Posts
அது ஒரு மோசமான காலம் !!!
- Get link
- X
- Other Apps
மவ்லவிகள் மிக மோசமாக மேடைகளில் விமர்சிக்க பட்டார்கள். மத்ஹபு தர்ஹா போன்ற வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளாக மக்களிடம் சொல்லப்பட்டது. மேடைக்கு தைரியம் இருந்தால் வா வந்து பதில் சொல். தைரியம் உண்டா?திராணி இருக்கிறதா?என்று மேடைக்கு மேடை சவால் விட்டது வஹாபிஸ பிஸாசுகள். பதில் சொல்ல முடிந்த ஆற்றல் உள்ள பல மவ்லானாக்கள் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கி இருந்தார்கள். சில ஆலிம்கள் வஹாபிஸ கொடியவர்களால் தாக்கப்பட்டார்கள். கல்யாண வீட்டில் இருந்து கபர்ஸ்தான் வரைக்கும் குழப்பம். தீனுக்காக உள்ள பல விஷயங்களை தீனிக்காக செய்கின்றார்கள் என்று மக்களில் பலர் ஆலிம் களை இழிவாக எண்ணத்துவங்கியிருந்தார்கள். இந்நேரத்தில் அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தின் தலைநகரில் இருந்து புறப்பட்ட மாமனிதர் ஷேக் அப்துல்லா ஜமாலி ஹலரத் கிப்லா. எளிய மனிதர்.பழக இனிய மனிதர்.சிறந்த கல்விமான்.ஒழுக்கத்தை உயிராக எண்ணுபவர். பெருமானாரை (ஸல்) உயிரினும் மேலாக எண்ணுபவர்.சிறிய வயது ஆலிம் களையும் ஆளாக்கி உருவாக்க என்னும் பெரிய மனதுக்காரர்.சமரசமில்லா கொள்கைவாதி.எதிரிகளின் சிம்ம சொப்பனம். ...