தமிழகத்தில் முதன் முறையாக பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால் நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம்
தமிழகத்தில் முதன் முறையாக சென்னை நெம்மேலி,பிலாலியா அரபுக் கல்லூரி மாணவர்களால், நடத்தப்படும் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம், இன்ஷாஅல்லாஹ் ஜுன் 28--ஆம் தேதி வியாழன் மாலை 6-30-முதல் 10-30-வரை சென்னை தி.நகர்,சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது.இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கத்திற்க்கு, வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,தமிழக அரசின் தலைமை காஜி அல்லாமா முஃப்தி, ஸலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் ஹஜ்ரத் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ்அல்லாமா A.E.M.அப்துற் றஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்,மலேசியத் தலைநகர், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் தலைமை இமாம்,மேலப்பாளையம்,அல்லாமா S.S.அஹ்மது பாக்கவி ஃபாஜில் தேவ்பந்தீ ஹஜ்ரத் அவர்கள்,கேரள மாநிலம்,திருவனந்தபுரம் ஜாமிஆ ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா A.சையத் முஸ்தபா ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்அவர்கள்,மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரிப் பேராசிரியர்,அல்லாமா P.A.காஜா முஈனுத்தீன் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் பேராசிரியர்,அல்லாமா A.மஹ்மூதுல் ஹஸன் ரஷாதி காஸிமி ஹஜ்ரத் அவர்கள்,திருப்பூர்,சிராஜுல் முனீர் அரபுக் கல்லூரியின் முதல்வர்,அல்லாமா A.முஹம்மது இல்யாஸ் ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,மதுரை ஜாமிஆ ரைஹான் அரபுக் கல்லூரி முதல்வர்,அல்லாமா N.A.முஹம்மது முஸ்தபா ரஷாதி ஹஜ்ரத் அவர்கள்,பள்ளப்பட்டி ஜாமிஆ மக்தூமிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் அல்லாமா K.M.அஷ்ரப் அலி ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவருமான,சென்னை,கைருல் பரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர் அல்லாமா M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் MA.அவர்கள், உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக,கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.மேலும் தமிழக உலமாப்பெருமக்களின் முன்னிலையிலும்,இம் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்கம் நடைபெறும்.நம் உயிரினும் மேலான உத்தம நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரம் ஆகியவற்றின் கண்ணியம் பாதுகாக்கும் பொருட்டு, நடைபெறும் மாபெரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.வஸ்ஸலாம்.
இங்ஙனம்--
ஹதீஸ் கலை ஆய்வுத்துறை,
பிலாலியா அரபுக் கல்லூரி,107,ECR Higway,
பெரிய நெம்மேலி,சென்னை--603104
9840538681--9840636314--9500503751
சிறப்புமிகு மாபெரும் ஹதீஸ் கலை ஆய்வரங்கம் மென்மேலும் சிறக்கவும்,இம் மாபெரும் ஹதீஸ் கலை ஆய்வரங்கத்திற்கு வருகை தரும் மதிப்பிற்கும்,மரியாதைக்குரிய,உலமாப்பெருமக்கள் அனைவரையும், இம் மாபெரும் ஹதீஸ் கலை ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ள வரும் அனைவரையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்,அகமுவந்து வரவேற்று,வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.
வெளியீடு-- மன்பஈ ஆலிம்.காம்
Comments
Post a Comment