Posts

Showing posts from March, 2015

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களைப் பற்றி இஸ்லாமியப் பாடகர் இராமநாதபுரம் மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனித நாகூர் ஓர் ஆய்வு !!!

Image
புனித நாகூரைப்பற்றி !!! நாகூர்  ;- இப்பெயருடன் கூடிய, ஊர் தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் உள்ளது.இங்கு முற்காலத்தில் நாகமரம்,  ( புன்னை மரம் ) அடர்ந்து வளர்ந்திருந்ததின் காரணமாக,நாகப்பூர்  என ஆகிப் பின்னர் நாகூர் என்று மறுவிற்று என்று கூறுவர். இவ்வூரில் அல் குத்புல் மஜீது ஷாஹுல் ஹமீது பாதுஷா  நாயகம் அவர்கள் வந்து 28 ஆண்டுகள் தங்கியிருந்து,சன்மார்க்க சேவை செய்து,அடங்கப்பெற்றிருப்பதின் காரணமாக,இவ்வூர்  தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது.நாள்தோறும்,இவர்களின் அடக்கவிடத்திற்கு,மக்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டுள்ளனர். ஆண்டு தோறும் நிகழ்வுறும் இவர்களின் நினைவுநாள்  விழாவிற்கு,மக்கள் நாலா பக்கங்களிலிருந்தும்,வந்து குழுமுகின்றனர். புலவர் கோட்டை என்று  பெயர் பெற்ற இவ்வூர்,பல தமிழ் புலவர்களை ஈன்றெடுத்திருக்கிறது.குலாம் காதிறு நாவலரும்,அவரின் மகன் ஆரிஃபு நாவலரும்,இவ்வூரைச் சேர்ந்தவர்களே.சீரியர் செவத்த மரைக்காயர் என்ற புலவரும்,இவ்வூரில் தோன்றியவரே. இன் னும் சில புலவர்களும் இவ்வூரில் தோன்றி வாழ்ந்துள்ளனர்.இவ்வூரில் ஏழு பள...

வானவியல் வல்லுநர் அல்ஃபலக்கி, கட்டுமாவடி,மௌலானா மௌலவி M.K.M.கதீப் ஷாஹிப் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் மறைவு !!!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார்கோட்டை,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி,சித்தார்கோட்டை பாத்திமா பீவி பெண்கள் அரபுக் கல்லூரி,மற்றும் தொண்டி,அஜ்ஹாரிய்யா அரபுக் கல்லூரி ஆகியவைகளின் முன்னால் முதல்வரும்,மதுரை ஓத்தகடை நாஃபிஉல் உலூம் மத்ரஸா உஸ்தாத், வானவியல் வல்லுநர் அல்ஃபலக்கி, கட்டுமாவடி,மௌலானா மௌலவி M.K.M.கதீப் ஷாஹிப் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பயீ அவர்கள்,29/03/2015 அன்று காலை 12 மணி அளவில், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கி...

சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின் 13 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாவது மௌலவி ஆலிம் பட்டமளிப்பு பெருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Image
சித்தார் கோட்டை,சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின்  13 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாவது  மௌலவி ஆலிம் பட்டமளிப்பு பெருவிழா  22-03-2015 ஞாயிற்றுக் கிழமை,சித்தார்கோட்டை, மௌலானா மௌலவி அல்லாமா, நெய்னார் முஹம்மது  லெப்பை ஹஜ்ரத் கிப்லா  அவர்களின்,நினைவு  அரங்கத்தில் மிகச்சிறப்பாக  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.பட்டமளிப்புப் பெருவிழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டனர். சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின், புதிய கட்டிடம்  டத்தோ அல்ஹாஜ் அமீர் அலி அவர்களால்  முதல் நாள் 21-03-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின், திறக்கப்பட்டு, ராத்தீபு ஜலாலியா நிகழ்ச்சியும், மிகச்சிறப்பாக நடைபெற்றது ,   சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின், புதிய கட்டிடம்  திறப்புவிழா  மற்றும் ராத்திபத்துல் ஜலாலிய்யா மஜ்லிஸின் புகைப்படங்கள்.    சித்தார் கோட்டை,சித்தாரிய்யா அரபுக் கல்லூரியின்  13 ஆம் ஆண்டு நிறைவு விழா, மற்றும் ஆறாவது  மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழாவில்,  திருச்சி மௌலானா ...

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் THE NAGOR SAINTS !!!

Image
நமது நாயகம்  நாகூர் அல் குத்துபுல் மஜீத்  ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்கள்  மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்  NAGOR SESSIO NS - THE SAINT வெளியீடு மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் ஷரீஃப் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல் !!!!

Image
THE NAGOR SAINTS !!!! வெளியீடு மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள் !!!

Image
கடலோரம் வாழும் காதிர் மீரான் உம்வாசல்தேடி  வந்தோம் சாஹே மீரா உம்மை ஒருபோதும் நான் மற்வேன் நமணை விரட்ட                                                                                      கருனை கடலாம் காதிர் வலியின் வெளியீடு மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!! வரலாற்று சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு நடைபெற்று வரும் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு, இன்ஷா அல்லாஹ் 21 -03 -2015 சனிக்கிழமை மாலை,ஞாயிறு இரவு  ( ஜமாதுல் ஆகிர் பிறை 1- 1436 ) மிக விமர்சையாக ஆரம்பமாக இருக்கிறது என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்  மௌலிது ஷரீஃப் 30-03-2015 (ஜமாதுல் ஆகிர்  பிறை 10-1436 ) திங்கட் கிழமையோடு நிறைவு பெறும். ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப் பின் மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்களின் சீரிய தலைமையில் நடைபெறும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்...

நமது நாயகம் நாகூர் குத்துபு ஷாஹுல் ஹமீது வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து தமிழ் மொழியில் !!!!

Image
                                               யாஸய்யிதீ ஷைகீ பைத்து இது  நமது நாயகம் நாகூர் குத்துபு  ஷாஹுல் ஹமீது  வலி அவர்கள் மீது கீழக்கரை மாதிஹுர் ரஸூல் இமாம் ஷைகு ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் புகழ்ந்து பாடிய பைத்து என்தலைவரே! என்குருநாதரே! தலைவர்களுக்கெல்லாம்  தலைவரே! கல்விகளின் புதையலே!அற்புத ஞானக் கலையின் சின்னமே! சர்வ வல்லமையும், சிறப்பும் வாய்ந்த இறைவனின் திருப்திக்குள்ளானவரே! தலைவர்களுக் கெல்லாம் தலைவரே! அப்துல் காதிரே! கைசேதப்படுபவர்களுக்கும்,கலங்கிய உள்ளம் உடையவர்களுக்கும்,பாதுகாப்பளிக்கும் அடைக்கலமே! தங்களை நாடி வருபவர்களின் நாட்டத்திற்குப் பிணையேற்று,உடலாலும்,பொருளாலும்,பலஹீன மடைந்தவர்களுக்கு ஒதுங்கும் பீடமே!! சமுத்திரத்தில் வழி தவறிச் சென்றவர்களுக்கு உதவி புரியும் ரட்சகரே! தலைவர்களுக்கெல்லாம் தலைவரான அப்துல் காதிரே! தங்களிடமிருந்து எத்தனையோ அற்புதங்கள் பார்ப்பவர்களுக்குத் தென்பட்டன.தங்கள் சமூகத்தில் நடைமுறைக்கு ...

நாகூர் நாயகம் அவர்கள் மீது சதக்கத்துல்லாஹ் காஹிரி அவர்கள் பாடிய பைத் !!!!

Image
قَصِيْدَة رَائِيَّة فِي كَنْجَ سَوَائِيَّة قَصِيْدَة رَائِيَّة فِي كَنْجَ سَوَائِيَّة مَادِحُ الرَّسُوْلِ شَيْخُ صَدَقَةُ اللهِ رَحِمَهُ اللهِ عَلَيْهِ يَاسَيِّدِيْ شَيْخِيْ وَصَدْرَ الصَّادِرِ كَنْزَالْعُلُوْمِ وَرَمْزَ عِلْمٍ نَادِرٍ مَرْضِيَّ مَوْلَاهُ الْكَرِيْمِ الْقَادِرِ يَاسَيِّدَ السَّادَاتِ عَبْدَ الْقَادِرِ كَهْفَ اللَّهِيْفِ اَمَانَ قَلْبٍ حَاذِرٍ مَأْوَي الضَّعِيْفِ ضَمَانَ قَصْدِ النَّاذِرِ غَوْثَ الَّذِيْ فِى الْبَحْرِ كَانَ كَعَاثِرٍ يَاسَيِّدَ السَّادَاتِ عَبْدَ الْقَادِرِ كَمْ مِّنْ كَرَامَاتٍ بَدَتْ لِلنَّاظِرِ وَخَوَارِقِ الْعَادَاتِ عِنْدَ الْحَاضِرِ وَحُلٰى كَمَالَاتٍ بِوَجْهٍ نَّاضِرٍ لَكَ سَيِّدِيْ يَاشَيْخُ عَبْدَ الْقَادِرِ مِنْ صُلْبِ نَسْلِ رَسُوْلِ رَبٍّ قَادِرٍ مِنْ نَهْجِ مُحْيِى الدِّيْنِ عَبْدِ الْقَادِرِ غَوْثِ الْمَشَائِخِ نُوْرِ بَدْرٍ بَادِرٍ يَاطَيِّبًا بِالذَّاتِ عَبْدَ الْقَادِر جَاهَدْتَّ فِى اللهِ الْمُعِيْنِ الْفَاطِرِ بِالْبَاطِنِ الصَّافِيْ وَحُسْنِ الْخَاطِر...

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் புனித வரலாறு வீடியோ !!!

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களின் வரலாறு !!!!!

Image
அறிமுகம் மாபெரும் தவசீலர், சங்கைக்குரிய குதுபு, ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்களால் போற்றிக் கொண்டாப்படும் ஒரு உன்னத மகான் ஆவார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும், கண்ணியமும் வைத்து அவர்களை போற்றுகிறார்கள். இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் அருட்கொடை எனலாம்.நாகூர், இந்த பெயரை கேட்டவுடன் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்த மகானைதான். ஆம், மாபெரும் இறைநேச செல்வர் ஹஜ்ரத் செய்யிது நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனித அடக்கஸ்தலம் இந்தியாவில், தமிழ் நாட்டில், நாகூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. ஜனனம் ஹஜ்ரத் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் வட இந்தியாவில் அயோத்தியாவிற்கு அண்மையில் உள்ள மாணிக்கப்பூர் என்னும் ஊரில் பிறை 10 ஜமாத்துல் ஆகிர் மாதம் ஹிஜ்ரி 910 (கி.பி. 1491) இல் பிறந்தார்கள். அவர்களின் தந்தை பெயர் ஹஸ்ரத் சையத் ஹசன் குத்தூஸ் சாஹிப், தாயார் பெயர் பீபி பாத்திமா. ஜனனத்தின் மகத்துவம்...

பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!!

Image
                                    முதஅவ்விதன்!  முபஸ்மிலன்! முஹம்திலன்!                                                  முஸல்லியன்! வமுஸல்லிமா!!                                             எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே 15.3.2015 அன்று பனைக்குளம் மாநகரில் அமைந்துள்ள, மத்ரஸா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ்வில், ராத்தீப் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்  ஓதும் மஜ்லிஸும்,  மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.  பிற்பகல் சரியாக 2:30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வு,  இரவு 9:15 வரை நடைபெற்றது. ஆரம்பமாக ராத்திப்பத்துல் ஜலாலிய்யா என்னும் திக்ரு  மஜ்லிஸ் அஸர் வரையும், அஸர் தொழுகைக்குப் பின்  ...

இலங்கை,கல்முனை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் விவாத வெற்றி மாநாடு 2015

Image
முதல் பாகம். இரண்டாம் பாகம். மூன்றாம் பாகம். விவாத வெற்றி மாநாடு  ஏற்பாட்டாளர்கள். கல்முனை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் சபை மற்றும்  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புக்கள். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மாநாடு !!!!

Image
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-03-2015 அன்று, பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல்  ஜலாலிய்யா மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது, பத்து இலட்சம்  மகத்தான ஸலவாத்துகள், ஓதும் மஜ்லிஸ்  மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. அதுசமயம் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின்  தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா  மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில், தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி  ஹஜ்ரத் கிப்லா அவர்கள், சிறப்புப் பேருரையாற்றுகின்றார்கள். இச்சிறப்புவாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற மக்கள்  கலந்துகொண்டுஅல்லாஹ்வின்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் இலங்கையில் மூன்று தினங்களாக (05,07,08-03-2015) நடைபெற்ற விவாதம் !!!!

Image
முஸ்லிம்களுக்கும் வஹாபிகளுக்கும் இடையில் இலங்கையில் மூன்று தினங்களாக (05,07,08-03-2015) நடைபெற்ற விவாதத்தில் அகில இலங்கை மஜ்லிஸுல் உலமா சபைக்கு மாபெரும் வெற்றி! அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் எங்கே உள்ளான்? 05/03/2015 வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? 03 வஸீலா தேடுவதைப் பற்றி இஸ்லாமிய ஷரீஆவின் தீர்வு என்ன? 02 கழா தொழுகை உண்டா, இல்லையா? 08/03/2015 (01) கழா தொழுகை உண்டா, இல்லையா? 08/03/2015 (02) விவாதம் செய்தவர்கள் ;-  சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின்  தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி  ஹஜ்ரத் கிப்லா அவர்கள் வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மற்றும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் மீது பத்து இலட்சம் மகத்தான ஸலவாத்துகள் ஓதும் மஜ்லிஸ் !!!!!

Image
பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்  ( வரஹ் ) நாள் : இன்ஷாஅல்லாஹ் 15.3.2015 ஞாயிற்றுக் கிழமை. நேரம் : மாலை மணி 2:30 முதல் இரவு 10:00 மணிவரை. இடம் : செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் மத்ரஸா , பனைக்குளம். இந்த சிறப்பு மிகு நிகழ்வில் ஏராளமான பெரிய உலமாப் பெருமக்கள்  கலந்து சிறப்பிக்க இருக்கிறார்கள். இதில் தாங்கள் அனைவரும் கலந்துகொள்வதுடன், அல்லாஹ்வின் பேரருளையும் பெருமானார்   ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் பேருதவியையும், பெற்றுக்கொள்ளும் படி பணிவன்புடன்,மஜ்லிஸ் ராத்தீப்  ஜலாலிய்யா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.வஸ்ஸலாம். இப்படிக்கு மல்லானா மவ்லவி அல்ஹாஜ். எஸ்.முஹம்மது ஹிம்யானுல்லாஹ் ஆலிம் பாக்கவி மஜ்லிஸ் ராத்திப் ஜலாலிய்யா கலீபா பனைக்குளம். சிறப்பு மிகு  மாபெரும் பெருவிழா, மென்மேலும்  சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்  ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி  துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு