லால்பேட்டையில் புனித மிகு புஹாரி ஷரீஃப் 36-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் துஆ மஜ்லிஸ்
லால்பேட்டையில் புனித மிகு புஹாரி ஷரீஃப் 36-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் துஆ மஜ்லிஸ் மே 22 ஆம் தேதி செவ்வாய் மாலை புதன் இரவு 9-00 மணியளவில் லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் தாருத்தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், காரீ முஃப்தி, A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.லால்பேட்டை J.M.A.அரபுக் கல்லூரியின் முன்னால் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,முஃப்தி,S.அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவரும்,லால்பேட்டை அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி,அபுல் பயான்,ஷைகுல் ஹதீஸ்,A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.இனாம் குளத்தூர் இன்ஆமுல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,ஆன்மீகப் பேரொளி,E.ஷாஹுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைகளும்,உலமாப் பெருமக்களும் உரையாற்றினார்கள்.இறுதியில் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் முதல்வர் சிறப்பு துஆ ஓதினார்கள்.இந்த சிறப்புமிகு நிகழ்விலும்,நிறைவாக நடைபெற்ற திக்ரு மஜ்லிஸிலும்,ஏராளமானோர் கலந்து கொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.
வெளியீடு-மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்
Comments
Post a Comment