ஜமாஅத்துல் அவ்வல் பிறை 3-முதல் ஜமாஅத்துல் அவ்வல் பிறை 25-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

சென்னை வியாசர்பாடி,7-வது தெரு S.A.காலனியில் புதுப்பிக்கப்பட்ட ஷுபுஹானியா மஸ்ஜிது, மற்றும் மதரஸா திறப்புவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற்றது.விழாவில், மௌலானா A.K.சிப்கதுல்லாஹ் ஆலிம் பாகவிM.A.Mphil  அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.தாய்ச்சபைத் தலைவர்,பேராசிரியர் கே.எம். காதிர் முஹைதீன் அவர்கள் பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்கள்.ஜமாலியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி M.அப்துர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத்,மஸ்ஜித் மஃமூர் தலைமை இமாம்,மௌலானா O.S.M. இல்யாஸ் ஆலிம் காஸிமி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில் மௌலானா A.M.M.இப்றாஹிம் ஆலிம் அவர்கள் துஆ ஓதினார்கள்.


மீலாது நபி (ஸல்)விழா, முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா,சுன்னத் ஜமாஅத் பேரியக்க கிளை துவக்கவிழா,ஆகிய முப்பெரும் விழா, சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் சார்பாக ஏப்ரல் 8-ஆம் தேதி,சென்னை தண்டையார்பேட்டை,நேதாஜிநகர்,3-வது தெருவில் உள்ள கீழக்கரை கல்வத்து நாயகம் மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் மௌலானா மௌலவி ஷாஹுல் ஹமீது ஆலிம் மஹ்ழரி அவர்கள்,கிராஅத் ஓதினார்கள்.மௌலானா ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் ஆமிரி ஜமாலி,மௌலானா அப்துல் அஜீஸ் ஆலிம் ஜமாலி,ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.சுன்னத் ஜமாஅத்பேரியக்கத் தலைவர்,மௌலானா மௌலவி M.ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்,நாமும்-நபிகள் நாயகமும் என்ற தலைப்பில் சிறப்புப்பேருரை நிகழ்த்தினார்கள்.சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் செயலாளர்,மௌலானா அல்ஹாஃபிழ் A.K.A.ஷரபுத்தீன் ஆலிம் ஃபைஜி அவர்கள்,பெண்கள் இஸ்லாத்தின் கண்கள் என்ற தலைப்பிலும்,சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் M.P.முஹம்மது நாசர் அவர்கள்,கல்வியும்-இஸ்லாமிய இளைஞர்களும் என்ற தலைப்பிலும்,சிறப்புரையாற்றினார்கள்.

 சென்னை பல்கலை கழகத்தால் அஃப்ஸலுல் உலமா தேர்வுக்காக நடத்தப்படும்,இந்த ஆண்டின் செமினார் வகுப்புகள்,சென்னை நெமிலி பிலாலியா,வண்டலூர் புஹாரி ஆலிம்,கைருல் பரிய்யா ஆகிய அரபுக்கல்லூரிகளில் ஏப்ரல் 22-முதல் மே-1-ஆம் தேதி வரை நடைபெற்றது.இதை அஃப்ஸலுல் உலமா பட்டதாரிகள் பேரவை செயலாளரும்,சென்னை நெமிலி பிலாலியா அரபுக்கல்லூரி தாளாலருமான, மௌலானா ஏ.எம்.முஹம்மது நிஸார் ஆலிம் ஃபாஜில் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் தெரிவித்தார்கள்.

லால்பேட்டையில் ஏப்ரல் 21-ஆம் தேதி லால்பேட்டை புது பஜார் காயிதே மில்லத் சாலையில், மழை வேண்டி புனித மௌலிது ஷரீஃப் ஓதி சிறப்பு துஆச்செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் துணைத் தலைவர்,மௌலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் ஹஜ்ரத் அவர்களும்,மலேசியாவிலுள்ள மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் பேராசிரியர், மௌலானா மௌலவி முஹம்மது ஸாலிஹ் ஆலிம் பாகவி ஃபாஜில் தேவ்பந் ஹஜ்ரத் ஆகியோர் சிறப்பு துஆச்செய்தார்கள்,இதில் லால்பேட்டை பேரூராட்சித் தலைவர் ஏ.ஆர்.ஸபியுல்லாஹ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.இறுதியில் அனைவருக்கும் நேர்ச்சைகள் வழங்கப்பட்டது.

சென்னை அல்ஹாஜ் A.கௌஸ் பாஷா அவர்களின் இல்லத் திருமண விழா சென்னை தேனாம் பேட்டை S.I.E.T.மஹாலில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்றது.நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,மௌலானா மௌலவி,T.J.M.ஸலாஹுத்தீன் ஹஜ்ரத்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாப் பொருளாலர், மௌலானா மௌலவி S.M.முஹம்மது தாஹா ஹஜ்ரத்,சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமாத் தலைவர் மௌலானா O.S.M. இல்யாஸ் காஸிமி ஹஜ்ரத் அவர்கள்,சென்னை வண்டலூர் புஹாரி ஆலிம் அரபுக்கல்லூரி முதல்வர்,மௌலானா மௌலவி டாக்டர் சையத் மசூத் ஆலிம் ஜமாலி அவர்கள்,புஹாரி ஆலிம் அரபுக்கல்லூரிப் பேராசிரியர், மௌலானா மௌலவி A.ஜமால்தீன் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்,சென்னை K.V.H. அரபுக் கல்லூரி முதல்வர்,மௌலானா மௌலவி A.M.M.ஸாலிஹ் சேட் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள்.முஸ்லிம் லீக் மாநிலப் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் K.A.M.முஹம்மது அபுபக்கர் அவர்கள்,தத்துவக் கவிஞர் ஆலி ஜனாப் இ.பத்ருத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு துஆச்செய்து சிறப்புறையாற்றினார்கள்.இதில் ஏராளமான உலமாப்பெருமக்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

நாகை மாவட்டம்,தரங்கை வட்டம்,சங்கரன் பந்தலில் ஃபைஜுல் உலூம் அரபுக்கல்லூரியின் 50-ஆம் ஆண்டு விழா மற்றும் ஃபைஜுல் உலூம் அரபுக் கல்லூரி & நிக்காஹ் மஹால் திறப்பு விழா ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற்றது.நிகழ்ச்சியில் சங்கரன் பந்தல் மதரஸாவில் ஹாஃபிழ் பட்டம் பெற்று,மலேசியாவில் கூச்சிங் சரவாக்கில் ஷரீஅத் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தற்போது பணியாற்றும் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் டத்தோ M.முஹம்மது அலீ ஆலிம் அவர்கள் புதிய ஃபைஜுல் உலூம் அரபுக்கல்லூரியை திறந்து வைத்தார்கள்.தாய்ச்சபை பாராளு மன்ற உறுப்பினர் அல்ஹாஜ் M.அப்துர் ரஹ்மான் M.P. அவர்கள் புதிய ஃபைஜுல் உலூம் நிக்காஹ் மஹாலைத் திறந்து வைத்தார்கள்.சங்கரன் பந்தல் ஜாமிஆ மஸ்ஜித் துணை இமாம், மௌலானா மௌலவி K.M.ஷேக் உஸ்மான் ரஹ்மானீ ஆலிம் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.சங்கரன் பந்தல் ஃபைஜுல் உலூம் அரபுக் கல்லூரியின் முன்னால் முதல்வர்,ராஜகிரி மௌலானா மௌலவி அப்துல் லத்தீப் ஆலிம் ஹழ்ரத் அவர்கள் துவக்கவுரையாற்றினார்கள்.நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் முதல்வர், மௌலானா மௌலவி அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் M.முஹம்மது இஸ்மாயீல் ஆலிம் பாகவி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,ஷைகுல் ஹதீஸ்,A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான்ஆலிம் மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்கள் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.சங்கரன் பந்தல் ஜாமிஆ மஸ்ஜிதின் இமாமும்,ஃபைஜுல் உலூம் அரபுக் கல்லூரியின் பேராசிரியரும்,சங்கரன் பந்தல் உஸ்வத்துன் ஹஸனா பெண்கள் அரபுக்கல்லூரியின் முதல்வரும்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் E.S.ஷாஹுல் ஹமீதுஆலிம் 
 நிஜாமி,ரஹ்மானீ ஹஜ்ரத் அவர்களும்,புருனை தொழிலதிபர் அல்ஹாஜ் M.நஜீர் அஹ்மது அவர்கள் ஆகியோர் சிறப்பு மலரை வெளியிட்டார்கள்.

லால்பேட்டை அருகே காட்டு மன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் காட்டு மன்னார்குடி மஹல்லா ஜமாஅத்தார்கள் சார்பில் மீலாதுப் பெருவிழா,காட்டு மன்னார்குடி,உடையார்குடி முஸ்லிம் தெருவில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு காட்டு மன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் காரீR.Z. முஹம்மது அஹ்மது ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.உடையார் குடி பள்ளிவாசல் இமாம் மௌலானா சபியுர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் முன்னால் முதல்வர் மௌலானா மௌலவி முஃப்தி S.A.அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள், மாவட்டத் தலைவர் மௌலானா ஷபியுல்லாஹ் ஹஜ்ரத் மற்றும் காட்டுமன்னார்குடி பள்ளிவாசல் முத்தவலிகள்,நாட்டாண்மைகள் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் காரி A. நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள்,துவக்கவுரையாற்றினார்கள்.சேலம் நூருல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் M. முஹம்மது அபூதாஹிர் ஆலிம் பாகவி ஹஜ்ரத்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் மௌலானா மௌலவி M.O.அப்துல் காதிர் தாவூதி ஹஜ்ரத், தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா அபுல் பயான்,A.E.M.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் ஆகியோர் சன்மார்க்க நெறிமுறைகளையும்,பெருமானாரின் வழிமுறைகளையும்,சிறப்பான முறையில் விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.நிகழ்ச்சியில் சுற்றுப்புற ஊர்களிலிருந்து ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள்.இறுதியில் காட்டு மன்னார்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர்,கொள்ளுமேடு,மௌலானா ஏ.ஷைஃபுத்தீன் மன்பஈ அவர்கள் நன்றி நவில துஆவுடன் மீலாதுப் பெருவிழா இனிதே நிறைவடைந்தது.

சுன்னத் வல் ஜமாஅத் ஆன்மீகப் பேரவையின் தலைவரும்,ஆலிம் கவிஞர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ் தேங்கை ஸர்ஃபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்களின் சிறப்பு பயான் மஜ்லிஸ்கள் ஏப்ரல் மாத இறுதியில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலும்,பினாங்கு மாநிலத்திலும்,அதிகமான இடங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

வெளியீடு-மன்பஈ ஆலிம்.காம்
மற்றும் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு