வரலாற்று ஒளியில் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெற்ற மகத்தான வெற்றி !!!
இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு செய்யப்படவில்லை.
இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.) Historically, it is quite doubtfull whether Christ ever existed at all.(B.Russell) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.
நபி (ஸல்) அவர்களின் இருப்பு,சரித்திரத்தைக் கவனித்து, எந்தளவுக்கு ஒப்புக்கொள்ளப்பட்ட செய்தி என்றால்,அவர்கள் விஷயத்தில்,ஒரு ஆய்வாளர் இப்படி எழுதவேண்டியது தான் வந்தது.
Mohammad was born within the full light of history(Hitti) '' முஹம்மது '' வரலாற்றின் முழு ஒளியில் பிறந்தார் (ஹிட்டி) அந்த நபியின் உயிரோட்டத்திற்கான மிக முக்கியமான ஒரு காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையான, உயிருள்ள முஃஜிஸாவான அல் குர்ஆனாகும். இது இன்னும் கூட திருத்தப்படாத சரித்திர சான்றாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
ஆதம் நபி முதல் ஈஸா நபி வரை இலட்சத்திற்கும் அதிகமான தீர்க்கதரிசிகள் மக்களுக்கு இறை உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி,அல்லாஹ்வை பயந்து,வாழ்க்கையை துய்மையாக நடத்துமாறு வலியுறுத்தினார்கள்.ஆனால் மிகவும் சொற்பமான நபர்களே அவர்களுக்குப்பின் அணி திரண்டனர்.நபி யஹ்யா (அலை) அவர்களுக்கு,கூட செல்ல ஒருவர் கூட கிடைக்கவில்லை என்பதுடன் இறுதியில் அவர்கள் கொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்டார்கள்,நபி லூத் (அலை) அவர்களை அவர்களின் இரு மகளை தவிர வேறு யாரும் ஏற்கவில்லை.நபி நூஹ் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்களுடன்,கப்பலில் பயணித்தவர்கள் தவ்ராத் -- (தோரா) தரும் தகவலின்ப்டி வெறும் எட்டு நபரேயாகும்.
நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தங்களது தாயகமான இராக்கை விட்டு வெளியேறிய போது அவர்களுடன்,அவர்களின் இரு மனைவிமார்களான ஹாஜரா,ஸாரா,அம்மையார்களைத் தவிர அவர்களின் சகோதரர் லூத் (அலை) அவர்களும் இருந்தார்கள். அதற்குப்பிறகு அவர்களின் குழுவில் அவர்களது இரு பிள்ளைகளான நபி இஸ்மாயீல் (அலை) நபி இஸ்ஹாக் (அலை) ஆகியோரும் சேர்ந்து கொண்டார்கள்.நபி ஈஸா அலை) அவர்களுக்கு முழு முயற்சி செய்த பிறகும் கிடைத்தவர்கள் 12.நபர்கள்.இவர்களும் கடைசி நேரத்தில் அவர்களை கொலை வெறியூதர்களிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டனர். (மத்தாயு.56,26)
பெரும்பாலான நபிமார்களின் நிலை இவ்வாறு தான் இருந்தது.சில நபிமார்கள் தாங்கள் மட்டுமே இருந்தனர்,சிலருக்கு கூட செல்ல சிலர் கிட்டினர்.மனிதர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் முக்கியமானவர்களாகவும்,மேன்மை மிக்கவர்களாகவும் இருந்தவர்கள் நபிமார்கள்.ஆனால் ஆச்சரியம் என்னவெனில்!எல்லா வரலாற்றிலும் இவர்களே மிகவும் வேண்டாதவர்களாக நடத்தப்பட்டார்கள்.நாட்டை ஆண்ட அரசர்கள்,படை நடத்திச் சென்ற சிப்பாய்களின் சரித்திர சம்பவங்களை, வரலாறுகள் முழுமையாக குறித்து வைத்திருக்கின்றன.ஆனால் நபி ஆதம் (அலை) அவர்கள் முதல்,நபி ஈஸா (அலை) அவர்கள் வரை,எந்த நபிக்கும் முறைப்படி தொகுக்கப்பட்ட வரலாற்று ஆவணங்களில்,இடம் கிடைக்கவில்லை
அரிஸ்டாட்டில் (கி.மு,384 -- 322) நபி மூஸா அலை அவர்களுக்கு,ஆயிர வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர்.ஆனால் நபி மூஸா (அலை) அவர்களின் பெயரைக் கூட அந்த அறிஞர் தெரிந்து வைத்திருக்கவில்லை.இதற்கு காரணம் அதிகமான நபிமார்களை அவர்களின் சமூக மக்களே நிராகரித்துவிட்டார்கள்.அவர்களின்,வீடுகளையும்,சுவடுகளையும்,தொடைத்தெறிந்து சமூகத்தில் மதிப்பில்லாமல் ஆக்கினர்.
அவர்களைக்குறித்து,பதிவு செய்து வைக்கும்,அளவுக்கு அவர்களை முக்கியமானவர்களாக கருதவில்லை.நபிமார்களுடன் அவர்கள் இப்படி ஏன் நடந்துகொண்டார்கள் இதற்கு ஒரே காரணம்தான் இருந்தது.அவர்கள் தங்களுடைய கூட்டத்தார்களை விமர்ச்சித்தார்கள்.மனிதனுக்கு அதிகம் பிடித்தது,அவனைப் புகழ்வது.மனிதனுக்கு அறவேபிடிக்காதது,அவனுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது.
நபிமார்கள் எது சரி,எது தவறு என்று தெளிவாக்க வந்தவர்கள்.அதனால் அவர்கள் தங்கள் சமூகத்தாருடன் சமரசம் செய்துகொள்ளாமல் அவர்களின் தவறான கொள்கைகளையும்,தவறான செயல்பாடுகளையும்,சாடுவதற்கு சற்றும் தயங்கியதே இல்லை.இதனால் அவர்களின் கூட்டத்தினர் அவர்களுக்கு எதிரிகளாயினர்.இதனால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு என்னவெனில், அந்த நபிமார்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட வேதங்கள்.ஆகமங்கள் மற்றும் இறக்கியருளப்பட்ட இறைச்செய்திகள் எதுவும் பாதுகாக்கப்படாமல் போயின.ஏனெனில் நபிமார்களுக்குப் பிறகு அவைகளை பாதுகாப்பது,அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள்தான்.ஆனால் துரதிஸ்டவசமாக அவர்களைப் பின்பற்றுவோர் யாரும் இல்லாமல் போயினர்.அல்லது அதைப் பாதுகாக்குமளவுக்கு பெரிதாக இல்லாமல் போயினர்.
மனிதர்களின் இந்த நிலை குறித்து ஆதியிலேயே அறிந்திருந்த அல்லாஹ்,ஆதியும்,அந்தமும் இல்லா அந்த காலமில்லா அஸலியத்தான அமைப்பில் அவனது விதிப்படி தீர்க்கமான ஒரு முடிவு செய்திருந்தான் நபிமார்களின் வரிசையில் கடைசி கால கட்டத்தில் தனது பிரத்யேகமான ஒரு வழிகாட்டியை அனுப்புவது என்றும்,அந்த நபியின் மார்க்கம் தழைத்து வளரும்.அவருக்கு தனது பலமான பேருதவி கொண்டு அவர்கள்,ஒவ்வொரு கட்டத்திலும் தங்களது முன்னிலையாளர்களை,மிகைத்து,அவர்கள் கொண்டு வந்த சத்தியத்தை அவர்களை ஏற்க்க செய்யும் வரை அவர்களை அல்லாஹ் தன் பக்கம் கைப்பற்றுவதில்லை என்றும்,இறைவனின் படை எப்போதும் அவர்களுடன் இருந்து அவர்களை -- நிராகரிப்பவர்களை நிர்மூலமாக்கி இறை மார்க்கத்தை எப்போதும் உறுதியான தளத்தில் கொண்டு வந்து நிறுத்துவது என்றும்,அப்போது இறைவேதத்தை பாதுகாக்க தனி அமைப்பு உருவாகி விடும்,என்றெல்லாம் அவனது இந்த முடிவான முடிவு மண்ணுலகில் மன்னர் நபி(ஸல்) அவர்களின் வருகையால் வாகை சூடியது.''
