நாகூர் தர்ஹா ஷரீஃப்-455-வது ஆண்டு பெரிய கந்தூரிவிழா
நாகூர் ஹஜ்ரத் குத்துபுல் அக்தாப் செய்யிது ஷாதாத் செய்யிதினா ஷாஹுல் ஹமீது காதிர் ஒலி கஞ்சவாய் கஞ்சபக்ஸ் பாதுஷா நாயகத்தின் பெரிய கந்தூரி விழா ஹிஜ்ரி 1433 ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றில் இருந்து ஜமாஅத்துல் ஆஹிர் பிறை பதிநான்கு வரை மிகச்சிறப்பாக நாகூர் ஷரீஃபில் நடைபெற்றது.மே மாதம் 5-ஆம் தேதி இரவு நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பெயரில் குர்ஆன் ஷரீஃப் ஓதி ஹதியா செய்யப்பட்டது, இது போன்று மலேசியத் தலைநகரில் தென் இந்தியப் பள்ளிவாசலில்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் இமாம்கள்,மேலப்பாளையம், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் S.S.அஹ்மது ஆலிம் பாகவி ஃபாஜில் தேவ்பந் ஹஜ்ரத்,மற்றும் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் நாசிர் அலி ஆலிம் உமரி ஹஜ்ரத் ஆகியோரது தலைமையில், ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து,ஜமாஅத்துல் ஆகிர் பிறை பத்து வரை பத்து தினங்கள்,தினமும் அஸர் தொழுகைக்குப் பின் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா (ரஹ்) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.இது போன்று பினாங்கு மாநிலம்,மற்றும் இலங்கையில் உள்ள கல்முனை நாகூர் தர்ஹாவிலும்,மௌலிது மஜ்லிஸ்கள்,திக்ரு மஜ்லிஸ்கள்,சிறப்பு பயான்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
வெளியீடு-மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
Comments
Post a Comment