புனிதம் நிறைந்த மிஃராஜ் இரவு !!!!
புனிதம் நிறைந்த மிஃராஜ் இரவு
ஜூலை மாதம் 10 ந்தேதி
மிஃராஜ் இரவு கொண்டாட அறிவிப்பு
ராமநாதபுரம் ஜூன் 22.இராமநாதபுர மாவட்ட தமிழ் நாடு அரசு காஜியார், கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா மத்ரஸாவின் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஜ் V V A ஸலாஹுத்தீன் ஆலிம் ஹள்ரத் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் அவர்கள் கூறி இருப்பதாவது, கடந்த 13 ந்தேதி ஹிஜ்ரி 1431 ஜமாத்துல் ஆகிர் பிறை 29 ஞாயிற்றுக் கிழமை அன்று மாலை ரஜப் பிறை தென்பட்டதால், ஆங்கில மாதம் 15 ந்தேதி செவ்வாய்க் கிழமை ரஜப் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப் பட்டுள்ளது.
எனவே அடுத்த மாதம் ஜூலை 10 ந்தேதி
சனிக்கிழமை பின்னேரம், ஞாயிறு இரவு மிஃராஜ் இரவாக கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இன்ஷா அல்லாஹ் வர இருக்கின்ற புனித மிகு மிஃராஜ் இரவில், விழித்து, நோன்பு நோற்று அனைவர்களும் நல் அமல்கள் செய்து ,அல்லாஹ்வின் அன்பையும் திருப் பொருத்தத்தையும் பெற்றுக் கொள்ளும்மாறு, சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளதினர் துஆச் செய்கிறார்கள் வஸ்ஸலாம்.
நன்றி -தினத் தந்தி.
Comments
Post a Comment