Posts

Showing posts from November, 2016

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1491 வது மீலாதுப் பெருவிழா!!!

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!  வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு  தினங்களும் பயான் செய்யப்படும், ஆகவே இச்சிறப்பு வாய்

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 15 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னான  மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு  வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்  1491 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் வருகிற 30--11--2016 புதன் கிழமை   தொடங்கி 11--12--2016 ஞாயிறு வரை 12 தினங்களுக்கு  இஷா தொழுகைக்குப் பின் சரியாக  ஒரு மணி நேரம் பயான் நடைபெறும். உரையாற்றுபவர்கள் ;--- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் K.I.ஷாஹுல் ஹமீது ஆலிம் வாஹிதி இமாம் அப்பா ஜும்ஆப் பள்ளிவாசல் பேராசிரியர்,ஸபீலுல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரி வடகரை,தென்காசி,நெல்லை மாவட்டம். ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும்  இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள்  அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்படி பேச்சாளரை மலேசியாவில் மற்ற இடங்களுக்கு  அழைக்க, மலேசியத் தலைநகர்

உலகம் முழுவதும் நடைபெற்ற பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்கள் !!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பெருமானாரின் மௌலிது ஷரீஃப் மற்றும் மீலாதுப் பெருவிழாக்களைப் பற்றிய அழகிய பாடல்கள் !!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

பெருமானாரின் மௌலித் ஷரீஃப், மற்றும் மீலாதுப் பெருவிழா பற்றிய பயான்கள் !!!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வரலாற்று ஒளியில் வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெற்ற மகத்தான வெற்றி !!!

Image
இவ்வுலகைத் திருத்திய தீர்க்கதரிசி உத்தம தூதர் உம்மி நபி நாதர் நானிலம் சிறக்க வந்துதித்த இறைத்தூதர் ஈருலக நாயகர்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர அவர்களுக்கு முன்னர் எந்த நபிமார்களின் வாழ்வும், வாக்கும்,முறையாக தொகுக்கப்பட்ட எந்த  வரலாற்றுப் பக்கங்களிலும் பதிவு  செய்யப்படவில்லை. இதன் விளைவு வரலாற்றுப்பூர்வமாக  அறிவியல் மட்டத்தில் அவர்களின் நபித்துவம் நிரூபனமானதாக இல்லை.ஏசு நாதர் என்ற ஈஸா நபி (அலை) அவர்கள். முந்தய தீர்க்கதரிசிகளில் கடைசி தூதராக வந்தவர்களாவர்.ஆனால் அவர்களின் நிலையும் கூட வரலாற்று ஒளியில் பார்க்கப் போனால் ஒரு  மேற்க்கத்திய சிந்தனையாளருக்கு இப்படி சொல்ல வேண்டியது வந்தது. (இதை நாம் ஏற்கவில்லை என்றாலும் அவர் இவ்வாறு கூறுகிறார்.) Historically, it is quite doubtfull whether Christ ever existed at all.(B.Russell) '' இந்த உலகில் ஏசு நாதர் என்று ஒரு ஆள் எப்போதாவது இருந்தாரா என்பதே வரலாற்றில் பெரும் சந்தேகத்திற்குறிய விஷயமாகும்'' (பி -- ரஸ்ஸல்) ஆனால் இது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் விஷயத்தில் முற்றிலும் மாறுபட்டதாகும்.  நபி (ஸல்) அவர்களின் இருப்பு

மன்னர் நபியின் மாண்பார் அற்புதங்கள் !!!

Image
வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் வாழ்வுக்காலம். அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் இப்புவியில் சந்திரக் கணக்குப்படி 63 ஆண்டுகள், 3 நாட்கள், 6 மணி நேரமும்,சூரியக் கணக்குப்படி 61 ஆண்டுகள், 49 நாட்கள், 6 மணிநேரமும் வாழ்ந்து வையகத்திற்கு வெற்றி வழிகாட்டிச் சென்றுள்ளார்கள். சர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் சரீர சக்தி! ஒரு நபிக்கு 500 மனிதர்களின் சக்தி உண்டு,காரணம் வஹியைத்தாங்க அதிக சக்தி வேண்டும். ஆனால் நீதர்  நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள் 4 0 நபியின் சக்தியை கொடுக்கப்பட்டவர்கள்.சக்தி மிகப் பெற்ற முக்தி நபிகளார்!.....  ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள். 1. திரு நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்கள்  தங்கள் முன்னாலும் சமீபத்தில் இருப்பதைப் பார்ப்பது போன்றே,பின்னாலும் தொலைவிலும் இருப்பதையும் ஏக காலத்தில் ஒன்றாகவே  பார்ப்பவர்களாக இருந்தார்கள். 2. பகலிலும்,வெளிச்சத்திலும் பார்ப்பதைப் போன்றே,இரவிலும்,இருளிலும் சிறியன - பெரியன யாவையும் பார்ப்பார்கள். 3. தங்களின் வாய் உமிழ் நீர்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும். 4. பாலர

சுப்ஹான மௌலிது ஷரீஃப் தமிழாக்கத்துடன் !!!!

Image
வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முதல் மீலாது மாநாடு !!!

Image
இந்த உலகில் புகழ் பெற்று விளங்கியவர்கள் எல்லாம் புகழோடு பிறந்தார்களா? என்றால் இல்லை எனலாம். ஆனால் அகிலம் சிறக்க வந்த அண்ணலம்பெருமானார் ஸல் அவர்கள் நல்ல பெயரோடும் புகழோடும் பிறந்தார்கள் என்பது மாத்திரமல்ல, பிறப்பதற்கு முன்பும் நல்ல புகழ் பெற்றிருந்தார்கள். நபி ஸல் அவர்களின் வருகை குறித்து எல்லா வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த படியால் நபிகளாரின் வருகையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. வேதக்காரர்கள் நபி பிறப்பதற்கு முன்பே அவர்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا தங்களுக்கு நெருக்கடியான தருணங்களில் அந்த நபியின் பொருட்டினால் தங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ்விடம் தேடிக்கொண்டிருந்தனர். அல்குர்ஆன் 2 89 பொதுவாக,பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு எடுப்பது தான் வழக்கம். ஆனால் ஜெனிப்பதற்கு முன்பே ஜனன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கண்மனி நாயகம் காதமுன் நபிய்யீன் [ஸல்] அவர்களுக்கு மட்டும் தான். அதுவும் ஆலமுல் அர்வாஹில் – ஆத்ம உலகில் வைத்து அகிலம் தோன்றுவதற்கு முன்னர் அண்ணல் நபி நாயகம் [

மௌலித் என்பது பித்அத்தாகுமா? அனைத்து பித்அத்துகளும் வழிகேடாகுமா?

Image
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இல்லாத அல்லது செய்யாத கந்தூரிகளை, கத்தமுல் குர்ஆன் எனும் ஈஸால் ஸவாப் மற்றும் ஸியாரதுல் குபூர் மற்றும் ஏராளமாக உள்ள தரீக்கா வழிமுறைகளை எவ்வாறு நாம் செய்யலாம்? அது பித்அத்தான செயல்பாடுகள்தானே, பித்அத்கள் எல்லாம் நரகத்திற்கு இட்டுச்செல்வதாக நபிமொழி கூறுகிறதே? நபி ﷺ செய்யாத நல்ல விடயங்களை செய்யலாமா?  ஆம், இருள் நிறைந்த பாதையில் செல்லவேண்டுமெனில் அங்கு வெளிச்சம் தேவைப்படும். அவ்வாறு வெளிச்சம் இன்றேல் அவன் பாதையில் வழி தவற நேரிடும். இது போலவே மார்க்கச்சட்ட விளக்கங்களைப் பெறும்போது சரியாக அறிந்தவர்களிடம் கேட்டு உரிய விளக்கங்களை பெறவேண்டும். இமாம்களை புறக்கணித்து சுயபுத்தியைக் கொண்டு குர்ஆன், ஹதீஸை ஆராய்வது தடியெடுத்தவன் வேட்டைக்காரன் என்பதற்கு ஒப்பானதொன்றாக காணப்படுகிறது. பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன போன்ற விடயங்களுக்கு எமது இமாம்கள் கூறிய விளக்கங்களையும், பித்அத்தை வாதமாக கொண்டு ஸுன்னத்தான வழிமுறைகளையும், ஸஹாபாக்கள் முதல் நல்லடியார்கள் வரை மார்க்கத்தின் பெயரால் தோற்றுவித்த நற்செயல் முறைகள், காலத்தின் தேவைக்கு ஏற்றவாறு உரு

மீலாது விழாவின் அடிப்படை நோக்கங்கள் !!!

Image
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!  மீலாத் விழாவின் அடிப்படை நோக்கங்கள் : மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும். இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.  அல்லாஹுதஆலா கூறுகிறான்: "அல்லாஹுதஆலா

ஒடுக்கத்துப் புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ

Image
ஒடுக்கத்துப் புதன் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்  “புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து  நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது  சிறந்தது” என்று கூறப்பட்டுள்ளது. அன்று யாராவது நான்கு “றக்அத்” தொழுது ஒவ்வொறு  றக்அத்திலும் பாத்திஹா சூறா ஒதியபின் “இன்னாஅஃ தைனா  கல் கவ்தர்” என்ற சூறத்தை 17 தரமும், “குல்குவல்லாஹ்வை”  05 தரமும்,“குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும் “குல் அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும்  அவன் சகல பலாய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவான். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஒடுக்கத்துப் புதன் ஓர் ஆய்வு !!!

Image
கேள்வி: ஒடுக்கத்துப் புதனன்று நாம் செய்ய வேண்டியதென்ன? பதில்: ஸபர் மாதத்தின்  இறுதிப்புதனன்று இரவு அவ்வருடத்திற்கான மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் தவஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன்  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தம் அகக்கண் பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது 'ஜவாஹிருல் கம்ஸா' எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ஸலாமுன் எனத் தொடங்கும் திருவசனங்களை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். 'நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரணி கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது' எனற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மூலமாக தைலமி ரஹிமஹுல்லாஹ் அவர்களும், ஹாகிம் தாரீகிலும் பதிவு செய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர். பதாவா ஹதீதிய்யா ஓரம் பக்கம் 233 குத்புல் ஹிந்த் அவர்களின் கனவுக்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைகின்றது. நன்றி: வஸீலா 1-11-87 ஒடுக்கத்துப் புதன்  بسم الله الرحمن ا

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு