ஜோதிடத்தைப் பொய்யாக்கிய P.B.ஸ்ரீனிவாஸ்
ஒரு மனிதன் எதிர் காலத்தை முழுமையாகவும் விரிவாகவும் ஜாதகத்தால் சரியாக கணித்துச் சொல்ல முடியாது என்பதற்கு இன்னுமொரு நிஜ உதாரணம் பிரபல பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ்.
என்றும் தங்களன்புள்ள.
இவர் பாடினார்.திரைத்துறையில் பிரபலமாகி இன்றும் இசை ரசிகர்களின் நெஞ்சம் மறக்காதவராக நெகில வைத்துக் கொண்டிருக் கிறார்.ஆனால் அவரைப்பற்றி ஆரம்பத்தில் ஜோதிடம் சொன்னது என்னவென்று தெரியுமா ? இந்தப் பையனின் ஜாதகப்படி சினிமா வாய்ப்பே இவனுக்கு இல்லை என்று தான் ஜோதிடர் சொன்னார்.இவர் பாடுவதில் ஆர்வமாகி பித்தாகிப் போன போது ஒரு ஜோதிடரிடம் அழைத்துக் கொண்டு போனார் அவருடைய அப்பா.
“பையன் பாடுகிறான்.சினிமா பக்கம் போகணும்னு சொல்றான்.அதுக்கு இவன் ஜாதகத்தில் வாய்ப்பிருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க”
அவருக்கு முன்னால் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த
ஸ்ரீனிவாஸைப் பார்த்து ஜோதிடர் சொன்னார் ;
ஸ்ரீனிவாஸைப் பார்த்து ஜோதிடர் சொன்னார் ;
“பையன் சினிமா பக்கம் போகவே வாய்ப்பில்லை.
ஜாதகம் அப்படித்தான் சொல்றது”.
ஜாதகம் அப்படித்தான் சொல்றது”.
எதிரே பெருங்கனவுடன் காத்திருந்த ஸ்ரீனிவாஸுக்கு
கோபம் வந்து விட்டது.
கோபம் வந்து விட்டது.
நீங்க சொல்றது எல்லாம் நடக்குமா ?
“சிலது நடக்கலாம்.சிலது நடக்காமலும் போகலாம்”.
“அப்போ நான் சினிமாவுக்குள் நுழைய முடியாதுன்னு
நீங்க சொல்றதும் நடக்காமல் போகலாம் இல்லையா ?”
நீங்க சொல்றதும் நடக்காமல் போகலாம் இல்லையா ?”
[குமுதம் 22-10-2014]
ஜோதிடம் உண்மையானது அல்ல என்பது ஜோதிடர்களுக்கே தெரியும் என்பதையும் மேற்படி ஜோதிடரின் வாக்குமூலம் மெய்ப்பிக்கிறது.
P.B.ஸ்ரீனிவாஸிடம் ஜோதிடர் சொன்னது நடக்காமல் தான் போனது – ஜோதிடத்தைப் பொய்யாக்கி அவர் திரைத்துறையில் ஜெயக்கொடி நாட்டினார்.அவர் ஜோதிடத்தை நம்பாமல் இருந்ததால் வரலாற்றில் ஜொலித்தார்.அவர் மட்டும் நம்பியிருந்தால் முடமாகியிருப்பார் இல்லையா?.
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா
எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment