ரபீஉல் ஆகிர் 7-முதல் ரபீஉல் ஆகிர் 28 வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.
விழுப்புரம் மஸ்ஜிதே இஃக்லாஸ் வளாகத்தில், நிஸ்வான் மதரஸாவுக்கு வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.நிகழ்ச்சியில் பொதுமக்களும்,முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் கிளை சார்பாக மீலாது விழா, மந்தக்கரை திடலில் நடைபெற்றது.இதில் வேலூர் பாக்கியாத்தின் முன்னால் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முஹைதீன் அவர்களும்,மற்றும் முஸ்லிம் லீக்கைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். சென்னை சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பின் அறிமுக மாநாடு எழும்பூர் கென்னட் லேன் சிங்கப்பூர் பிளாஸாவில், மார்ச் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.காயல் பட்டிணம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி எஸ்.சையிது அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், அகில இந்திய ஜம்மீயத்துல் உலமா சபை பொதுச் செயலாளர்,க...