Posts

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது . மன நிம்மதி நிறைகிறது . உறவுகள் ஒன்று கூடுகிறது . ஏழைகள் பசியாறுகிறார்கள் . பள்ளி , மத்ரஸாக்கள் பயனடைகிறது . இறையருல் இறங்குகிறது . தியாக உணர்வு உயர்கிறது . ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது . கூட்டுறவு மேம்படுகிறது . வறியவர்கள் வளம் பெறுகிறார்கள் . அனாதைகள் பலம் பெறுகிறார்கள் . முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும்,வாழ்த்துக் கூறி அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottaisunnathjamath.blogspot.com , ,

தலைநகரில் உதயமாகிறது புதிய அரபுக் கல்லூரி

Image
மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவான மார்க்கக் கல்விக்கான அரபுக் கல்லூரி மிக விரைவில் மலேசியத் தலைநக ர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கப்பட உள்ளது . பல நூறு ஆண்டுகளாக மலாயா தீபகற்பகத்தில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வசித்து வரும் பகுதி க ளில் சிறு சிறு மதரஸாக்களை நிறுவி தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்து வருகின்றனர் . மேலும் மார்க்க கல்வியை முழுமையாக படித்து  ஆலிம் , ஹாபிழ் படிப்புகளை கற்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் நிலையே தொடர்கிறது . மலேசிய இந்திய முஸ்லிம்கள் மலேசியாவிலேயே முழுமையாக அரபுக் கல்லூரியில் பயிலும் நீண்ட நாள் கனவான அரபுக் கல்லூரி திட்டம் தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் வளாகத்தில் அல் ஹகீமிய்யா அரபுக் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி விரைவில் உதயமாக உள்ளது . இக்கல்லூரியில் ஸில்ஸிலே நிஜாமிய்யா பாடத்திட் ட ப்படி முழுமையான பாடங்கள் நடைபெறும் . முழுநேர அ...

சித்தாரிய்யா அரபுக்கல்லூரியில் மாபெரும் முப்பெருவிழா

பிஸ்மிஹி தஆலா சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரி 9- ஆம் ஆண்டு நிறைவு விழா நான்காவது '' மௌலவி '' ஆலிம் பட்டமளிப்பு விழா மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஹிஜ்ரி 1432 ஷவ்வால் பிறை (24 23-09-2011) வெள்ளிக்கிழமை , நேரம் மாலை 3-00 மணியளவில் இடம் மஸ்ஜித் தையிபா புதிய கட்டிட அரங்கம் சித்தாரிய்யா அரபுக்கல்லூரி புதிய வளாகம் சித்தார் கோட்டை . மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா தலைமை ; சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் M. ஷாஹுல் ஹமீது கனி .Bsc அவர்கள்   முன்னிலை வகிப்பவர்கள் ; வள்ளல் அல்ஹாஜ் S. தஸ்தகீர் அவர்கள் . அல்ஹாஜ் S.M. கமருல் ஜமான் A.E.A.A.(Lon) அவர்கள் ஜனாப் S. ஆரிஃப்கான் அவர்கள் . அல்ஹாஜ் வள்ளல் முஹம்மது யூசுப் அவர்கள் . வாழூர் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் E. காதர் அவர்கள் . இராமநாதபுர   மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜனாப் A.R. துல்கீப் அவர்கள் . புதிய பள்ளிவாசல் திறப்பாளர் ;- மலேசிய தொழிலதிபர் அல்ஹாஜ் டத்தோ A. அப்துல் அஜீஸ் அவர்கள் . RESTORAN SUBAIDHA SDN BHD MALAYSIYA சிறப்புத...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு