இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்

Image
முதஅவ்விதன்முபஸ்மிலன்முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!  அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!  பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம்  மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை  எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே  நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து, இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும்  அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய  அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும்  இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும், இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த  சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்  சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

ஷஅபான் பிறை 10 முதல் --ஷஅபான் பிறை 28 வரை நடைபெற்ற சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்கள்

முதஅவ்விதன்!முபஸ்மிலன்!!முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   ஆலிம்களின் சிறப்பு பயிற்சி முகாம் 13-06-2012 அன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல்  2 மணி வரை சென்னை-இராயபுரம் போலிஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள,ஜெய் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் கூட்டு துஆ,கழாத் தொழுகை,தராவீஹ் தொழுகை,தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை,தொழுகையில் விரல் அசைத்தல்,தொழுகையில் நெஞ்சின்மீது கை கட்டுதல்,பெருநாளில் திடல் தொழுகை,தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லுதல்,பெருநாள் தொழுகையில் தக்பீர் எண்ணிக்கை,பராஅத் இரவு, மேற்கண்ட தலைப்புகளில் நமது நிலைப்பாட்டிற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன? வஹ்ஹாபிகள் அவர்களின் நிலைப்பாட்டிற்கு எதை சான்றாக காட்டுகிறார்கள்?அவற்றிற்கு நமது தரப்பின் பதில் என்ன? இவைகளை உள்ளடக்கிய புத்தக வடிவிலான ஏடு ஒன்று உலமாப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி MA ஹஜ்ரத் அவர்களால் மிகத் தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.இதி...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு