Posts

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற இமாம் மௌலானா பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன்விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது..!

Image
லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் பயின்ற  மௌலானா இமாம் பஸ்லுல் ஹக் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு பொன் விழா கண்ட சாதனை இமாம் விருது வழங்கப்பட்டது……….!! அது ஒரு வித்தியாசமான செய்தியாகவும்,விழாவாகவும் இருந்தது. ஓர் ஊரில், ஒரு பள்ளிவாசலில்,தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் இமாமாகப் பணியாற்றுவது, இன்றைய சூழ்நிலையில் ஒரு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்த மகத்தான சாதனையைப் படைத்துள்ளார்கள் மௌலானா ஜி.எஸ். பஸ்லுல் ஹக் மன்பயீ  ஹஜ்ரத்   அவர்கள். ஆம்..! கோட்டாறு இளங்கடை பள்ளிவாசலில்அவர்கள் சேவையாற்றத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்கள். அவர்களுடைய இந்தச் சாதனையைப் பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில் பள்ளிவாசல் நிர்வாகமும் உள்ளூர் மக்களும் இணைந்து பொன்விழாவையே கொண்டாடிவிட்டார்கள். விழாவில் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியும் உண்டு. இமாம்களைப் பாராட்டுபவர்கள் பலரும்அவருடைய மார்க்க அறிவு, பேச்சாற்றல், உழைப்பு,தியாகம், அர்பணிப்பு ஆகியவற்றை வாயளவில் பாராட்டிவிட்டுச்சென்றுவிடுவார்கள். "உங்கள் சேவைக்கு மறுமையில் நற்கூலி கிடைக்கும் ஹஜ்ரத்,துஆச் செய்கிறோம

ஹஜ் யாத்திரை-சில சிந்தனைகள் !!!

Image
'சமநிலை சமுதாயம்' அக்டோபர் 2013 இதழில் வெளிவந்த கட்டுரை. ஹஜ் என்றால் "நாடுதல்",உம்ரா என்றால் "தரிசித்தல்"என்று பொருள்.அதாவது இறைவனை நாடிச்சென்று,ஆரம்பமாக அவனது ஆலயத்தை தரிசிப்பது.முடிவில் அவனையே தரிசிப்பது என்பது அதன் உள்ளார்ந்த தத்துவம். நாநிலத்தின் நடுநாயகமாக அமைந்த புனித மக்காவின் ஆதி இறை இல்லம்,உலகின் முதல் இறையில்லம் கஅபாவை நாடி பயணப்படுவதற்குப் பெயர்தான் ஹஜ் யாத்திரை."மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட இல்லங்களில் முதன்மையானது,நிச்சயமாக பக்காவில் இருப்பதுதான்.அது மிகுந்த பாக்கியமுள்ளதாகவும்,உலக மக்களுக்கு நேரான வழி அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கிறது"என்கிறது திருக்குர்ஆன்.1 மக்கா என்பது ஊர் பெயர். பக்கா என்பது மஸ்ஜிதுல் ஹராம் எனும் புனித கஅபா ஆலயம் அமைந்த இடம்.{தப்ஸீர் தப்ரீ}கண்ணியமிக்க கஅபா ஆலயம் இறைவன் கூறுவது போல் பரக்கத்தும்,அருள்வளமும் நிறைந்த புனித இடம்.பரக்கத்-அபிவிருத்தி என்றால்,பொருள் நிறைவாக இருப்பது மட்டுமன்று; குறைந்ததில் நிறைந்த பலன் இருப்பதுமாகும்.இவ்விதம் இறைவனால் பரக்கத் செய்யப்பட்ட மக்கா, ஒரு நீரற்ற பாலைவனப் பிரதே

புனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.!!!

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது. மன நிம்மதி நிறைகிறது. உறவுகள் ஒன்று கூடுகிறது. ஏழைகள் பசியாறுகிறார்கள். பள்ளி, மத்ரஸாக்கள் பயனடைகிறது. இறையருல் இறங்குகிறது. தியாக உணர்வு உயர்கிறது. ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது. கூட்டுறவு மேம்படுகிறது. வறியவர்கள் வளம் பெறுகிறார்கள். அனாதைகள் பலம் பெறுகிறார்கள். முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அளப்பெரும்  அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும்,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் வல் ஜமாஅத்  பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும்,தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி,அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottai sunnathjamath blogspot.com .

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு