வாழூரில் ஹஜ்ரத் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா
From: Ganimathullah Alim <ganimathullah@rocketmail.com>
பிஸ்மிஹி தஆலா
ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 30- (23-02-2012) ஆம் தேதி
வியாழக்கிழமை அன்று மாலை ரபியுல் ஆகிர் முதல் பிறை தென்பட்டதினால்,
ஆங்கிலமாதம் (24-02-2012) -ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரபியுல் ஆகிர் மாத
முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை
கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வரும்,தமிழ்நாடு
அரசு இராமநாதபுர மாவட்ட காஜியார் அஃப்ழலுல் உலமா மௌலானா மௌலவி
அல்ஹாஜ் V.V.A.ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள்
தெறியப்படுத்தினார்கள். இதன் அடிப்படையில் வாழூர் ஜும்ஆப் பள்ளிவாசல்
மற்றும் சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்களிலும். ரபியுல்
ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள் முஹ்யத்தீன் ஆண்டகை
அவர்களின் மௌலிது ஸரீஃப் சிறப்பாக ஓதப்பட்டு.(05-03-2012) திங்கள்
காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில்
வாழூர் இமாம் மற்றும் சித்தார் கோட்டையின் மூன்று இமாம்களின் தலைமையில்
மதரஸா மதாரிஸுல் அரபியா மாணவர்களால் மௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு,
சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இறுதியில் கந்தூரி விசேச உணவு ,
வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது. வாழும்ஊரில்
(வாழூரில்) பகுதாதில் வாழும் ஞானி ஹஜ்ரத் முஹ்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி
(ரஹ்)அவர்களின் கந்தூரிப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது. இது போன்று
தமிழக முழுவதும், மலேசியா, இலங்கை, மற்றும் உலகமெங்கும் அதிகமான
இடங்களில் ஹஜ்ரத் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா மிகச்சிறப்பாக
நடைபெற்றது, வஸ்ஸலாம். ஆமீன்..
இவண்-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் ஐக்கியப்
பேரவை வாழூர் கிளை
Comments
Post a Comment