பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு துவங்கியது
பனைக்குளம் ஆக-13, ராமநாதபுர மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிறை தெறிந்ததால் ரமலான் நோன்பு நேற்று துவங்கியது, அரபு மாதங்களில் 10-வது மாதமான ரமலான் மாதத்தின் முதல் பிறை நேற்று முன்தினம் இரவு 6-50 மணிக்கு தெறிந்தது.இதையடுத்து தமிழ் நாடு அரசு ராமநாதபுர மாவட்ட டவுன் காஜியார், கீழக்கரை அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் V. V. A. ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அறிவிப்புச் செய்தார்கள். இதன் பிறகு இரவு பனைக்குளத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட
8 பள்ளிவாசல்களில் 20 ரகஅத்துகள் தராவீஹ் தொழுகை நடந்தது. இதே போல் சுற்றுப்புற பகுதிகளான தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, சித்தார்கோட்டை, வாழூர், அத்தியூத்து, புதுவலசை, ஆற்றங்கரை,
பெருங்குளம், வழுதூர், உச்சிப்புளி, புதுமடம், வேதாளை, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகையை முடித்து, குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு, அதிகாலை 4-30 மணிக்கு சஹர் (நோன்பு உணவு) செய்து முதல் நோன்பை துவக்கினர்.

நன்றி- தினகரன்
Comments
Post a Comment