Posts

Showing posts from May, 2016

தமிழ் நாடு அரசு தலைமை காஜி வெளியீட்டுள்ள இவ்வருடத்தின் நோன்பு கால அட்டவனை மற்றும் ஃபித்ரா விபரங்கள் !!!!

Image
தமிழ் நாடு அரசு தலைமை காஜி அல்ஹாஜ் அல்லாமா  டாக்டர் முஃப்தி ஸலாஹுத்தீன் அய்யூபி அல் அஜ்ஹரி  ஹழ்ரத் கிப்லா அவர்கள்,வெளியீட்டுள்ள இவ்வருடத்தின்  நோன்பு கால அட்டவனை மற்றும் ஃபித்ரா விபரங்கள். வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மேலப்பாளையம் மௌலானா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹழரத் அவர்களின் தாயார்,ஜமீலா அம்மா அவர்கள் மறைவு !!!

Image
பேரன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின்  பேராசிரியர்  மௌலானா அல்ஹாஃபிழ் P.A.காஜா முஈனுத்தீன்  பாக்கவி ஹழரத் அவர்களின் தாயார்,ஜமீலா அம்மா அவர்கள்   25-05-2016 இன்று அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும்  தாருல் பகாவை  அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி  வ இன்னா  இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (25/05/2016)  மாலை 5 :00 மணிக்கு,மேலப்பாளையத்தில் நடைபெற்றது, தாயார் அவர்களைப் பற்றி சில !!!  97 வயதை கடந்த அந்த அம்மையார் நினைவிழப்பதற்கு  சில நாள் முன்பு வரை, வணக்க வழிபாடுகளில் பேணுதளானவராகவும், குடும்ப விவகாரங்களில் வழிகாட்டியாகவும் உத்தரவிடுபவராகவும் இருந்தார்.  அந்த அம்மையாரின் உத்தரவின் படியே காஜா ஹஜ்ரத்தின் திருமணம் நடந்தது. அவரது உத்தரவின் படியே கடந்த மாதம் 24 ம்  தேதி காஜா ஹஜ்ரத்தின் மகன் அஸ்லம் சகாபியின் திருமணம்  நடைபெற்றது.  தாயாரின் விழியசைவை காஜா ஹஜ்ரத் பின் பற்றுகிறவராகவும்,அந்த அம்மையார் தன் மகனுக்காக  அதிகமதிகம...

இராமநாதபுரம்,ஜாமிஆ மதீனத்துல் உலூம் ஹிஃப்ழு மதரஸாவின்,மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது

Image
முதஅவ்விதன்!! முபஸ்மிலன்!! முஹம்திலன்!!  முஸல்லியன்!! வமுஸல்லிமா!!  அன்புடையீர் !! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இராமநாதபுரம்,மூத்த ஆலிம் பெருந்தகை,மௌலானா  அல்ஹாஜ் பாரி ஆலிம் மன்பயீ ஹழ்ரத்தின், ஜாமிஆ மதீனத்துல் உலூம் ஹிஃப்ழு மதரஸாவின், மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா 21-05-2016 அன்று  மிகச்சிறப்பாக  நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு ;;- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் பாவம் போக்கும் லைலத்துல் பராஅத் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் எதிர் வரும் ஷஅபான் பிறை 15- சனிக்கிழமை மாலை ஞாயிறு இரவு 21-05-2016  அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு மூன்று யாசின்களும்,பராஅத் இரவின் சிறப்பு பயான்களும், திக்ரு மஜ்லிஸும், தஸ்பீஹ் தொழுகையும், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்  அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது  ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா , மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன்  ஹழ்ரத் ,மௌலானா நிஜாமுதீன் ஹழ்ரத் ஆகியோரின், சீரிய தலைமையில் நடைபெறும். அன்றிரவு முழுவதும் விழித்திரிந்து வணக்கவழிபாடுகளில்  ஈடுபடுவதற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் நமது  மஸ்ஜிது இந்தியா பள்ளிவாசல் நிர்வாகம் முறையாக செய்துள்ளது. இது போன்று பினாங்கு, மற்றும் மலேசியாவில் உள்ள பல நூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும்,  இன்னும் அரபு நாடுகள், இலங்கை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இன்ஷா அல்லாஹ் மிகச் சிறப்பாக நடை பெற இருக்கிறது. இப்புனிதம் நிறைந்த மஜ்லிஸ்க...

லைலத்துல் பராஅத் -மார்க்கச் சொற்பொழிவு !!!

Image
மலேசியத் தலைநகர் செலாயாங் மதரஸா இமாம் கஸ்ஸாலி, தலைமை இமாம் மௌலானா அல்ஹாஃபிழ்  ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி  ஹழ்ரத் அவர்கள்,  ஆற்றிய,பாவம் போக்கும் லைலத்துல்  பராஅத் மார்க்கச் சொற்பொழிவு 

حق ليله கொழுக்கட்டை பெருநாள் என்றால் என்ன ?

Image
பராஅத் இரவு حق ليله கொழுக்கட்டை பெருநாள் என்றால் என்ன ? ஷஃபான் மாதத்தின் சிறப்பு என்ன ? பராஅத் இரவு முழுவதும் செய்ய வேண்டிய வணக்கங்கள் ? பராஅத் நோன்பு கூடுமா? போன்ற கேள்விகளுக்கு தமிழில் தொகுத்து வழங்குபவர்கள். மௌலானா அஃப்ளலுல் உலமா புலியங்குடி அபூசாலிஹ் பிலாலி.Bcom. ஐக்கிய அரபு அமீரக அரசு வெளியிடும் ஜும்ஆ உரை  மற்றும் அரபுலக பத்வா மொழிபெயர்ப்பாளர். அரபு நாடுகளில் பராஅத் இரவு அன்று,அரபிகளின் குழந்தைகள்    , வீடு வீடாகச் சென்று,பாடல்கள் பாடி,பராஅத் இரவை, சிறப்பாக பெருநாளை போன்று கொண்டாடுவார்கள்.

நிஸ்பு ஷஃபானின் அமல்களும், துஆவும்-Amal and Dua of Nishfu Sahban

Image
'ஷஃபான் மாதம் என்னுடையது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஷஃபான் மாதம் 15 ம் நாளைத்தான் நிஸ்பு ஷஃபான் என்று அழைக்கிறார்கள். இந்த இரவில்தான் வரும் சென்ற வருடத்தின் அமல்களின் கணக்குகள் முடிவுக்கு வந்து இந்த  வருடத்திற்குள்ள புதிய கணக்கு (அமல் நாமா)இறைவனால் நிர்ணயிக்கப்படுவதாகவும், இவ்வருடத்திற்குள்ள இறப்பு, பிறப்புகள் எழுதப்படுவதாகவும் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன. ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், 'மனிதர்களே! ஷஃபான் மாதம் 15வது இரவு வணக்கங்களில் ஈடுபடுங்கள், நோன்பும் நோற்குங்கள். இந்த புனித இரவில் அல்லாஹ் தனது கிருபையை ரஹ்மத்தை பூமியை நோக்கி பரவச் செய்து, 'யாராவது நோயாளிகள் இருக்கிறார்களா? அவர்களின் நோயை நான் குணப்படுத்துகிறேன் என்று அழைக்கிறான். மற்றும் இந்த இரவு முழுவதும் கேட்பவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப கொடுக்கிறான்.' (இப்னு மாஜா) மேலும் இந்த இரவில் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் மற்றும் பாமன்னிப்பின் வாயல்கள் திறந்து இருக்கின்றன. அல்லாஹ் இந்த இரவில் பாவமன்னிப்புக் கேட்பவரின் பாவங்களை மன்னிக்கிறான். இறுதிய...

புனிதம் வாய்ந்த பராஅத் இரவு ஓர் ஆய்வு !!!

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பராஅத் ; இரணத்தை அள்ளிப்போடு! மரணத்தை தள்ளிப்போடு !!!

Image
06-06-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- பராஅத் ; இரணத்தை அள்ளிப்போடு! மரணத்தை தள்ளிப்போடு! சிறப்புப்பேருரை ;-  selayang  மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம், மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ்  ஆலிம் மஸ்லஹி  ஹஜ்ரத் அவர்கள்.

பாரஅத் இராவில் என்ன செய்ய வேண்டும்..?

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

பாவம் போக்கும் பரா அத் இரவு !!!

Image
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுதி மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.

பராஅத் -உறவுக்கு பாலம் அமைக்கட்டும் !!!

Image
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா  எஸ்.எஸ்.அஹமது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் ( தலைமை இமாம்,மஸ்ஜித் இந்தியா,கோலாலம்பூர்,மலேசியா )

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை !!!

Image
ஹாமீம்! தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக இதனை மிக்க பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம் உறுதியான எல்லா காரியங்களும் அதில் தான் நம்முடைய கட்டளையின் படி (நிர்மானிக்கப்பட்டு) பிரித்துக்கொடுக்கப்படுகின்றன. அல் குர்ஆன் 44:1, 2, 3, 4. இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள புனித இரவைக் கொண்டு உத்தேசம் என்ன? லைலதுல் கத்ருடைய இரவா? பராஅத் இரவா? இதில் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும், சரியான கருத்து லைலத்துல் கத்ருடைய இரவு என்றிருந்தாலும் பராஅத் இரவில் இறைத்தீர்புகள் எழுதப்படுகிறது என்பதில் எந்தக்கருத்து வேறுபடும் இல்லை. ஏனெனில் இது பற்றி நபி மொழி தெளிவாக இருக்கிறது. இந்த இரண்டு இரவிலும் காரியங்கள் தீர்மானிக்கப்படுகிறது, என்று, இறை வசனத்திலிருந்தும் நபி மொழியிலிருந்தும் பெறப்படுகிறது. இது இந்த இரண்டு இரவின் சிறப்பை பறை சாட்டுவதாக இருக்கிறது என்று (மிஷ்காத் நபி மொழி தொகுப்பின் விரிவுரையாளர்) அல்லாமா முல்லா அலி காரி (ரஹ்) கூறுகிறார்கள். (மிஷ்காத் நபி மொழி எண்: 1305 விரிவுரை மிர்காத்). அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள...

மலேசியத் திருநாட்டில் 58- வது அனைத்துலக திலாவத்துல் குர்ஆன் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில்,அனைத்துலக 58-வது திருக்குர்ஆன் ஓதும் போட்டியின் இறுதி நிகழ்ச்சி (07-05-2016)   சனிக்கிழமை மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது.  இதில் நாற்பது நாடுகள் பங்குபெற்றன. உலகத்திலேயே தொடர்ந்து 58 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ். இதில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆண்களில், மலேசியாவைச் சார்ந்த காரீ,முதலிடத்தையும், புருனையைச்  சார்ந்த காரீ இரண்டாவது இடத்தையும், இந்தோனேசியாவைச் சார்ந்த காரீ மூன்றாவது இடத்தையும், ஈரானைச்  சார்ந்த காரீ நான்காவது  இடத்தையும், பிலிப்பீனாவைச் சார்ந்த காரீ ஐந்தாம் இடத்ததையும்  பெற்றுக் கொண்டார்கள்.  பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா முதலிடத்தை  யும்,     இந்தோனேசியாவைச்  சார்ந்த க...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு