ரபியுல் அவ்வல் 5 முதல் ரபியுல் அவ்வல் 20 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

 பிப்ரவரி 9 -ஆம் தேதி நெல்லை பேட்டையில் ரஹ்மானியா பள்ளி வணிக வளாகத்தில் மீலாது விழா நடைபெற்றது.விழாவிற்க்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர், அபுல் பயான், ஷைகுல் ஹதீஸ்,அல்லாமா மௌலானா மௌலவி எ.இ.முஹம்மது அப்துர் ரஹ்மான் ஆலிம் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேலப்பாளையத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி மாபெரும் ஷரீஅத் மாநாடு நடைபெற்றது.மாநாட்டிற்கு நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமாத் தலைவர் மௌலானா மௌலவி அல்லாமா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன்ஆலிம் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவரும்,காயல் பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா எஸ்.எஸ்.கே.கலந்தர் மஸ்த்தான் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.மேலும் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம்.அப்துல் காதிர் ஹஜ்ரத்,நீடூர் அரபுக்கல்லூரிப் பேராசிரியர் மௌலானா எம்.எஸ்.அப்துஸ் ஸலாம் ஹஜ்ரத். மௌலானா மௌலவி என்.ஹாமித் பக்ரி மன்பஈ ஹஜ்ரத்,கோவை கரும்பு கடை ஜூம்ஆப் பள்ளி இமாம் மௌலானா ஏ.அப்துல் அஜீஸ் பாகவி ஹஜ்ரத்,சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா ஏ .அபூதாஹிர் ஆலிம் பாகவி ஹஜ்ரத், ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

புளியங்குடி அம்பா சமுத்திரத்தில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஷரீஅத் மாநாடு மற்றும் மீலாது விழா பேரணி பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற்றது.வீரசோழன் மன்பவுல் ஹைராத் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானாமௌலவி அல்லாமா ஓ.எம்.அப்துல் காதிர் ஆலிம் பாகவி ஹஜ்ரத்,நீடூர் இ.எஸ்.எம்.அபூபக்கர் ஹஜ்ரத்,காயல் பட்டினம் மௌலான மௌலவிஅல்ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரிஆலிம் மன்பஈ ஹஜ்ரத்,சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா அபூத்தாஹீர் ஆலிம் பாகவி ஹஜ்ரத் ஆகியோர் பல் வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்கள்.இதில் ஏராளமான உலமாப் பெருமக்கள் கலந்துகொண்டார்கள்.

மேலப்பாளையத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதி மஜ்லிஸுல் உலமா சார்பில் மாபெரும் ஷரீஅத் விளக்கப் பொதுக்கூட்டம், மௌலானா ஏ.ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.இதில் பெங்களூர் ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஸைபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை யாற்றினார்கள்.இம்மாநாட்டில் அதிகமான உலமாப் பெருமக்கள் கலந்துகொண்டார்கள்,முடிவில்உஸ்மானியா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் பி.எ.ஹாஜா முஹைதீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் நன்றி கூறினார்கள்.

விழுப்புரத்தில் நவாப் வாலாஜா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்றது.தமிழகத்தின் தலைசிறந்த மாமேதை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் முன்னால் முதல்வர் மௌலானா மௌலவி அல்லாமா பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் பள்ளிவாசலை திறந்து வைத்து பேருரை வழங்கினார்கள்.சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரி முதல்வர்.மௌலானா மௌலவி.எம்.அபூதாஹீர் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

ஆனியாங்குப்பம் பி.முட்லூரில் மஸ்ஜிதே முஹம்மத் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெற்றது.இதில் நீடூர் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி.எ.முஹம்மது இஸ்மாயீல் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், காரி,முஃப்தி எ.நூருல் அமீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் குத்பா மற்றும் தொழுகை நடத்தினார்கள்.

வெளியீடு ;-சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு