Posts

நமது நாயகம் நாகூர் அல் குத்துபுல் மஜீத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் ( ரலி) அவர்களைப் பற்றி இஸ்லாமியப் பாடகர் இராமநாதபுரம் மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள் பாடிய பாடல்.

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

புனித நாகூர் ஓர் ஆய்வு !!!

Image
புனித நாகூரைப்பற்றி !!! நாகூர்  ;- இப்பெயருடன் கூடிய, ஊர் தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் உள்ளது.இங்கு முற்காலத்தில் நாகமரம்,  ( புன்னை மரம் ) அடர்ந்து வளர்ந்திருந்ததின் காரணமாக,நாகப்பூர்  என ஆகிப் பின்னர் நாகூர் என்று மறுவிற்று என்று கூறுவர். இவ்வூரில் அல் குத்புல் மஜீது ஷாஹுல் ஹமீது பாதுஷா  நாயகம் அவர்கள் வந்து 28 ஆண்டுகள் தங்கியிருந்து,சன்மார்க்க சேவை செய்து,அடங்கப்பெற்றிருப்பதின் காரணமாக,இவ்வூர்  தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது.நாள்தோறும்,இவர்களின் அடக்கவிடத்திற்கு,மக்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டுள்ளனர். ஆண்டு தோறும் நிகழ்வுறும் இவர்களின் நினைவுநாள்  விழாவிற்கு,மக்கள் நாலா பக்கங்களிலிருந்தும்,வந்து குழுமுகின்றனர். புலவர் கோட்டை என்று  பெயர் பெற்ற இவ்வூர்,பல தமிழ் புலவர்களை ஈன்றெடுத்திருக்கிறது.குலாம் காதிறு நாவலரும்,அவரின் மகன் ஆரிஃபு நாவலரும்,இவ்வூரைச் சேர்ந்தவர்களே.சீரியர் செவத்த மரைக்காயர் என்ற புலவரும்,இவ்வூரில் தோன்றியவரே. இன் னும் சில புலவர்களும் இவ்வூரில் தோன்றி வாழ்ந்துள்ளனர்.இவ்வூரில் ஏழு பள...

வானவியல் வல்லுநர் அல்ஃபலக்கி, கட்டுமாவடி,மௌலானா மௌலவி M.K.M.கதீப் ஷாஹிப் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் மறைவு !!!!

Image
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார்கோட்டை,ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி,சித்தார்கோட்டை பாத்திமா பீவி பெண்கள் அரபுக் கல்லூரி,மற்றும் தொண்டி,அஜ்ஹாரிய்யா அரபுக் கல்லூரி ஆகியவைகளின் முன்னால் முதல்வரும்,மதுரை ஓத்தகடை நாஃபிஉல் உலூம் மத்ரஸா உஸ்தாத், வானவியல் வல்லுநர் அல்ஃபலக்கி, கட்டுமாவடி,மௌலானா மௌலவி M.K.M.கதீப் ஷாஹிப் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பயீ அவர்கள்,29/03/2015 அன்று காலை 12 மணி அளவில், தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் ஹழ்ரத் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கி...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு