பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் எம்.எஸ்.முஹம்மது தம்பி மறைவு !
பிரபல இஸ்லாமிய எழுத்தாளரும்,பன்னூலாசிரியருமான எம்.எஸ். முஹம்மது தம்பி, அவர்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அன்று மறைவுற்றார். அவருக்கு வயது 79, சில நாட்களாகவே உடல் நலம் குன்றியிருந்த அவர், மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மறுநாள் அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
தமிழ்,மலையாளம்,உர்து,ஃபார்ஸி,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஆழ்ந்த புலமைமிக்கவர்.அவர் எழுதிய கலீஃபாக்கல் வரலாறு,மதீனாவின் அன்ஸார்,நாயகத் தோழர்கள், இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்,மரணத்தின் மடியில் மாநபியின் தோழர்கள்,
அஷரத்துல் முபஷ்ஷரா,ஹழ்ரத் அபூஹுரைரா,அருளிறங்கும் பருவ காலம்
முதலான நூல்கள் வாசகர்களால் மறக்க முடியாத நூல்களாகும்.
தமிழின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் தீராத தாக்கம் கொண்டிருந்த
அவருக்கு,இஸ்லாமிய இலக்கிய மேதைகளான
சையது முஹம்மது ' ஹஸன்', எம் ஆர்.எம் அப்துற் றஹீம்,மற்றும்
சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது சாஹிப் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. குறிப்பாக எம்.ஆர்.எம். அவர்களுடனான நட்பு இவரை எழுத்துத் துறையின் பால் ஈர்த்தது
அண்மையில் மறைந்த மார்க்க அறிஞர்
எஸ்.எம். ரஃபீஉத்தீன் பாக்கவி ஹஜ்ரத்.இவரது மருமகன் ஆவார்.
அன்னாரை இழந்து துயருறும் அவர் தம் குடும்பத்தார்,
பிள்ளைகள் அனைவருக்கும் பத்திரிகை சார்பிலும்,
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்
இணைய தளத்தின் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பிழைகளைப் பொறுத்து, மறுமையில்
ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த அந்தஸ்தை அளிப்பானாக ஆமீன்.
நன்றி ;- சமநிலைச் சமுதாயம் மாத இதழ்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
Comments
Post a Comment