Posts

Showing posts from June, 2017

ஈத் முபாரக் !!!

Image
புனித  ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள். முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!  அருமைத் தாய்மார்களே!  சகோதர சகோதரிகளே!  பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து  வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல  அல்லாஹ்  இந்த ரமழான்  மாதத்திலே நமக்கு வழங்கினான். பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள்  தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும்,  அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே!  உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க  இருக்கின்ற,  உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு  நோன்புப் பெருநாள்  நல் வாழ்த்துக்களையும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து  தெறிவித்து...

முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாமின் நினைவகம் !!!

Image
முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களின் நினைவகம்  வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி அவரது பிறந்த ஊரான  இராமேஸ்வரம் அருகிலுள்ள பேய்கரும்பில் திறப்பு விழா காண உள்ள நிலையில், இந்த நினைவகத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை பற்றிய அரிய தகவல்கள் தெரியவந்துள்ளது. பிறந்த நாள், நினைவு நாளில் மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சூரிய கதிர்கள்: நினைவகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு முன்னாள் ஜனாதிபதி மர்ஹூம்அப்துல் கலாம் அவர்களின் இரண்டாவது நினைவு நாளன்று இராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவகத்தின் திறப்புவிழா நடைபெறவுள்ள நிலையில், இந்த நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய அறிந்து கொள்வோமா..?  “தோன்றின் புகழோடு தோன்றுக! அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்று வள்ளுவப் பெருந்தகை தனது உலகப் பொதுமறையான திருக்குறளில் பதிவிட்ட உவமைக்கு எடுத்துக்காட்டாக இந்த பூவுலகில் வெகு சிலரே தோன்றியுள்ளனர். கம்சனின் அடக்குமுறை ஆட்சிக்காலத்தில் சிறைச்சாலையில் பிறந்த கண்ணன், பிற்காலத்தில் கீதா உபதேசம் என்னும் பகவத் கீதையின் மூலம் இந்த உலகில் தர்ம நியாயங்களை நிலைநாட்டும் வகையில் பகவத் கீத...

சித்தார் கோட்டையில் ரமழானில் கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப் மஜ்லிஸ் !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சித்தார் கோட்டை ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்  சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில்,புனித ரமழான் மாதம் முழுவதும் ஹிஜ்புல் குர்ஆன் ஓதியதற்கு  பின்னால், கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப்  ஓதப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ். . கஸீதத்துல் வித்ரிய்யா ஷரீஃப்,சித்தார் கோட்டையில்,  நூற்றாண்டுகளுக்கு மேல்  ஓதப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் மதரஸா மல்ஹருஸ் ஸுஅதாவின்  முன்னால் இன்னால் மாணவர்களாலும்,பெரிய சீதேவிகளாலும்  இன்று வரை ஓதப்பட்டு வருகிறது.இதை ஓதக்கூடியவர்களுக்கு  அல்லாஹ் எல்லாச் சிறப்பையும் வழங்குவானாக.ஆமீன். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை பல மஹான்மார்கள்  தலைமை யேற்று நடத்தி இருக்கிறார்கள். அல்லாஹ் அந்த மஹான்மார்களுக்கு நாளை  மறுமையில் உயர் பதவி வழங்குவானாக ஆமீன். யா அல்லாஹ் இந்த சிறப்பு வாய்ந்த கஸீதத்துல்  வித்ரிய்யா ஷரீஃப் மஜ்லிஸ்,கியாம நாள் வரை  நடைபெறுவதற்கு பேருதவி செய்வாயாக ஆமீன். வஸ்ஸலாம்... வெளியீடு ;-  சுன்னத் ஜமாஅத் பேரியக்க சித்தார் கோட்டை கிளை. ...

இஃதிகாஃபின் சிறப்புகளும் சட்டங்களும் !!!

Image
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ  آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ. (القرآن2:187 ) அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பள்ளிவாசலில் தங்கி(இஃதிகாஃப்) இருக்கும்போது மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்.அவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே தன் வசனங்களை அல்லாஹ் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (இதன் மூலம்)அவர்கள் (தீமையிலிருந்து தங்களைக்) காத்துக்கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:187) இஃதிகாஃப் என்றால் என்ன? اعْتِكَافٌ التَّعْرِيفُ: 1- الاعْتِكَافُ لُغَةً: الافْتِعَالُ، مِنْ عَكَفَ عَلَى الشَّيْءِ عُكُوفًا وَعَكْفًا. مِنْ بَابَيْ : قَعَدَ ، وَضَرَبَ. إِذَا لازَمَهُ وَوَاظَبَ عَلَيْهِ، وَعَكَفْتُ الشَّيْءَ: حَبَسْتُهُ.   وَمِنْهُ قَوْله تَعَالَى: { هُمُ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوفًا أَنْ يَبْلُغَ مَحِلَّهُ } (سورة الفتح / 25). وَعَكَفْتُهُ عَنْ حَاجَتِهِ: مَنَعْتُهُ (المصباح المنير مادة: عكف). وَالاعْتِكَ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு