Posts

Showing posts from August, 2012

நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் அரபுக் கல்லூரிகள் துவங்கியது!!!

Image
முதஅவ்விதன்!முபஸ்மிலன்!! முஹம்திலன்!! முஸல்லியன்!! வமுஸல்லிமா!!!    எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த  ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம் ஆகிவிட்டது. மார்க்கக்     கல்வியை தேடிப் பெறுவது  முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை  என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால்,  முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது  குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல், அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட (மக்தப்) அனுப்பாமல்  உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம்  எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு  முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, நரகவாதிகளின் குழப்பங்கள் அனாச்சாரங்கள், தீமைகள்,     அதிகமான பிரச்சினைகள்     காணப்படுகிறது. சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை     மார்கக்  கல்வியுடன் உலகக் கல்வியையும்     நமது இஸ்லாமிய  பெற்றோர்கள்     தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணியமிகு     ஹாஃபிழ்களாகவும், பட்டதாரிக...

இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்

Image
முதஅவ்விதன்முபஸ்மிலன்முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!  அருமைத் தாய்மார்களே! சகோதர சகோதரிகளே!  பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம்  மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை  எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமழான் மாதத்திலே  நமக்கு வழங்கினான்.பகலெல்லாம் நோன்பு வைத்து, இரவிலே இருபது ரக்கஅத்துகள் தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும்  அன்பையும், அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய  அன்பு நெஞ்செங்களே! உங்கள் அனைவர்களுக்கும்  இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும், இன்னும் ஆறு நோன்புகள் நோற்க இருக்கின்ற, உயர்ந்த  சீதேவிகளுக்கு ஆறு நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்  சார்பாக அகமுவந்து தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

ஷஅபான் பிறை 10 முதல் --ஷஅபான் பிறை 28 வரை நடைபெற்ற சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ்கள்

முதஅவ்விதன்!முபஸ்மிலன்!!முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)   ஆலிம்களின் சிறப்பு பயிற்சி முகாம் 13-06-2012 அன்று புதன் கிழமை காலை 9 மணிமுதல்  2 மணி வரை சென்னை-இராயபுரம் போலிஸ் ஸ்டேசன் எதிரில் உள்ள,ஜெய் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் கூட்டு துஆ,கழாத் தொழுகை,தராவீஹ் தொழுகை,தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு ஜனாஸா தொழுகை,தொழுகையில் விரல் அசைத்தல்,தொழுகையில் நெஞ்சின்மீது கை கட்டுதல்,பெருநாளில் திடல் தொழுகை,தொழுகைக்காக பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லுதல்,பெருநாள் தொழுகையில் தக்பீர் எண்ணிக்கை,பராஅத் இரவு, மேற்கண்ட தலைப்புகளில் நமது நிலைப்பாட்டிற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் என்ன? வஹ்ஹாபிகள் அவர்களின் நிலைப்பாட்டிற்கு எதை சான்றாக காட்டுகிறார்கள்?அவற்றிற்கு நமது தரப்பின் பதில் என்ன? இவைகளை உள்ளடக்கிய புத்தக வடிவிலான ஏடு ஒன்று உலமாப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவர் மௌலானா மௌலவி அல் ஹாஃபிழ் அபுத்தலாயில் எம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி MA ஹஜ்ரத் அவர்களால் மிகத் தெளிவான விளக்கமும் அளிக்கப்பட்டது.இதி...

சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் கலகம்

சென்னை அண்ணா சாலை மக்கா பள்ளியின் இமாமாக செயல் பட்டு வரும் திரு.ஷம்சுத்தீன் காஸிமியை ''கிறுக்கன்'' என்று செல்லமாக குறிப்பிடுவது, தமிழக ஆலிம்களின் பழக்கம் தலையில் அட்டகாசமாக ஒரு துண்டை போட்டுக்கொண்டு,பெரிய மனித தோரணையில் எதையாவது உளறிக்கொட்டுவது,அவனது வாடிக்கை.தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தூண்டுவது,இடஒதுக்கீடு கேட்கக்கூடாது,சாதிவாரி கணக்கெடுப்புக்கு வந்தால் தகவல் சொல்லாதீர்கள் என்பது,(நபி யூசுப்) ஜுலைகா அம்மையாரை 'நடத்தை கெட்ட பெண்மணி'என்பது,ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார் என அமெரிக்காகாரன் சொன்னதை நம்பி,அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தியது என பரபரப்புக்காக எதையாவது செய்து கொண்டிருப்பது இவனது வழக்கம். மக்கா பள்ளிவாசலின் நிர்வாகத்தில் இருக்கும் பலருக்கும்,அந்த பொறுப்பு கிடைப்பதற்கே இவன்தான் காரணம் என்பதால் அவர்கள்''பேசாமடந்தை''களாக இருக்கிறார்கள். பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகி,சுன்னத் ஜமாஅத்தின் மீது நம்பிக்கை அற்றவன் என்பதால் அவன் ஷம்சுத்தின் செய்யும் அத்தனை குழப்பங்களுக்கும்,அலப்பறைகளுக் கும் முழு உடந்தையாக இருக்கிறான். ஏ...

அருள் நிறை லைலத்துல் கத்ர் இரவில் அனைவரும் ஆற்ற வேண்டிய அமல்கள்

Image
லைலத்துல்   கத்ர்   இரவு   வணக்கம்   பற்றி அண்ணலார்  ( ஸல் )  அவர்கள்   யார்   நன்னம்பிக்கையுடனும் , தூய   நிய்யத்துடனும் , ' ' லைலத்துல்   கத்ர் ''  எனும்   இரவில் விழித்திருந்து   இறை   வணக்கத்திலே   கழிக்கிறாரோ  அவரின்  சென்று போன பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (1) ரக்கஅத்   4;  அல்ஹம்து  1  முறை ,  அல்ஹாக்கு முத்தகாதுரு  1  முறை ,  குல்ஹுவல்லாஹு  3  முறை ஓதி   தொழ   வேண்டும் இதன்   பலன் ;  மரண   வேதனை   இலேசாக்கப்படும் , மண்ணரை   வேதனை   குறைக்கப்படும் . (2)  ரக்கஅத்  4;  அல்ஹம்து  1  முறை   இன்னா   அன்ஜல்னா 1  முறை   குல்ஹுவல்லாஹு  27  முறை   ஓதி   தொழ வேண்டும்   இதன்   பலன்   அன்று   பிறந்த   பாலகனைப் போன்று   பாவ   மற்றவராகிறார் (3)  ரக்கஅத்  4;...

தமிழக அரபுக் கல்லூரிகளின் இவ்வருடத்தின் பட்டமளிப்பு பெருவிழாக்கள்

Image
இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை அல்-ஜாமியத்துல் அரூஸிய்யா தைக்கா அரபுக் கல்லூரியின்  மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா ஜூலை 1 ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ தலைவரும்,அகில உலக ராத்திபத்துல் ஜலாலிய்யா,காதிரிய்யா தரீக்காவின் ஷைகுமான,டாக்டர் மௌலானா மௌலவி அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் தலைமை தாங்கி  ஸனது வழங்கினார்கள்.சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,சென்னை கைருல் பரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் சிறபுப்பேருரையாற்றினார்கள். காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.கேரள மாநிலம் கோடம் பழா தாருல் மஆரிஃப் அரபுக் கல்லூரித் தலைவர்,மௌலானா உஸ்தாத் பி.எஸ்.கே.மொய்து பாக்கவி,காயல்பட்டினம் அல் ஜாமிஉல்-கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும்,முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான,வரலாற்று விரிவுரையாளர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எச்.எ.அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கேரள மாந...

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற புனிதம் வாய்ந்த ஸலவாத்து மஜ்லிஸ்

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்!! முஸல்லியன்!!! வமுஸல்லிமா!!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சிகாம்புட்,மதரஸா மன்பவுல் உலூமில் 1மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் ''யார் என் மீது அதிகமாக ஸலவாத்து சொல்கிறார்களோ நாளை மறுமையில் என்னோடு மிக நெருக்கமாக இருப்பார்கள்''இப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்தித்தரும் வகையில் 10 லட்சம் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நிகழ்ச்சி, கடந்த 23-06-2012 சனிக்கிழமை மாலை 4 முதல் இரவு 10 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஒரு மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நடைபெறுவது, மலேசியாவிலேயே இதுவே முதன் முறையாகும்.நிகழ்ச்சிக்கு கேரள மாநிலத்திலிருந்து இமாம் பாபுஜி தங்கள் அவர்கள் சிறப்பு பிரமுகராக வருகை தந்து மஜ்லிஸை வழிநடத்தினார்கள்.ஜொகூர் மலபார் சங்க ஏற்பாட்டில் பேருந்துகளில் மக்கள் வருகைதந்தனர்.மேலும் சிங்கப்பூர்,பினாங்கு,பேரா,மலாக்கா,கெடா,சிலாங்கூர் போன்ற மாநிலங்களிலும் இருந்தும் பலர் தனித்தனியாகவும்,கலந்துகொண்...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு