முஹர்ரம் 25 முதல் ஸஃபர் 25 வரை நடை பெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்


கடைய நல்லூரில் சிராஜும் முனீர் அரபுக் கல்லூரியில் ஜனவரி
1 ஆம் தேதி ஐம்பெரும் விழா, சென்னை வண்டலூர் புஹாரி ஆலிம் 
அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி பி.எஸ்.மஸுது 
ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.இதில் அய்யம்
பேட்டை பி.எம்.ஜியாவுத்தீன் ஹஜ்ரத், நெல்லை மாவட்ட மேற்க்குப்
பகுதி அரசு டவுன் காஜி எ.ஒய். முஹ்யித்தீன் பைஜி ஃபாஜில் ரஷாதி
ஹஜ்ரத், தென்காசி ரப்பானியா அரபுக்கல்லூரி முதல்வர்,ஸம்சுத்தீன்
ஹஜ்ரத்,ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சார்பில்,ஜனவரி 3 ஆம் தேதி 
சென்னை புரசைவாக்கம் தலைமை இமாம் கல்விக் கடல் மௌலானா
மௌலவி கே.எ. நிஜாமுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் நினைவு ஜியாரத்
 (மூன்றாம் நாள் பாத்திஹா) நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சென்னை
 மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைச் செயலாளரும்,சென்னைப் பல்
 கலை கழகத்தின் அரபித்துறைப் பேராசிரியர் டாக்டர், மௌலானா 
மௌலவி வி,எஸ், அன்வர் பாதுஷா உலவி ஹஜ்ரத் அவர்கள் தலைமை
தாங்கினார்கள். சென்னை பெரியமேடு மஸ்ஜிதின் , முன்னால் தலைமை 
இமாமும் தமிழகத்தின் தலைசிறந்த காரீயுமான மௌலானா முஹம்மது
காசிம் போபாலி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.சென்னை மஸ்ஜிதே
மஃமூர் பள்ளி தலைமை இமாம் மௌலானா முஹம்மது இல்யாஸ் காஸிமி
ஹஜ்ரத், சென்னை ஜமாலியா அரபுக்கல்லூரிப் பேராசிரியர் மௌலானா 
அப்துர் ரஹ்மான் பாகவி ஹஜ்ரத் ஆகியோர் மறைந்த ஹஜ்ரத் அவர்களின் 
சிறப்புகளைக்கூறி நினைவுறையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில் 200 -க்கும்
மேற்ப்பட்ட உலமாப்பெருமக்கள்,சென்னையைச் சேர்ந்த ஜமாஅத்தார்கள்
கலந்து கொண்டு, காலை 7 மணி முதல் குர்ஆன் ஷரீஃப் (யாஸின்) ஓதி 
அன்னாரின் மஃபிரத்திற்காக துஆச் செய்தார்கள்.

இந்திய குடியரசின் முன்னால் தலைவர் மரியாதைக்குரிய ஆ.பெ.ஜெ.அப்துல்
கலாம் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் ஜனவரி 9 ஆம் தேதி சென்னை 
வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலை கழகத்தின் முதல் பட்டமளிப்பு
விழாவில் வழங்கப்பட்டது.

கீழக்கரையில் மூன் தொலைக்காட்சி நடத்திய தமிழக அளவிலான 
திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டிணம் அல் ஜாமிஉல் 
அஸ்கர் ஹிஃப்ழு மதரஸா மாணவர் காயல் பட்டிணம் கே.எஸ்.
முஃபிஸுர் ரஹ்மான் முதலிடம் பெற்று ரூபாய் 10000, ரொக்கப்பரிசு, 
கேடயம் பெற்றார். இதில் கீழக்கரை தைக்கா அரூஸியா அறக்கட்டளையின்
மேலாண்மை அறங்காவலர் அஷ்ஷெய்க் அல்ஹாஜ் டாக்டர் தைக்கா 
ஷுஐபு ஆலிம் இராமநாதபுரம் ஷரீஅத் நீதி மன்றத்தின் தலைவர் அல்லாமா
கே.எஸ்.எம்.ஷாஹுல் ஹமீது ஆலிம் ஜமாலி ஆகியோர் முன்னிலை வகித்து 
ஆசியுரை வழங்கினார்கள். துபை இஸ்லாமிய விவகாரத்துறையின் 
துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஒமர் எம் அல்ஹத்தீப் தலைமை
நடுவராகவும், மதரஸா மர்கஸுல் உலூம் முதல்வர் மௌலானா ஹாஃபிழ்
காரி ஏ.அப்ரார் அஹ்மது காஸிமி,மௌலானா ஹாஃபிழ் காரீ சித்தீக் அலி 
பாகவி ஆகியோர் இதர நடுவர்களாக பணியாற்றினார்கள்.இதில் மூன் 
டிவியின் உரிமையாளர்கள், மற்றும் அனைத்துப் பொருப்பாளர்களும், 
தமிழகத்தின் தலைசிறந்த உலமாப் பெருமக்கள் ஏராளமானோர் கலந்து
கொண்டார்கள்.

மெய்நிலை கண்ட தவஞானி ஹள்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் 
ஜீலானி (ரஹ்) அவர்களின் ஞான வழிப்பேரரும் மாதிஹுர் ரஸுல் 
ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா,இமாம் அரூஸ் மகான் மாப்பிள்ளை
லெப்பை ஆலிம் (ரஹ்),கல்வத்து ஆண்டகை (ரஹ்),பல்லாக்கு 
ஒலியுல்லாஹ்,ஷைகு நாயகம் அஹமது அப்துல் காதிர் ஆகியோரின் 
வழித்தோன்றல் டாக்டர் பேரறிஞர் மௌலானா அல்லாமா அல்ஹாஜ் 
தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு,ஜனவரி 11 ஆம் தேதி சென்னைப்
பல் கலை கழகத்தின் அரபி உருது மற்றும் ஃபார்ஸிதுறை சார்பில்,
மாதிஹுர் ரஸூல் ஸதகத்துல்லாஹ் அப்பா விருது ,சென்னையில்
வழங்கப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம்,இராமேஸ்வரம் நகர் மற்றும், வட்டார 
உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகப் பெருமக்கள் கலந்தாய்வு,
ஹஜ்ஜை நிறைவு செய்த ஹாஜிகளுக்கு வரவேற்பு விழா ,இந்த வருடம் 
ஆலிம்,ஹாஃபிழ் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய
முப்பெரும் விழா ஜனவரி 11 ஆம் தேதி பாசிப்பட்டரைத் தெரு ஜும்ஆப் பள்ளியில்
நடைபெற்றது. இதில் இப்ராஹீம் ஹஜ்ரத் மஸ்லஹி தலைமை வகித்தார்கள்.
சித்தார்கோட்டை இமாம் மௌலானா ஹாஃபிழ் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ளரி
கிராஅத் ஓதினார்கள்.மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா
அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத்,மௌலானா அக்பர் அலி ஆலிம் ஜமாலி,
மௌலானா அப்துல் காதிர் நிஜாமி சிராஜி ஹஜ்ரத் ஆகியோர் வாழ்த்துரை மற்றும்
சிறப்புரையாற்றினார்கள்.ஹாஜியாரப்பா பள்ளி இமாம், மௌலானா மௌலவி 
அப்துல் அலி ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் துஆ ஓதினார்கள்.


திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயிஷா-நூருல் ஹுதா பள்ளிவாசல் திறப்பு 
விழாவில் மௌலானா பி.எம்.ஜியாவுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமை 
தாங்கினார்கள்.காயல் பட்டினம் ஹ்ழரா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா 
மௌலவி அல்ஹாஜ் எஸ்.எஸ்.கே.கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத் 
அவர்கள்,பள்ளியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். தூத்துக்குடி மன்பவுஸ்
ஸலாஹ் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா இம்தாதுல்லாஹ் பாகவி ஹஜ்ரத்
அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.திண்டுக்கல் ஹலீபத்துல் காதிரியா சிஷ்திய்யா
மௌலானா எஸ்.எம். முஹம்மது அலி மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் ஜும்ஆ பயான்,
குத்பா பேருரை மற்றும் தொழுகை நடத்தினார்கள்.
  
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்


Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு