புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ் !!!



முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா !!

வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ்  இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 05--06-2013  புதன் மாலை  -- வியாழன் இரவு  
( ரஜப் பிறை 27-- 1434 ) அன்று மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.என்பதை, 
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல்  இஷாத் தொழுகைக்குப் பின்  சிறப்பு பயான் -- திக்ர் மஜ்லிஸ் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா, அவர்களது  சீரிய தலைமையில் நடைபெறும்.இது போன்று மலேசியாவில் உள்ள நூற்றுக் கணக்கான மதரஸாக்களிலும்,மற்றும் உலகம் முழுவதும் அனைத்து பள்ளி வாசல்களிலும்,புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ் நடைபெறும்.மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுங்கள்.வஸ்ஸலாம்....





வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

தராவீஹ் தொழுகையின் துஆ-Taraweeh Prayer Dua

தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு