Posts

Showing posts from June, 2013

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ்!!!

Image
23--06--2013  ஞாயிற்றுக்கிழமை  (காலை 9-30 மணிமுதல் மதியம் 1-30 வரை) மார்க்க மேதைகளின் மாண்புயர் அரங்கம் பட்டமளிப்பு விழா தலைமை ; பெங்களூர் ஷபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி,ஹாஃபிழ்,அல்ஹாஜ் '' அமீரே ஷரீஅத் '' முஹம்மது அஷ்ரஃப் அலீ ஹள்ரத் தாமத் பரகாத்துஹு முன்னிலை ; மூத்த மன்பயீ உலமாப் பெருந்தகைகள். ஜாமிஆவின் பேராசிரியப்  பெருந்தகைகள். மக்தப்களின் முஅல்லிம்கள் மற்றும் ஜாமிஆவின் அலுவலர்கள். தொடக்கவுரை ; பள்ளிக்கொண்டா,மௌலானா,மௌலவி,அல்ஹாஜ் மஸ்ஊது அஹ்மது அஸ்னவி மன்பயீ ஹள்ரத் அவர்கள். வரவேற்புரை ; மௌலவி,அல்ஹாஜ்,தளபதி. ஷபீகுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்கள். வாழ்த்துரை ; மாநில ஜமாஅத்துல் உலமா  துணைத் தலைவர் மௌலானா, மௌலவி. ஆவூர்.அப்துஷ் ஷக்கூர் மன்பயீ ஹள்ரத் அவர்கள் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பேராசிரியர். மௌலானா, மௌலவி. மஹ்மூதுல் ஹஸன் ரஷாதி ஹள்ரத் அவர்கள். சிந்தாமணிப்பட்டி தாருல் உலூம் ஸஊதிய்யா முதல்வர். மௌலானா, மௌலவி. சிராஜுத்தீன் அஹ்மது  ரஷாதி ஹள...

நம் வாழ்வில் ஒரு முறை..... 150 -- ஆம் ஆண்டு விழா!

Image
நம் வாழ்வில் ஒரு முறை..... 150 -- ஆம் ஆண்டு விழா! லால்பேட்டையின் புகழுக்கு புகழ் சேர்க்கும்... '' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' 150 --ஆம் ஆண்டு விழா! இந்திய அரபுக் கல்லூரிகளில் 150 -ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் ''முதல் அரபுக் கல்லூரி '' எனும் நற்பேற்றினை பெறும் '' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' 150 -ஆம் ஆண்டு விழா! தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டும் பெருவிழா! இன்ஷா அல்லாஹ்.... வரும் ஜூன் மாதம் 22,23 --ஆம் தேதிகளில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் லால்பேட்டையில் நடைபெறவிருக்கிறது இந்தியாவின் மிகப்பெரும் பேரறிஞர்களும்,தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மொத்தப் பிரதிநிதிகளும்,உரையாற்றவிருக்கும் லால்பேட்டையின் இந்த 150 ஆவது ஆண்டு விழாவில்  இன்ஷா அல்லாஹ் கலந்து சிறப்பிக்க.... இன்றே தயாராகுவோம்! இப்போதே ஆயத்தமாகுவோம்! லால்பேட்டை  '' ஜாமிஆ மன்பவுல் அன்வாரின் '' முன்னால் மாணவர்களே! லால்பேட்டையிலிருந்து ''மன்பயீ ஆலிம் ''பட்டம் பெற்றவர்களே! லால்பேட்டையிலிர...

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 ஆம் ஆண்டு பெருவிழா & 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ் !!!

Image
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ  அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1434 ஷஅபான் பிறை 12,13,  (22,23,06.2013) சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்,காலை 9.00 மணி முதல்  ஜாமிஆவின் ஈத்காஹ் மைதானத்தில் இன்ஷா அல்லாஹ் 150 --ஆம் ஆண்டு பெருவிழாவும், 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழாவும் நடைபெறவிருக்கிறது. 150 ஆம் ஆண்டு மாநாடு 22-06-2013 சனிக்கிழமை முதல் அமர்வு (நேரம் காலை 9-00 மணிமுதல் பகல் 1-30 மணிவரை) மாநாட்டுத் தலைவர் ; ஜாமிஆவின் தலைவர்,அல்ஹாஜ் P.M.முஹம்மது ஆதம் அவர்கள். முன்னிலை ; ஜாமிஆவின் மூத்த பேராசிரியர்   ஷைகுல் ஃபிக்ஹ்,மௌலானா,முஃப்தி,அல்ஹாஜ் S.A.அப்துர் ரப் ஹள்ரத் தாமத் பரகாத்துஹூ நிகழ்வுகள் . வரவேற்புரை ; ஜாமிஆவின் பொருளாலர்,அல்ஹாஜ் S.ஜாஃபர் அலீ  B.Sc...அவர்கள் தொடக்கவுரை ; ஆயங்குடி,யன்பூஉல் கைராத்,மௌலவி,அல்ஹாஜ் P.A.ஜாபர் அலீ மன்பயீ ஹள்ரத் அவர்கள் வாழ்த்துரை & சிறப்புரை ; காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் M. அப்துர் ரஹ்ம...

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

Image
سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ  مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ  (அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் -17-1 ) மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந்தார்கள...

புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா !! வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும்,நடைபெற்று வரும் புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர் மஜ்லிஸ்  இவ்வாண்டு,இன்ஷா அல்லாஹ் 05--06-2013  புதன்  மாலை    -- வியாழன் இரவு   ( ரஜப்  பிறை 27-- 1434 ) அன்று மிகச் சிறப்பாக  நடைபெற உள்ளது.என்பதை,  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல்  இஷாத் தொழுகைக்குப் பின்  சிறப்பு பயான் -- திக்ர் மஜ்லிஸ் மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு இமாம்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா, அவர்களது  சீரிய தலைமையில் நடைபெறும்.இது போன்று மலேசியாவில் உள்ள நூற்றுக் கணக்கான மதரஸாக்களிலும்,மற்றும் உலகம் முழுவதும் அனைத்து பள்ளி வாசல்களிலும், புனிதம் வாய்ந்த மிஃராஜ் இரவின்  சிறப்பு பயான் மற்றும் திக்ர்  மஜ்லி...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு