உடையநாடு பெண்கள் அரபுக் கல்லூரி, மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தஞ்சை மாவட்டம், பேராவூரணி, உடையநாடு என்ற ஊரில் பெண்கள் அரபுக் கல்லூரி. மதரஸா அஜீஸிய்யா அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இராமநாதபுர மாவட்டம்,சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் நிறுவனர், மலேசியா மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா I.சைய்யது முகம்மது புகாரி ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் அடிக்கல் நாட்டி தலைமையேற்றார்கள்.

நிகழ்ச்சியில் மௌலானா அகமதுஷா, ஏர்வாடி மௌலானா இப்ராஹிம் ஜமாலி, காளிக்காவிளை இமாம் போன்றோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் சென்னை அஸ்ஸாதிக், சாகுல் ஹமீது, தலைமை ஆசிரியர் குலாம் கனி, உள்ளூர் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
மதரஸாவிற்கு இடம் வழங்கியதுடன் கட்டிடத்தையும் தானே கட்டித் தருவதாக மலேசிய தொழிலதிபர்,அல்ஹாஜ் டத்தோ அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் அவர்களின் மகன்களான ஜனாப் ரஜாலுத்தீன், ஜனாப் ஷிஹாபுத்தீன் வாக்களித்து கட்டிடத்தை துவக்கி வைத்தனர். வஸ்ஸலாம்.
நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்.
வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
நன்றி ;--லால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம்.
வெளியீடு ;-- மன்பஈ ஆலிம் .காம்.
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
Comments
Post a Comment