தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில செயற்குழு கூட்டம்
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!
மாநில பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் மௌலானா தேங்கை மு.ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் அனைவரையும்,வரவேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார்கள்.மேலப்பாளையம் சைய்யிது அஹமது இன்ஜினியர் அவர்கள் மதுரையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய தலைமையகத்தைப் பற்றி விளக்கமாக தெளிவுபடுத்தி பேசினார்கள்.
மௌலானா சுல்தான் ஹழ்ரத் அவர்கள் மாநில தேர்தல் எவ்வாறுநடத்தப்படவேண்டும் என்பதை மிக விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.தொடர்ந்து மாவட்ட பொருப்பாளர்கள் தங்களின் கருத்துகளை கூறினார்கள்.இறுதியில் சபையின் தலைவர் அவர்கள் எதிர்வரும் மாநில தேர்தல் சேலத்தில் நடத்துவது எனவும்,அதற்காக,மௌலானா அபூதாஹீர் பாக்கவி ஹழ்ரத் அவர்களது தலைமையில்,நெல்லை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ ஆலோசகர் மௌலானா B.A.K.அப்துர் ரஹீம் ஹழ்ரத் உட்பட 11 உலமாக்கள் கொண்ட தேர்தல் குழுவை அறிவித்தார்கள்.
மேற்படி கூட்டத்திற்கு நெல்லை மாவட்டத்திலிருந்து நெல்லை மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ ஆலோசகர் மௌலானா B.A.K.அப்துர் ரஹீம் ஹழ்ரத் அவர்கள் தலைமையில்,நெல்லை மாநகர தலைவரும்,மாவட்ட அரசு காஜியுமான மௌலானா K.முஹம்மது கஸ்ஸாலி ஹழ்ரத்,மாநகர இணைச்செயலாளர் மௌலானா F.ஜமால் முஹம்மது ஹழ்ரத் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.இறுதியில் சேலம் மதரஸா மழாஹிருல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா அனீஸ்கான் ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.அல்ஹம்துலில்லாஹ். வஸ்ஸலாம்...
நன்றி ;- அல் மதீனா மாத இதழ்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
Comments
Post a Comment