Posts

Showing posts from November, 2013

மலேசிய சித்தார் கோட்டை முஸ்லிம் சங்கத்தின் 14 ஆம் ஆண்டு குடும்ப தின விழா!!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடயீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நற் கிருபையாலும்,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் நல்லாசியாலும்,  முஹர்ரம் பிறை  20, (24-11-2013 ) ஞாயிற்றுக்கிழமை  Kandiah Hall SJK (T) Vivekananda, Jalaln V ivekananda, Brickfields, கோலாலம்பூரில்  மலேசிய சித்தார் கோட்டை முஸ்லிம் சங்கத்தின் 14 ஆம் ஆண்டு குடும்ப தின விழா  மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்பமாக மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பயீ அவர்கள் திருமறையின்  வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்பு கிராஅத் போட்டி சிறு பிள்ளைகளுக்கு நடைபெற்றது. பதினோறு குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.அனைவரும் சிறப்பான முறையில் ஓதினார்கள்.  நடுவராக மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் ஆலிம் மன்பயீ பணியாற்றினார்.  பின்னர் வருசை ஜுவல்லர்ஸ் உரிமையாளரும்,மலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின்  தலைவர்  ஹாஜி வருசை முஹம்மது அவர்கள்,தலைமை உரையாற்றினார்கள். பிறகு பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யாவின்

பிரபல இஸ்லாமிய எழுத்தாளர் எம்.எஸ்.முஹம்மது தம்பி மறைவு !

பிரபல இஸ்லாமிய எழுத்தாளரும்,பன்னூலாசிரியருமான எம்.எஸ். முஹம்மது தம்பி, அவர்கள் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி அன்று மறைவுற்றார். அவருக்கு வயது 79, சில நாட்களாகவே உடல் நலம் குன்றியிருந்த அவர், மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மறுநாள் அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லில் நல்லடக்கம் செய்யப்பட்டார். தமிழ்,மலையாளம்,உர்து,ஃபார்ஸி,ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஆழ்ந்த புலமைமிக்கவர்.அவர் எழுதிய கலீஃபாக்கல் வரலாறு,மதீனாவின் அன்ஸார்,நாயகத் தோழர்கள், இறுதித் திரு நபியின் இறுதி நாட்கள்,மரணத்தின் மடியில் மாநபியின் தோழர்கள், அஷரத்துல் முபஷ்ஷரா,ஹழ்ரத் அபூஹுரைரா,அருளிறங்கும் பருவ காலம்  முதலான நூல்கள் வாசகர்களால் மறக்க முடியாத நூல்களாகும். தமிழின் மீதும் தமிழிலக்கியத்தின் மீதும் தீராத தாக்கம் கொண்டிருந்த  அவருக்கு,இஸ்லாமிய இலக்கிய மேதைகளான  சையது முஹம்மது ' ஹஸன்', எம் ஆர்.எம் அப்துற் றஹீம்,மற்றும்  சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது சாஹிப் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. குறிப்பாக எம்.ஆர்.எம். அவர்களுடனான நட்பு இவரை எழுத்துத் துறையின் பா

ஹிஜ்ரி சகாப்தம் 1435 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!

Image
'' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 47913  முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. தாரிகுத்தபரி 312) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய  அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்டு,

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு