Posts

ஹிஜ்ரி சகாப்தம் 1436 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Image
''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 479/3 முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக (தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. (தாரிகுத்தபரி 3/2) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு, நில அசைவு ஆண...

ஜமாஅத்துல் உலமா சென்னை மாவட்டம். ஹிஜ்ரத் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் காஷ்மீர் மக்களுக்கான நிதியளித்தல்.

Image
இடம்: மஸ்ஜிதே ஹக்கானி வடபழனி. நாள்: 28: 10: 2014 காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை. தலைமை: மௌலானா அல்ஹாஜ் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா  (தலைவர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை). வரவேற்புரை :  மௌலவி A.காஜா ஜமாலி  (பொதுச்செயலாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்) . தொடக்கவுரை:  மௌலானா G.M தர்வேஷ் ரஷாதி  (தலைவர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்). சிறப்புரை:  மௌலானா A.முஹம்மது ரிழா பாஜில் பாக்கவி  (பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஜ.உ.ச), மௌலானா இலியாஸ் ரியாஜி (இமாம் மந்தவெளி சென்னை). வாழ்த்துரை:  மௌலானா அப்துல் அஹத்  (தலைவர் ஜ.உ.ச காஞ்சிபுரம் மாவட்டம்), நன்றியுரை:  மௌலானா அபூதாஹிர் சிராஜி (பொருளாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்). குறிப்பு: இந்நிகழ்ச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  காஷ்மீர் மக்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகையை  உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.  நிதியை வழங்குபவர்;-  ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் ஹஜ்ரத் கிப்லா. நிதிைய பெற்றுக்கொள்பவர்;-  Dr. ஜபருல் இஸ்லா...

புனிதம் வாய்ந்த ஆஷுரா ஓர் ஆய்வு !!!

Image
ஆஷூரா – பெயர் விளக்கம். ஹிப்ரு மொழியைச் சார்ந்த இச்சொல்லின் பொருள் பத்தாவது நாள் என்பதாகும். யூதர்களின் 'திஷ்ரி'மாதத்தின் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது.யூதர்களின் 'திஷ்ரி' மாதம் பத்தாம் நாளிற்கு இந்தப் பெயர் இருந்தது. யூதர்களின் 'திஷ்ரி; மாதம் பத்தாம் நாளும், அரபிகளின் 'முஹர்ரம்' மாதம் பத்தாம் நாளும் இணையாக வருவதாகும். அல்லாஹ் குறிப்பிட்ட நாளிலேயே அடுத்தடுத்துத் தன் பத்துக் கற்பனைகளை வெளிப்படுத்தியதால்'ஆஷூரா' நாள் என்று பெயர் பெற்றதாக மெய்நிலை கண்ட ஞானி முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கீழ்கண்டபடி அறிவிக்கிறார்கள். 1. ஹள்ரத் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நீண்டகால பச்சாதாப வேண்டுகோள் ஏற்கப்பட்டதும், 2. ஹள்ரத் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுவனப் பெருவாழ்வு கிட்டியதும், 3. ஆறு மாத காலம் பிரளயத்தில் சிக்குண்டு தவித்த ஹள்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மரக்கலம் ஜூதி மலை ஓரம் ஒதுங்கியதும், 4. ஹள்ரத் இபுறாகீம் அலைஹிஸ்ஸலாம் பிறந்ததும், அல்லாஹ் அவர்களைத் தன் கலீபாவாக ஏற்றதும், நம்ரூதுடைய நெருப்புக் குண...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு