அது ஒரு மோசமான காலம் !!!


மவ்லவிகள் மிக மோசமாக மேடைகளில் விமர்சிக்க பட்டார்கள்.
மத்ஹபு தர்ஹா போன்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக 
மக்களிடம் சொல்லப்பட்டது.

மேடைக்கு தைரியம் இருந்தால் வா வந்து பதில் சொல். தைரியம் உண்டா?திராணி இருக்கிறதா?என்று மேடைக்கு மேடை சவால் விட்டது 
வஹாபிஸ பிஸாசுகள்.

பதில் சொல்ல முடிந்த ஆற்றல் உள்ள பல மவ்லானாக்கள் நமக்கு 
எதற்கு வம்பு என்று ஒதுங்கி இருந்தார்கள்.

சில ஆலிம்கள் வஹாபிஸ கொடியவர்களால் தாக்கப்பட்டார்கள்.

கல்யாண வீட்டில் இருந்து கபர்ஸ்தான் வரைக்கும் குழப்பம்.
தீனுக்காக உள்ள பல விஷயங்களை தீனிக்காக செய்கின்றார்கள் என்று மக்களில் பலர் ஆலிம் களை இழிவாக எண்ணத்துவங்கியிருந்தார்கள்.
இந்நேரத்தில் அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் தலைநகரில் இருந்து புறப்பட்ட மாமனிதர் ஷேக் அப்துல்லா ஜமாலி ஹலரத் கிப்லா.

எளிய மனிதர்.பழக இனிய மனிதர்.சிறந்த கல்விமான்.ஒழுக்கத்தை உயிராக எண்ணுபவர். பெருமானாரை (ஸல்) உயிரினும் மேலாக எண்ணுபவர்.சிறிய வயது ஆலிம் களையும் ஆளாக்கி உருவாக்க என்னும் பெரிய மனதுக்காரர்.சமரசமில்லா கொள்கைவாதி.எதிரிகளின் சிம்ம சொப்பனம். 

கேள்விக்கு பதில் சொல்ல பத்திரிகையில் கட்டுரை எழுத ஒவ்வொரு மேடைக்கும் தெருமுனை பிரச்சாரத்திற்கும் மாநாட்டு உரைக்கும் வெளிநாட்டு பயானுக்கும் ஆன்லைன் பதிலுக்கும் பணம் .எல்லாவற்றிற்கும் பணம்.இப்படி எதிரிகள் பணமழையில் குளித்து உயர்தர வாகனத்தில் வந்த இறங்கி பாதுகாப்பு வீரர் களுடன் பவனி வரும் போது தனது சொந்த செலவில் பயணம் செய்து பணத்தை எதிர்பார்க்காமல் களப்பணி செய்து மகத்தான வெற்றி பெற்றவர் எங்கள் ஜமாலி ஹலரத் கிப்லா.

அவரின் வறுமையால் புதிய பயணம் பத்திரிகையை 
தொடர முடியாமல் போனது.

மூன் டிவியில் விளக்கம் தருபவரால் மூன் மார்க்கெட் வைக்க 
முடியாமல் போனது.

இன்னும் வாடாகை வீட்டு வாழ்கை வாழ்கிறார் சொர்க்க 
மாளிகைகளின் அதிபதி.

எளியவனின் ஓட்டு வீட்டிற்கு வருகை தந்து கட்டிலில் கூட 
அமராமல் சிறிய வயது மவ்லவிகளுடன் தரையில் அமர்ந்து உணவு உண்ட போது 
பல அலுவல்கள் இருந்தபோதும் தொலைபேசியில் சந்தேகம் கேட்கும் போது நிதானமாக புரியும் படி பதில் அளித்து திருப்தி படுத்தும் போது

உங்களது வடகரை எனக்கு ரொம்ப பிடிக்கும் மவ்லானா என்று குழந்தை போல இயற்கை அழகை ரசிக்கும் போதும்

உயர்ந்து நின்றவர் எங்கள் ஜமாலி ஹலரத் கிப்லா.
இப்போது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்கள்.இது 
அவர்களுக்கு சாதாரணம்.எனினும் எங்களின் மனம் 
மகிழ்கிறது.இதயம் இனிக்கிறது.

யா அல்லாஹ் ஜமாலி ஹலரதின் ஆயுளை 
ஆரோக்கியத்துடன் அதிகரிப்பாயாக

யா அல்லாஹ் இன்னும் அவரின் களப்பணி தமிழ் மக்களுக்கு தேவைப்படுகிறது.அதற்கு 
மனபலத்தை அவருக்கு வழங்குவாயாக

வஹாபிஸ பிஸாசுகள் அவரால் அழிந்தது என்ற பெரும் 
பேற்றினை அவருக்கு வழங்குவாயாக

நபி புகழ் பாடிய ஹஸ்ஸான்(ரலி)க்கு ஜிப்ரீலை கொண்டு பலப்படுத்தியதைப்போல மலக்குமார்களை 
கொண்டு அவர்களை பாதுகாப்பாயாக

எழுத்தால் பேச்சால் அவர் புரிந்த சேவையை 
பொருந்திக் கொள்வாயாக

அதற்கு உண்டான மகத்தான கூலியை இம்மை 
மறுமையிலும் நிறைவாக வழங்குவாயாக...
ஆமீன்.
ஷாஹூல் ஹமீது வாஹிதி.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு