தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 14 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!



பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த பொன்னான மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் 1487 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் வருகிற 12--12--2015 சனிக்கிழமை தொடங்கி 23--12--2015 புதன்கிழமை வரை 12 தினங்களுக்கு இஷா தொழுகைக்குப் பின் சரியாக ஒரு மணி நேரம் பயான் நடைபெறும்.

உரையாற்றுபவர்கள் ;---
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்
முஸ்தஃபா மஸ்லஹி ஹஜ்ரத்
பேராசிரியர்,ஜாமிஆ மன்பவுஸ் ஸலாஹ் 
அரபுக் கல்லூரி,தூத்துக்குடி.

ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு அழைக்க, மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் எஸ்.எஸ்,அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்களை  016--9276127  இந்த  எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நிர்வாகக் குழு மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.

நாமறிவோம்!
நபி (ஸல்) பிறந்தநாள்
ஹி.மு.53 ரபீஉல் அவ்வல் --12
கி.பி.570 ஆகஸ்ட் --20
திங்கட்கிழமை -- அதிகாலை

வெளியீடு ;-- 
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு