வாழூர் (வாழும் ஊர்) அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா





முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
வாழூர் அல் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவின் 49- வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா ஜூன் 9-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3-30 மணிமுதல் இரவு 11-30 வரை, வாழூர் இளைஞர் முஸ்லிம் விளையாட்டுத் திடலில்,அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. S.செய்யது முஹம்மது சஹாபுதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.ஹாஜி A.ரஃபீக்குல்லாஹ் கான் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபைத் தலைவர் அல்ஹாஜ் E.காதர் அவர்கள்,அல்ஹாஜ் S.அஸ்ரஃப் அலி அவர்கள்,வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபை பொருளாலர் அல்ஹாஜ் A.புரோஸ்கான் அவர்கள்,வாழூர் முன்னால் தலைவர் அல்ஹாஜ் S.M.துல்கீப் அவர்கள்,அல்ஹாஜ் A.அஹ்மது சுல்தான் BA,B,PED.அவர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.வாழூர் இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் செயலாளர்,N.ஜியாவுல் ஹக் DEEE அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள். இஸ்லாமிய பாடகர், வாழூர் S.தௌலத் ரஹ்மான் அவர்கள் இஸ்லாமிய கீதம் பாடினார்கள்.விழாக்குழுவின் உபதலைவர் ஜனாப் S.தீன்ஷாதலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.வாழூர் அல் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப் பள்ளியின் இமாம் மௌலானா மௌலவி K.S.முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி அவர்கள், சித்தார்கோட்டை ஜும்ஆப் பள்ளியின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் காரீ M.அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்கள்,வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் செயலாளர் Y.உமர் ஃபாரூக் அவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலப்பாளையம் உதுமானியா அரபுக் கல்லூரியின் பேராசிரியர்,''அருள் மொழிச் செல்வர்''கலீஃபத்துஸ் ஷாதுலி, மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், P.A.காஜா முயீனுத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறபுப்பேருரையாற்றினார்கள்.விளையாட்டுக் குழுத் தலைவர் S.முஹம்மது ரஸாலி அவர்கள்,விழாக்குழு செயலாளர் A.முஹம்மது அஸாருதீன் M.BA.அவர்கள்,இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் தலைவர் H.செய்யது மன்சூர் அலி அவர்கள்,இளைஞர் முஸ்லிம் தமிழ் கழகத்தின் பொருளாலர் J.ஷேக் யூசுப் DCA.CCNA.அவர்கள்,அல்ஹாஜ் A.அபுல் ஹுதா அவர்கள்,டத்தோ J.செய்யது சிக்கந்தர் பாதுஷா அவர்கள்.அல்ஹாஜ் N.செய்யது அபூபக்கர் அவர்கள்,அல்ஹாஜ் E.செய்யது அஹ்மது அவர்கள்,ஜனாப் N.செய்யது இபுறாஹீம் அவர்கள்,சித்தார்கோட்டை ஜமாஅத் தலைவர்,I.M.A.தீனுல்லாஹ் கான் அவர்கள்,சித்தார்கோட்டை முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் Z.அப்துல் கனி அவர்கள்,சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர்,திரு U.சுந்தரம் அவர்கள்,தேவிபட்டிணம் காவல் நிலையத்தின்,திரு மதிப்பிற்குரிய காவல்துறை ஆய்வாளர் அவர்கள்,உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினார்கள்.சித்தார்கோட்டை முஹம்மதியா மேல் நிலைப்பள்ளியின் முன்னால் தலைமை ஆசிரியருமான,கீழக்கரை கண்ணாடி வாப்பா ஹமீதிய்யா அரபுக் கல்லூரியின் உதவித் தாளாலர்,ஜனாப் M.முஹம்மது இபுராம்ஷா Rtd,H.M.M.SC.Med நல்லாசிரியர் அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.ஜனாப் முஹம்மது இஸ்ஹாக் (துபை) அவர்கள்,ஜனாப் கமருஜமான் (மலேசியா) அவர்கள்,S.T.ஷாஜஹான் (புருனை) அவர்கள்,ஜனாப் S.ஹாஜா முஹைதீன் (மலேசியா) அவர்கள்,ஜனாப் சீனி ஹபீபுல்லாஹ் கான் அவர்கள்,ஜனாப் A.பஹ்ரூம் கான் அவர்கள்,மேலும் மலேசியா மற்றும் சவூதி வாழ் உள்ளூர் வாசிகள்,உள்ளூர் ஜமாஅத் பொதுமக்கள்,உள்ளிட்டோர் இச்சிறப்புமிகு விழா மென்மேலும் சிறக்க அகமுவந்து வாழ்த்தி துஆச்செய்தார்கள்.இப் பெருவிழாவில் தேவிபட்டிணத்தைச்சார்ந்த உலமாப் பெருமக்களும்,சித்தார்கோட்டை அல் ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்களும்,உலமாப்பெருமக்களும்,ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொண்டார்கள்.இறுதியில் பெருவிழா சிறப்பு துஆவுடன் நிறைவடைந்தது.வஸ்ஸலாம்..
வெளியீடு-
மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு