Posts

Showing posts from November, 2017

சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் மாதம் மற்றும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்அவர்களின் 1492 வது மீலாதுப் பெருவிழா!!!

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!! முஸல்லியன் !!!!  வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ்,அகிலத்தின் அருட்கொடை, நம் உயிரிழும் மேலான, நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின்  பிறந்த புனிதம் நிறைந்த மாதமான,சிறப்பு வாய்ந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை அடைந்து,பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்  அவர்களின் மீது அதிகமாக ஸலவாத்துகள் சொல்லியும்,பன்னிரெண்டு தினங்கள் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும்,சுப்ஹான மவ்லிது ஷரீஃபை ஓத இருக்கின்றோம். மேலும் பெருமானாரின் புனிதம் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை,நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால் தொடர் பயானாக கேட்டு அதன்படி அதிகமான நல் அமல்கள் செய்து,அதிகமான நன்மைகள் பெற இருக்கின்றோம். அதுசமயம் இன்ஷா அல்லாஹ் இந்தியா,இலங்கை,மலேசியா,மற்றும் உலகமெங்கும் அனைத்து பள்ளிவாசல்களிலும்,சிறப்புமிகு சுப்ஹான மௌலிது ஷரீஃப் ஓதப்படும்.இன்னும் நமது கண்ணியமிகு உலமாப் பெருமக்களால்,பெருமானாரின்,வாழ்க்கை வரலாறுகளை,பன்னிரெண்டு  தினங்களும் பயான் செய்யப்படும், ஆ...

தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 16 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு  அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னான  மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு  வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்  1492 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு  நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ் 19--11--2017 இன்று ஞாயிற்றுக் கிழமை   தொடங்கி 30--11--2017 வியாழன் வரை 12 தினங்களுக்கு  இஷா தொழுகைக்குப் பின் சரியாக  ஒரு மணி நேரம் பயான் நடைபெறும். உரையாற்றுபவர்கள் ;--- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் V.S.அன்வர் பாதுஷா உலவி ஹழ்ரத் M.A,M Phil ,phd (ARABIC ) (தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர்) அரபித்துறைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை. தலைமை இமாம், மஸ்ஜிதே ரஹ்மானிய்யா,பெரம்பூர்,சென்னை ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும்  இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள்  அனை...

பெரியகுளம் மௌலானா அபூபக்கர் பாகவி ஹழ்ரத் மறைவு !!!

Image
 "ஹிதாயதுஸ் ஸிப்யான் ஃபீ தஜ்வீதில் குர்ஆன்" நூலாசிரியர்,  மர்ஹும் மெளலானா காரி சையது முகம்மது இப்ராஹிம்  பாகவி அவர்களின் தம்பி பெரியகுளம்  "மவ்லானா அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்கள்  நேற்று (13-11-2017 ) இரவு 9 மணியளவில் தாருல்  ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். *சுமார் 97 வயதுடைய மூத்த பாகவி ஆலிம் என்பது குறிப்பிடத்தக்கது.* மர்ஹும் மெளலானா அபூபக்கர் ஹழ்ரத் அவர்கள், சமீபத்தில்  சென்னை மண்ணடியில் நடைபெற்ற வேலூர் ஜாமிஆ  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மத்ரஸாவின் நிறுவனர்  அஃலா ஹழ்ரத் அவர்களின் நூற்றாண்டு நினைவு  விழாவில் கலந்து கொண்டவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின்  நல்லறங்களை, ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து  தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில்  நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார்,  உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கு...

தனுஷ்கோடி நடந்தது என்ன?

Image
தனுஷ்கோடி நடந்தது என்ன? ஒரு அற்புத பதிவு,,, டிசம்பர் 22 1964... தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கவில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு, எப்போது கரையைக் கடக்கப்போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை 'புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும், மழை பெய்யும், கடலுக்குள் செல்லக் கூடாது....' என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது தெரியும், ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது. ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், காற்றின் வேகம் தீவிரம் அடைந...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு