Posts

சென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் !!!

Image
சென்னை மண்ணடியில் உள்ள மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலின்  சரித்திரம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!!!!!!! ஆம் அதை கட்டியவர் ஆற்காடு நவாபு அவர்கள்  இது ஒரு ஷாபி பள்ளிவாசல்...... இந்த பள்ளிவாசல் கட்டியதின் நோக்கம்????? ஒரே ஒரு ஹதீஸ் வசனம்தான்!!!!! ஒரு முறை ஆற்காடு நவாப் அவர்கள் நபி(சல்லல்லாஹு அளைஹிவசல்லம்) அவர்களின் ஹதீஸை படித்து கொண்டு இருக்கையில் ஒரு வாசகத்தை மட்டும் திரும்ப திரும்ப ஓதினார்கள். இந்த உலகம் காபிர்களின் சொர்க்கம், முஸ்லிம்களின் சிறைச்சாலை.... இப்போது நவாபுக்கு வருத்தம் அதிகமாகி விட்டது நாமோ பகட்டான அரண்மனை வாழ்க்கை, உயர்ந்த உடை, பலவகை உணவு, செல்வ செழிப்பான வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அல்லாஹ்(svt) முஸ்லிம்களுக்கு இந்த உலகம் சிறைச்சாலை என்று அல்லவா கூறுகிறான் என்று......... உடனே ஊரில் உள்ள அத்துனை ஆலிம்கள் மற்றும் உலமாக்களை அழைத்து அவர்களை கண்ணியம் செய்யும் விதமாக விருந்தும் படைத்தார்கள்.  அந்த விருந்துக்கு வந்திருந்த அணைத்து ஆலிம்கள், உலமாக்களுக்கு தன் கையாலேயே அவர்கள் கைகளை கழுவ தண்ணீர் ஊற்றினார் நவாப். மன்னர் தண்ணீர் ஊற...

இராமநாதபுரத்தை கலக்கும் இஸ்லாமிய மருத்துவர்கள் குடும்பம் !!!

Image
ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களான ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம், சேதுபதி அரண்மனை என்ற வரிசையில், செய்யதம்மாள் மருத்துவமனையையும் சொல்ல வேண்டும். மாவட்டத்தின் முதல் தனியார் மருத்துவமனை. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் மர்ஹூம் அப்துல்லாஹ் இந்த மருத்துவமனையை ஆரம்பித்தார்கள். அவரது மறைவுக்குப் பிறகு, இது மூன்றாவது தலைமுறை. மறைந்த டாக்டர்  மர்ஹூம் அப்துல்லாஹ்வுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். மூத்தவர் டாக்டர் செய்யதா, மகப்பேறு மருத்துவா், பாபு அப்துல்லா பொது மருத்துவர், அவரது மனைவி சுல்தானா மகப்பேறு மருத்துவர், சின்னதுரை அப்துல்லா ரேடியாலஜி மருத்துவர், அவர் மனைவி பாத்திமா மகப்பேறு மருத்துவர். இவர்களின் வாரிசுகளும் மருத்துவர்களே. இவர்களின் குடும்பத்தில் தற்போது 20 மருத்துவர்கள் பிராக்டீஸ் செய்துவருகிறார்கள். மருத்துவத்தை சேவையாகத் தன் தந்தை தொடங்கிய கதையைச் சொல்கிறார் டாக்டர் பாபு அப்துல்லா. “சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர் என் அப்பா. கஷ்டமான சூழலில், அவரின் தாயார் மர்ஹூமா செய்யதம்மாள்தான் படிக்கவைத்தார். பத்தாம் வகுப்புக்கு மேல் வீட்டின் சூழ்நிலை படிக்கவி...

தூக்கம் !!!

Image
"ஹாசியதுள் புஹைரிமியில் " சொல்கின்றார்கள் : * பகலின் ஆரம்பத்தில் (சுபஹுக்குப் பின் ) தூங்குவது  வறுமையை உண்டாக்கும். * லுஹா நேரத்தில் தூங்கினால் உடலில்  சோம்பலை  ஏற்படுத்தும். * சூரியன் நடு உச்சிக்கு வரும் பகல் நேரத்தில்  தூங்குவது  அறிவாற்றலை அதிகப்படுத்தும். * சூரியன் நடு உச்சியிலிருந்து மேற்குத் திசைப் பக்கம்  சாய்ந்த விட்ட பிறகு தூங்குவது ,அவனுக்கும்  தொழுகைக்கும் இடையில் தடையாக ஆகிவிடும். * பகலின் கடைசியில் (அசருக்குப் பின் ) தூங்குவது  அழிவை , நாசத்தை ஏற்படுத்தும். மேலும் ஸுப்ஹ் , அசர் நேரம் அல்லாத நேரங்களில்  கூட அதிகமாக தூங்குவது பழிப்பிட்குறியதாகும்.அது  அதிகமான இவ்வுலக ,மறுவுலக நஷ்டங்களை ஏற்படுத்தும். அதிகமான தூக்கம் கீழ் காணும்  விளைவுகளை ஏற்படுத்தும் , * மறதியை , சந்தேகத்தை ஏற்படுத்தும், * சளியை அதிகப்படுத்தும், * உடல் நிறத்தை கறுப்பாக்கும், குடலை பலகீனமாக்கும்., * வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும், * பார்வையை பலகீனப்படுத்து...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு