Posts

Showing posts from August, 2013

சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி 11 -ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐந்தாவது ''மௌலவி'' ஆலிம் பட்டமளிப்பு விழா !!!

Image
ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24 ( 01-09-2013) ஞாயிற்றுக்கிழமை,நேரம் காலை 9-00 மணியளவில் நிகழ்விடம் ;- அல்லாமா அமானி ஹஜ்ரத் ( ரஹ் ) அவர்களின் நினைவரங்கம். தலைமை ;-  சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர் ஜனாப் M.தீனுல்லாஹ் கான் அவர்கள் முன்னிலை வகிப்பவர்கள் ;- வள்ளல் அல்ஹாஜ் S.தஸ்தகீர் அவர்கள். அல்ஹாஜ் S.M.கமருல் ஜமான் A.E.A.A.(Lon)அவர்கள். ஜனாப் S.ஆரிஃப்கான் அவர்கள். அல்ஹாஜ் வள்ளல் A.முஹம்மது யூசுப் அவர்கள். வாழூர் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் E.காதர் அவர்கள். இராமநாதபுர  மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜனாப் A.R.துல்கீப் அவர்கள். ஜனாப் S.T.ஷாஜஹான் அவர்கள் (புருனை) சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் H.அஹ்மது இப்றாஹீம் (வட்டம்) அவர்கள். அல்ஹாஜ் M. ஹிதாயத்துல்லாஹ் அவர்கள். உறுப்பினர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி. அல்ஹாஜ் A.பாரூக் ஜீலானி  அவர்கள். உறுப்பினர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி. நிகழ்ச்சி தொகுப்பு ;- பேராசிரியர்.ஜனாப் S.முஹம்...

நினைவு நாள் அழைப்பிதழ் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!! பனைக்குளம்.மெய்ஞான மாமேதை,மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி அல்ஹாஜ், அல்லாமா,மலிகுல் உலமா,அஷ்ஷெய்குல் காமில், குத்புஸ்ஜமான், மஸீகுல் அனாம்,ஆரிபு பில்லாஹ், ஷெய்குணா, செய்யிதி, மாமஹான் பாபா,செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின்,47- ஆம் ஆண்டு நினைவு நாள் விழா, நாள்  ( 31-08-2013 ) சனி,பின்னேரம்.ஞாயிறு இரவு 7-00 மணிக்கு தர்ஹா ஷரீஃபில் அன்னார் பெயரில் குர்ஆன் கானி செய்யப்பட்டு  ஜீரணி வழங்கப்படும்.அது சமயம் கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும்,பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்துகொண்டு துஆச்செய்ய இருக்கின்றார்கள்.அனைவரும் சிறப்பான இந்த மஜ்லிஸிற்கு வருகை தந்து சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு நல்லாசி பெற்று உங்கள் வாழ்விலும், தொழிலிலும்,சிறப்புப் பெற்று,மனம் நிறைந்த நோய் நொடி இல்லாத நல் வாழ்வு வாழ அன்புடன் அழைகின்றோம். இப்படிக்கு. மௌலானா M. செய்யிது முஹம்மது ஆலிம் மன்பயீ.                  ...

சித்தார்கோட்டை மர்ஹூம் ஃபாத்திமா பீவி மகளிர் அரபுக் கல்லூரியின் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் !!!

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி 1434-ஆம் ஆண்டு  ஷஅபான் பிறை 17-  ( 27-06-2013 )  ஞாயிறு மாலை, திங்கள் இரவு  7-00 மணியளவில் மஃரிபு தொழுகைக்குப்  பிறகு,  முஹம்மதியா  மேல் நிலைப்பள்ளி விளையாட்டு அரங்கில், 18- வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அவ்வமயம் உலமாப்  பெருமக்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி நிரல் ;- தலைமை ;- ஜனாப் தீனுல்லாஹ் கான் அவர்கள். தலைவர்- முஸ்லிம் தர்மபரிபாலன சபா அல்ஹாஜ் வள்ளல் சீ. தஸ்தகீர் அவர்கள். தலைவர்-  முஹம்மதியா  பள்ளிகள் அல்ஹாஜ் S.M.கமருஜமான் AE.A.A (Lon) அவர்கள். புரவலர் –முஹம்மதியா பள்ளிகள். ஜனாப் ஆரிப்கான் அவர்கள் புரவலர்- முஹம்மதியா பள்ளிகள். சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் வட்டம் M.அஹ்மது இபுராஹீம் அவர்கள். அல்ஹாஜ், பேராசிரியர் P.A.S அப்பாஸ் அவர்கள். தாளாலர் முஹம்மதியா மேல் நிலைப் பள்ளி. வரவேற்புரை ;- ஜனாப் A.பக்கீர் நெய்னா முஹம்மது Bsc.அவர்கள். ...

புனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள்.  மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகுஆலிம்களாகவும், கண்ணியமிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள். ...

இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Image
முதஅவ்விதன்!!முபஸ்மிலன்!!!முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே! பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம் செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது போட்டி: முதல் பரிசை தட்டிச் சென்ற சவுதி அரேபிய இளைஞர்

Image
துபாய்: துபாயில் ரமலான் மாதம் 1 முதல் 20 தேதி வரை 17வது ஆண்டாக நடைபெற்ற சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டியில் சவுதி அரேபியாவின் ஆதில் முஹம்மது அல் கெய்ர் முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இதனை ஷேக் மக்தூம் பின் முஹம்மது வழங்கினார். இரண்டாம் இடத்தை பெற்ற சாட் நாட்டைச் சேர்ந்த அல்ஹாஜ் மஹம்மத் டிஜிட்டா 200,000 திர்ஹம் பரிசையும், மூன்றாம் இடத்தை பிடித்த லிபியாவின் அப்துல் பாரி ஆர் அலி பிசுப்சு 150,000 திர்ஹம் பரிசுத் தொகையையும் பெற்றனர்.  அதனைத் தொடர்ந்து பெல்லோ அமதா மஹ்மத் (நைஜீரியா), உமர் முஹம்மது ஆதம் கோட் (சூடான்), ஜமாலுதீன் எல் கிக்கி (ஆஸ்திரேலியா), சையத் அலி உமர் பல்கதிஷ் அல் ஜாபரி (ஐக்கிய அரபு அமீரகம்), அஹமது அலி தாஹா (லெபனான்), அப்துல்லா அரிபி (அல்ஜீரியா), பட்டேல் வசில் (பிரான்ஸ்) ஆகியோர் நான்கு முதல் 10 இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு 65 ஆயிரம் திர்ஹத்திலிருந்து ஒவ்வொரு தரத்திற்கும் ஐயாயிரம் குறைத்து 35,000 திர்ஹம் வரை வழங்கப்பட்டது. மிகவும் அழகான முறையில் கிராஅத் ஓதிய ஐவருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.  ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு