ஜமாஅத்துல் ஆகிர் 11-முதல் ஜமாஅத்துல் ஆகிர் 26-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்

பாபநாசம் ஒன்றியம் ராஜகிரி ஊராட்சி,பீர்ஷா நகரில் மஸ்ஜித் மர்ஹூமா பாத்திமா பின்த் ஹஸன் என்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழா மே 3-ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி அல்லாமா ஓ.எம். அப்துல் காதர் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

கைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 6-வது பட்டமளிப்பு விழா,சென்னை எருக்கஞ்சேரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.தமிழக அரசின் தலைமை காஜி (காழியார்) மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஸலாஹுத்தீன் அய்யூபி ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்றார்கள்.மௌலானா மௌலவி ஏ.எம்.முஹம்மது நிஸார் ஜமாலி ஹஜ்ரத்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,கைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத், சென்னை நெமிலி பிலாலியா அரபுக் கல்லூரி நிறுவனர்,மௌலானா மௌலவி அல்லாமா பிலாலி ஷாஹ் ஜுஹூரி ஹஜ்ரத் ,மௌலானா டி.எஸ்.ஏ. அபூதாஹிர் ஹஜ்ரத்,மௌலானா நூர்தீன் ஆலிம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.நிகழ்ச்சியில் ஏராளமான உலமாப் பெருமக்களும்,பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

கடையநல்லூர் நூருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா மதீனா நகர் அர் ரஹ்மான் தெருவில், இமாம் கே.ஏ.அஹமது மீரான் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.தூத்துக்குடி அரபுக் கல்லூரியின் பேராசிரியர், மௌலானா ஷேக் உஸ்மான் ஆலிம் அனைவரையும் வரவேற்றார்கள்.தென்காசி ரப்பானியா அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா ஷம்சுத்தீன் ஹஜ்ரத் வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் பி ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள்,ஆலிமா பட்டம் பெறுபவர்களுக்கான ஸனது வழங்கி பேசினார்கள்.அய்யம் பேட்டை அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி பி.எம்.ஜியாவுத்தீன் அஹ்மது பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

திருவாரூர் மாவட்டம்,ஏனங்குடி புதிய கீழப் பள்ளிவாசல் திறப்பு விழா, மே 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை மிகச்சிறப்பாக நடைபெற்றது.காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கினைப்பாளர், அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி.அவர்கள் விழாப் பேருரையாற்றினார்கள்.சென்னை கானத்தூர்,மதினத்துல் இல்ம் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் நிறுவனர்,மௌலானா மௌலவி அல்லாமா எ.முஹம்மது ஷபீர் அலி ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

தமிழக அரசின் இராமநாதபுர மாவட்ட காஜியும்,கீழக்கரை அரூஸிய்யா தைக்காவின் முதல்வருமான,மௌலானா மௌலவி வி.வி.எ.ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி,ஃபாஜில் உமரி அவர்களின் இல்லத் திருமண விழா, ஏர்வாடி தர்ஹா ஸரீஃபில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாவின் கௌரவத் தலைவர்,அல்ஹாஜ் அல்லாமா டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம்,இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலப் பொருளாலர் எம் எஸ்.ஏ.ஷாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

லால்பேட்டை அருகில் ரெட்டியூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா, மே 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.லால்பேட்டை J.M.A. அரபுக் கல்லூரி முதல்வர்,மௌலானா மௌலவி காரீ,முஃப்தி,அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்று,பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்கள்.மௌலவி பஷீர் அஹ்மது மன்பஈ வரவேற்புரையாற்றினார்கள்.மௌலானா அப்துர் ரவூப் பாகவி ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவரும்,லால்பேட்டை J.M.A. அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,ஷைகுல் ஹதீஸ்,அபுல் பயான் A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா, சேலம் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ் முஹம்மது அபுதாஹிர் பாகவி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.லால்பேட்டை J.M.A.அரபுக் கல்லூரிப் பேராசிரியர்கள்,மௌலானா அப்துஸ் ஸமது ஹஜ்ரத்,ஜாகீர் ஹுஸைன் ஹஜ்ரத்,நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,மௌலானா அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத்,லால்பேட்டை மௌலானா தளபதி ஷபீஃகுர் ரஹ்மான் ஹஜ்ரத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு