சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1489 வது மீலாது விழா!!!
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!
வமுஸல்லிமா !!!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர
நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு
தினங்களும் பயான் செய்யப்படும்,
ஆகவே இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்களில் முஃமினான ஆண்கள்.பெண்கள் அனைவர்களும்,தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறும்,மேலும் பெருமானாரின் 1489 வது பிறந்த நாள் வாழ்த்துக்களைக்கூறி,சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினரும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்களும் அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்.
Comments
Post a Comment