நன்மைகளை அள்ளித் தரும் புனிதம் நிறைந்த ரமலான் மாதம்
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே ! நன்மைகளை கொள்ளை கொள்ளக்கூடிய, இன்னும் பாவங்களை சுட்டெரிக்கக்கூடிய, சங்கையான, புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வே ண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வே ண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- பரக்கத்தான ஸஹர்...