'' எப்படி கடல்,நீரால் நிரம்பிஉள்ளதோ அது போல பூமி,இறைவனின் மகத்துவமிக்க ஆன்மீக அறிவால் நிறையும்.'' என்ற பைபிளின் வார்த்தை வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வருகையால் நடந்தேறியது.ஆயிரமாயிரம்,ஆண்டுக்கு முன்னரே வேதமறைகளின் மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்ட அந்த நபி,அரேபியாவின் பாலைவன பூகோள அமைப்பிலிருந்து தோன்றுவார்.இஸ்ரவேலர்களின் இன்னொரு வீட்டிலிருந்து தோன்றுவார் -- அதாவது அவர்களது சகோதரர்களான பனூ இஸ்மாயீல் சந்ததியினரின் பிள்ளைகளிலிருந்து தோன்றுவார் -- அது ஏசுவின் வருகைக்குப் பிறகு ஆகியிருக்கும். அவர்களுடைய தோழர்கள்.'' இறைவனால் விலைக்கு வாங்கப்பட்டவர்கள்'' எனப்படுவர். அவர்களை எதிர்க்கும் சமுதாயம் நாசத்தை சந்திக்கும்.ஆதி மலை (போன்ற) பாரசிகமும்,ரோமபுரியும்,அவருக்கு முன் மண்டியிடும்.அவர்களின் ஆட்சி தரையிலும்,கடலிலும்,வியாபித்திருக்கும்.என்பன போன்ற, இறுதி நபியை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது -- இன்னும் பல விளக்கத்தொகுப்புகள் பல அழித்தல் திருத்தல்களுக்கு மத்தியிலும் மாறாமல் மறுதலிக்க முடியாமல் இன்னும் பைபிளில் காணப்படுவது கண்டிப்பாக ஒரு அதிசயமே!
குறிப்பாக ஏசு நாதர் நபி (ஈஸா) அவர்கள்,இவ்வுலகிற்கு வருகை தந்ததே உலகிற்கு குறிப்பாக யூதர்களுக்கு இறுதி நபியின் வருகை குறித்து,விழிப்பூட்டுவதற்காகத்தான்.எந்த புதிய ஏற்பாட்டைக்குறித்து நன்மாராயங்கூறினார்களோஅது யதார்தத்தில் இஸ்லாமாகும்.இது யூதர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பனு இஸ்மாயீல் மூலமாக நிலை நிறுத்தப்படவிருந்த சத்திய மார்க்கமாகும்.இந்த வகையில் ; இஞ்ஞில் என்பது புதிய ஏற்பாடல்ல.புதிய ஏற்பாடான இஸ்லாம் குறித்த நன்மாராயமேயாகும்.
ஹழறத் நபி ஈஸா (அலை) அவர்கள்,இறுதி நபிக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு வருகை புரிந்தார்கள்.திருக்குர்ஆனில் ( 61; 06) வருகிறது.நபி ஈஸா அலை அவர்கள்,பாலஸ்தீனத்திலுள்ள யூதர்களிடம் கூறினார்கள்.அல்லாஹ் என்னை அடுத்து வரக்கூடிய நபியைக் குறித்து நற்செய்தி சொல்வதற்காக அனுப்பினான்.அவர்கள் எனக்குப்பிறகு வருவார்கள்,''அவர்களின் பெயர் அஹ்மது'' என்பதாகும்.
அஹ்மது -- முஹம்மது,இந்த இரண்டும் ஒரே பொருளைத் தரும் வார்த்தைகள்.இதன் பொருள் ''புகழப்பட்டவர்''இஞ்ஜில் பர்னாபாஸில் ''முஹம்மது'' என்று தெளிவாகவே அவர்களின் பெயர் கூறப்பட்டுள்ளது.
யூஹன்னாவின் பைபிளில் -- இஞ்ஜீலில்) முன்னறிவிப்பு செய்யப்பட்ட,வரப்போகும் இறைதூதரின் பெயர் முன்ஹமன்னா'' இதற்கு கிரேக்கத்தில் மொழி பெயர்க்கப்பட்ட போது '' பாரகலீது'' என்று ஆகிவிட்டது.இதுதான் இப்போது பிரபல்யம்.
இப்படி நற்செய்தி சொல்லப்பட்ட சுந்தர் நபி (ஸல்) அவர்கள்.கி.பி 570 ஏப்ரல்.20 திங்கட்கிழமை அரபு நாட்டில் திருமக்கா நகரில் பிறந்தார்கள்.63 ஆண்டுகள் வாழ்ந்து கி.பி 633 ஜூன்.08 திங்கட்கிழமை திரு மதினாவில் மறைந்தார்கள்.
நபித்துவப் பிரகடனம் செய்து மொத்தம் 23 ஆண்டுகளே அழைப்புப் பணி செய்தார்கள். ஆகக்குறைந்த இந்த கால கட்டத்தில் அரபு இனக்குழுக்களுக்கு மத்தியில் அவர்கள் ஏற்படுத்திய எழுச்சி,இஸ்லாமிய சகோதரத்துவ ஏகத்துவப்புரட்சி,வரலாற்றில் ஈடு இணையற்றது.இந்த இஸ்லாமியப்புரட்சி நூறு ஆண்டுக்கும் குறைவானதொரு கால கட்டத்தில் உலகின் மிகப்பெரிய வல்லரசான பாரசிக சாசானி சாம்ராஜ்யத்தையும்,ரோமாபுரியின் பாஸநதினி பேரரசையும் கைப்பற்றியது
ஒரு பக்கம் இராக் ஈரானிலிருந்து ரஷியாவின் புகாரா வரை.மறுபக்கம் சிரியா, பாலஸ்தீனத்திலிருந்து எகிப்து மற்றும் வட ஆப்ரிக்கா முழுவதையும் வெற்றி கொண்டது.பின்னர் இந்த வெற்றி முகாம் மேற்கு பக்கம் திரும்பியது.கி.பி.711-ல் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக்கடந்து ஸ்பெயின் மற்றும் புர்துகாலில் பிரவேசித்தது.
மேற்கு ஐரோப்பாவில் கி.பி 732--ல் அடியெடுத்து வைத்த இஸ்லாமியப்படை பிரான்ஸ் மன்னர் ஜார்லஸ் கார்ட்லால் 'தூர்''என்னுமிடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.இது மட்டும் நிகழாமல் இருந்தால் ஜவஹர் லால் நேரு எழுதுவது போல் இன்று ஐரோப்பாவின் மதம் இஸ்லாமாக இருந்திருக்கும்.இடையில் இரண்டு நூற்றாண்டுகள் சிலுவை யுத்தம்.அதற்குப்பின் மங்கோலியப்படையினரால் இரத்தவெறி தாக்குதல்கள்.எல்லாம் இருந்தும் 15 ஆம் நூற்றாண்டு வரை பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.எனினும் உள் மோதலால் ஸ்பெயினை மட்டும் இழக்கவேண்டியது வந்தது.அதற்குப்பிறகு உள் வெளி ஆற்றல் துர்க்கியர்களையும்,முகலாயர்களையும் தூக்கி நிலை நிறுத்தியது துர்க்கியர் 1453 --ல் காஸ்டான்டி நோபிலை வெற்றி பெற்றனர்.கிழக்கு ஐரோப்பாவில் யுகோஸ்லாவியா வரை சென்றனர்.
வியன்னாவுக்கு முன்னர் 1683 வரை துருக்கிப்படை இருந்தது.16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள்,இந்தியா,ஆப்கானிஸ்தானில்,இஸ்லாமியர் ஆட்சியை நிறுவினர்.ஆக 13 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு இஸ்லாம் எந்த அளவு விரிவடைந்தது என்றால் இன்று உலகில் அனேகமாக எல்லா பகுதியிலும் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.
உலகில் நான்கு பேரில் ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார்.ஐம்பது நாடுகளில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் உள்ளனர்.இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு மூலதனம்,அந்த் 23 ஆண்டு கால அழைப்பு பணி.ஹிஜ்ரத்துக்குப்பிறகு ஆறு வருடம் கழித்து உம்ராவுக்கு வந்தபோது 1400.பேர் இருந்த ஸஹாபாக்கள்.இன்னும் இரண்டு வருடம் கழித்து மக்கா வெற்றிக்கு வந்த போது 10.000 பேர் இருந்தனர்.இது மதீனாவிலிருந்து மட்டும் வந்த முஸ்லிம்கள் தான்.மற்ற ஊரிலிருந்து வந்தவர்களையும் சேர்த்தால் 12,000.முஸ்லிம்கள்.அடுத்து இரண்டு வருடம் கழித்து, இறுதி ஹஜ்ஜுக்கு வந்த முஸ்லிம்கள்,பெருமானாருடன் மதீனாவிலிருந்து புறப்பட்டவர்கள் மட்டும் 90,000.மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் சேர்த்தால் இன்னும் அதிகம்.ஒரு அறிவிப்பின் படி 1,24,000.பேர் இருந்தார்கள்.
இவர்கள் மூலம் உலகெங்கும் இஸ்லாம் பரவி இன்று உலக மக்கள் தொகையில் 2.5.PILLIAN. (200 கோடி) முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.இவ்வளவு பெரிய குறியீட்டை எட்ட உதவியது நபிகள் நாயகத்தின் 23 ஆண்டுகால சரித்திரமே! அல்ஹம்துலில்லாஹ்...
Comments
Post a Comment