Posts

Showing posts from June, 2014

நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக!

Image
27 -06 -2014  வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- நோன்பு வைத்தியத்துக்காக அல்ல..வணக்கத்திற்காக! குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர் , மலேசியா. நோன்பு நோற்றால் உலகாதாயங்களும் உடல் ஆரோக்கியமும் உண்டு. ஆனால் அதுவே பிரதான நோக்கமல்ல... இறை அச்சமும் இறை வணக்கமும்தான்  அசல் நோக்கமாக இருக்கவேண்டும் .இம்மையை விட மறுமையே மனதில் கொண்டு நோன்பு நோற்றால் மறுமையும் கிடைக்கும்; இம்மையும் கிடைக்கும்.

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting

Image
நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள். 01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள். 02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும். 03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும். 04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும். 05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள். ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும். களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது ச...

ஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers பெருநாள் தொழுகை (ஹனபி)

Image
ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும். ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும். பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும். ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது. தொழுகை முறை: ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு. முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கி...

பத்ரு ஸஹாபாக்களின் திருநாமங்கள் - Ashabul Badriyeen-

Image
அஸ்மாவுல் பத்ரிய்யீன் துஆ பத்ருப் பெரும்போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று. சொர்க்கத்து மாமலர்களான அந்த சுந்தர சஹாபாக்கள் செய்த தியாகம் சாதாரணமானதல்ல. நிகரற்றது. ஈடு இணையற்றது. அந்த அறப்போரில் கலந்து கொண்ட அந்த ஸஹாபிகளின் தியாக ரத்தத்தால் இந்த சன்மார்க்கம் உரம் பெற்றது. உயிர் பெற்றது. அந்த உன்னத ஸஹாபாப் பெருமக்களின் திருநாமங்கள் பலரின் விலாயத்துக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. பல பெருமக்களின் ஆன்மீக பலத்துக்கும் பக்குவத்திற்கும் பக்க துணையாக இருந்திருக்கின்றன. அந்தப் புனித திருநாமங்களைக் கொண்ட இந்த துஆ சிறப்பான ஒன்று. இது கேரளத்திலும் தமிழகத்திலும் அறியப்பட்ட பிரபலமான இஸ்லாமிய கலைஞானக் கடலாக விளங்கியவரும் ஆன்மீகப் பெருமேதையுமான மகான் ஷிஹாபுத்தீன் அபுஸ்ஸஆதாத் அஹ்மத் கோயா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும். ஹிஜ்ரி 1302 ஜமாஅத்துல் ஆகிர் பிறை 22ல் பிறந்த இம்மகானவர்கள், ஹிஜ்ரி 1374 முஹர்ரம் பிறை 24ல் வபாத்தாகி, கோழிக்கோடுக்கு அருகில் உள்ள சாலியம் என்னும் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இம்மகானவர்கள் அரபியில...

தராவீஹ் தொழுகையின் துஆ-Taraweeh Prayer Dua

Image
اَللّٰهُمَّ    صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَعَلٰى اٰلِ مُحَمَّدٍ٭ اَللّٰهُمَّ اجْعَلْنَا بِالْاِيْمَانِ كَامِلِيْنَ وَلِفَرَائِضِكَ مُؤَدِّيْنَ وَلِلصَّلٰوةِ حَافِظِيْنَ، وَلِلزَّكٰوةِ فَاعِلِيْنَ ، وَلِمَا عِنْدَكَ طَالِبِيْنَ ، وَلِعَفْوِكَ رَاجِيْنَ ، وَبِالْهُدٰى مُتَمَسِّكِيْنَ ، وَعَنِ اللَّغْوِ مُغْرِضِيْنَ، وَفِي الدُّنْيَا زَاهِدِيْنَ ، وَفِى الْاٰخِرَةِ رَاغِيْنَ ، وَبِالْقَضَآءِ رَاضِيْنَ وَلِنِّعْمَاءِ شَاكِرِيْنَ ، وَعَلىَ الْبَلَآءِ صَابِرِيْنَ، وَتَحْتَ لِوَآءِ حَبِيْبِكَ وَنَبِيِّكَ وَصَفِيِّكَ وَرَسُوْلِكَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْقِيٰمَةِ لاَئِذِيْنَ ، وَاِلَى الْحَوْضِ وَارِدِيْنَ ، وَمِنْ سُنْدُسٍ وَاٍسْتَبْرَقٍ مُتَلاَبِسِيْنَ ، وَمِنْ طَعَامِ الْجَنَّةِ اٰكِلِيْنَ ، وَمِنْ لَبَنٍ وَعَسَلٍ مُصَفًّى شَارِبِيْنَ ، بِاَكْوَابِ وَاَبَارِيْقَ وَكَأْسٍ مِنْ مَعِيْنٍ مَعَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصَّالِحِيْنَ ٭ اَللّٰهُمَّ  اَجْعَلْنَا فِى هَذٰالشَّهْرِ الش...

இருபது ரக்அத் தராவீஹ் தொழுகை பற்றிய விதண்டாவாதங்களுக்கு விபரமான பதில்கள் -Evidance of 20 Rakath Taraweeh Prayer

Image
முஸ்லிம்கள் நோன்பு காலத்தில் அமல்கள் அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெறுகிறார்கள். இந்த அமல்களில் குறைவுகளை உண்டாக்கவும், சோம்பேறித்தனத்தை ஏற்படுத்தி அல்லாஹ்வின் நெருக்கத்தை விட்டும் தடுத்திடவும் சிலர் இஸ்லாமியர்கள் என்ற போர்வையில் சில காலங்களுக்கு முன்பு நமது தமிழகத்தில் தோன்றினர். அவர்களின் கூற்றுக்கள் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளுக்கும், ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபியீன்கள், இமாம்கள் மற்றும் நம் முன்னோர்களான மகான்களின் நடைமுறைகளுக்கும் மாற்றமாக இருந்தது. அதில் அவர்கள் மக்கள்களின் அமல்களை குறைத்து மக்களை ஷைத்தானிய பாதையில் அழைத்துச் செல்ல முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியில் ஒரு பிரிவாக ரமலான் மாதத்தில் கூடிய பலன்களைத் தரும் இருபது ரக்அத்துகளைக் கொண்ட தராவீஹ் எனும் தொழுகையின் எண்ணிக்கையினைக் குறைத்து தராவீஹ் எட்டே ரக்அத்துகள்தான் என்று வாதம் செய்தனர். இந்த வாதங்களை யார் முதலில் உருவாக்கினார் என்று வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது வஹ்ஹாபிய சித்தாந்தத்தை கடைப்பிடித்து தனது கோட்பாடுகளை அதன்படி வளர்த்துக் கொண்ட முஹம்மது நாஸிருத்தீன்...

நோன்பின் மாண்புகளும், சிறப்புகளும்.

Image
அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம். ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183) அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்: شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ 'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)  'ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்'. (அல்குர்ஆன் 2 : 185) உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு