Posts

ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனிதம் வாய்ந்த மௌலிது ஷரீஃப் துவக்கம் !!!

Image
வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன்  அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது  ஷரீஃப் இன்ஷா அல்லாஹ் வரும் ரபீவுல் ஆகிர்  பிறை 1- (21-01-2015) புதன் மாலை முதல் தொடங்கி, பிறை 11- 4-1436 (31-01-2015) சனிக்கிழமை வரை 11 நாட்கள், மலேசியத் தலைநகர், நமது மஸ்ஜித் இந்தியாவில்,  கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்  மேலப்பாளையம் S.S.அஹ்மது ஆலிம் ஃபாஜில் பாகவி ஹளரத் மற்றும் துணை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ், எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் ஆகியோரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. அஸர் தொழுகைக்குப்பின் மௌலிது ஷரீஃப்,மஃரிபு தொழுகைக்குப்பின் சிறப்பு துஆ ஓதப்படும்.இது போன்று உலகம் முழுவதும் அனைத்து பள்ளிவாசல்களிலும் ஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் மௌலிது ஷரீஃப் நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம்... வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜ...

பிரபல தொழிலதிபரும்,கல்வியாளரும் சிறந்தமனிதாபிமானியுமான,அல்ஹாஜ் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் அவர்கள் சென்னையில் மறைவு !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கீழக்கரை மேலத்தெருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், கல்வியாளரும் சிறந்தமனிதாபிமானியுமான, அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான் அவர்கள்   (07 -01- 2015) அன்று சென்னையில் உள்ள அவரது   நுங்கம்பாக்கம் இல்லத்தில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை  அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அல்ஹாஜ் பி எஸ் அப்துல் ரஹ்மான்  அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற பொது சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து  தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில்  நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,  உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும்  நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும்  அழகிய பொறுமையை தந்தருளவும்   சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்    பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! உலகெங்கும் வாழு...

சுன்னத் ஜமாஅத் கோட்டையான மலேசியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட வழிகெட்ட பீ.ஜெ யின் கைக்கூலி!

Image
சில வாரங்களுக்கு முன் மலேசியாவில் தடை செய்யப்பட  வழிகெட்ட பீ.ஜெ என்று சொல்லக்கூடிய பீ.ஜெய்னுலாப்தீனின் சகா சுலைமான் என்னும் வஹாபி மலேசியாவுக்குள் நுழைந்து பினாங்கு மாநகரத்தில் வழிகெட்ட கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளான்.  இதை அறிந்த அந்த மாநகர சுன்னத் ஜமாஅத் பெருமக்கள்  போலீசில் புகார் செய்து, இந்த வழிகெட்ட வஹாபியை விரட்டியுள்ளர்கள். இந்த வஹாபியை விரட்ட முயற்சி செய்த அனைவருக்கும்  அல்லாஹ் ரஹ்மத்தும் பரகத்தும் செய்வானாக வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு