Posts

Showing posts from March, 2012

உத்தம திருநபியின் மாபெரும் உதய தின விழாக்கள்

From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com >   மூன் டிவி ஷரீஅத் சட்டத்தின் புகழ் , சென்னைப் பல்கலை கழக அரபி உருது பாரஸீக விரிவுரையாளர் டாக்டர் முனைவர் மௌலானா மௌலவி அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் அவர்கள்  துபாயில் அதிகமான இடங்களில் நடைபெற்ற மீலாது பெருவிழாக்களிலும் , கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும் , சிறப்புரையாற்றினார்கள் . மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் பிஎ . காஜா முஹ்யத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் அபுதாபியில்  அதிகமான இடங்களில் நடைபெற்ற மீலாதுப் பெருவிழாக்களில் சிறப்புரையாற்றினார்கள் சென்னையைச் சேர்ந்த மௌலானா மௌலவி முஹம்மது பக்ருத்தீன் பாகவி ஹஜ்ரத் , வேலூர் பாக்கியாத்தின் முன்னால் பேராசிரியர் மௌலானா மௌலவி ஆதம் ஹஜ்ரத் , மற்றும் வேலூர் பாக்கியாத்தின் பேராசிரியர் மௌலானா மௌலவி அப்துல் ஹமீது ஹஜ்ரத் , மஸ்ஜித் இந்தியாவின் முன்னால் இமாம் ,  சென்னை மௌலானா அப்துல்லாஹ் பாகவி ஹஜ்ரத் ஆகியோர்கள் பினாங்கு மற்றும் மலேசியாவில் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்ற மீலாதுப்  பெருவிழாக்களிலும் சிறப்புறையாற்றினார்கள் . சுன்ன...

பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள்

From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com > சென்னையில் 24 ஆம் தேதி வியாசர்பாடி சுபுஹானியா மஸ்ஜிதில் நடைபெற்ற மீலாது விழாவில் மௌலானா பி எஸ்ஏ அபுதாஹிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள் . சென்னை மடுவன்கரையில் 28 ஆம் தேதி மஸ்ஜிது நூரில் நடைபெற்ற   மீலாது விழாவில் மௌலானா  எம் நிஜாமுத்தீன்  அஹ்ஸனி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள் . மயிலாப்பூரில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற மீலாது விழாவில் வேலூர் பாக்கியாத் முன்னால் முதல்வர் அல்லாமா பி . எஸ் . பி . ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா மற்றும் சென்னை ஜமாலியாவின் முதல்வர்   மௌலானா சைய்யது நியாஸ் அஹ்மது ஜமாலி ஹஜ்ரத் , மந்தைவெளி இமாம் மௌலானா இல்யாஸ் ரியாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் . சென்னை சைதாப்பேட்டையில் பிப் 4 ஆம் தேதி நடைபெற்ற மீலாது விழாவில் மௌலானா எம் நிஜாமுத்தீன் அஹ்ஸனி ஹஜ்ரத்  சிறப்புரையாற்றினார்கள் . சென்னை ஆயிரம் விளக்கில் பிப் 4 ஆம் தேதி நடைபெற்ற மீலாது விழாவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர்   மௌலானா   ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரைய...

வாழூரில் ஹஜ்ரத் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா

From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com > பிஸ்மிஹி தஆலா ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 30- (23-02-2012) ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை ரபியுல் ஆகிர் முதல் பிறை தென்பட்டதினால், ஆங்கிலமாதம் (24-02-2012) -ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரபியுல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை  கீழக்கரை  ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வரும்,தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியார்  அஃப்ழலுல் உலமா மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள்  தெறியப்படுத்தினார்கள். இதன் அடிப்படையில் வாழூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்களிலும். ரபியுல்  ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள் முஹ்யத்தீன் ஆண்டகை  அவர்களின் மௌலிது ஸரீஃப் சிறப்பாக  ஓதப்பட்டு.(05-03-2012) திங்கள்  காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில் வாழூர் இமாம் மற்றும் சித்தார் கோட்டையின் மூன்று இமாம்களின்...

கோவை மாவட்ட சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு நடத்திய மாபெரும் மீலாது மாநாடு.

பிஸ்மிஹி தஆலா அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளாலும்,பூமான் நபி (ஸல்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்,நாதாக்களின் நல்லாசியாலும்,சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பாக உத்தம நபி (ஸல்)அவர்களின் 1486 வது உதயதின விழா 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 4-30 மணியளவில் கரும்புக்கடை சாரமேடு ரோட்டில் அமைந்துள்ள கிரசென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்தில்  மிகச்சிறப்பாக   நடைபெற்றது. அது சமயம் அகில இந்திய சுன்னத் வல் ஜமாஅத் ஜம்மியத்துல் உலமா சபை பொதுச் செயலாளரும்,மௌலானா, மௌலவி அல்ஹாஜ், அபுல்அய்தாம், கமருல்உலமா, ஷைகுனா, கேரள மாநிலம் காந்தபுரம்  A.P.அபுபக்கர் முஸ்லியார் ஹஜ்ரத் கிப்லா அவர்கள் ஹுப்பூ ரஸுல் (ஸல்) என்ற  தலைப்பில் சிறப்புப்பேருரை வழங்கினார்கள்.  பெங்களூர் தாருல் உலூம் ஸஃபிலுர் ரஷாத் அரபுக்கல்லூரி பேராசிரியர் மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.ஷைபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் சத்தியமார்க்கமும் சமீப குழப்பங்களும்,என்ற தலைப்பில் சிறப்புறையாற்றி...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு