Posts

Showing posts from November, 2014

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மாபெரும் மௌலிது மஜ்லிஸ் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர் !!!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர்  setiawangsa masjid muadz bin jabal  ( செடிய வங்ஸா மஸ்ஜிது முஆது இப்னு ஜபல்)   பள்ளிவாசலில் மாபெரும் புனித மௌலிது ஷரீஃப்  மஜ்லிஸ் ( 28-11- 2014) வெள்ளிக்கிழமை  மஃரிப் தொழுகைக்குப் பிறகு மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  மரியாதைக்குரிய  al habib ali zaenal abidin     ஷைகு அல் ஹபீப் அலி ஜைனல் ஆபிதீன்  அவர்களும், மரியாதைக்குரிய  al habib umar bin muhammed salim  ஷைகு அல் ஹபீப் உமர் பின் முஹம்மது சலீம்  மற்றும் அரபு நாடுகளை சேர்ந்த் அதிகமான  ஷைகு மார்களும்,அரபியில் உரை நிகழ்த்தினார்கள். இச்சிறப்புப் பேருரைகளை மலாய் முஸ்லிமைச்  சார்ந்த உஸ்தாது மார்கள்,மிக அழகாக  மலாய்  மொழியில் மொழிபெயர்த்தார்கள். இந்த சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை majlis ta' lim darul murtadza மற்றும்  setiawangsa masjid muadz bin jab...

إحياء علوم الدين

Image
  மலேசியத் தலைநகர் selayang  இமாம் கஜ்ஜாலி  மதரஸாவில்,  ( 22-11-2014 )  அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ். அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்  தலைமை இமாம்,,மௌலானா மௌலவி, அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி  ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்  இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.   

பெண் வாரிசு !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  21-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை       குத்பா பேருரை        மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்         இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்          மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.             எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி            ஹஜ்ரத் கிப்லா,அவர்கள். தலைப்பு ;-  பெண் வாரிசு !!!

சுன்னத் ஜமாஅத் பேரியக்கம், சென்னை மேற்கு மாம்பலம் கிளை சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் !!!!

Image
சிறப்பு மிகு  மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் , மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ்  சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து  வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

கோலாலம்பூரில் நடைபெற்ற மாபெரும் திக்ரு மஜ்லிஸ் !!!!

Image
16-11-2014 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பின், தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் சங்கையான மாபெரும் திக்ரு மஜ்லிஸ் மிகச் சிறப்பாக இரவு 9.30 வரை நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸை தலைநகர் மஸ்ஜித்  இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா  மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ். அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்  தலைமையேற்று மிகவும் சிறப்பாக நடத்தி வைத்தார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமானோர் கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.

( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா 4 வது வசனம் முதல் 12 வரை

Image
மலேசியத் தலைநகர் selayang  இமாம் கஜ்ஜாலி மதரஸாவில்,08-11-2014   சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன்  விரிவுரை வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ். .  தலைப்பு ;-  ( தஃப்ஸீர் سورة طه ) சூரத்துத் தாஹா  4 வது வசனம் முதல் 12 வரை. சிறப்புப்பேருரை ;-  selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

இஸ்லாம் தீவிரவாதமா ?

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின் 07-11-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை                                     தலைப்பு ;-  இஸ்லாம் தீவிரவாதமா ?               குத்பா பேருரை   மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்  இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்  மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்கள்.

இலங்கை,காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு-2014

Image
வஹ்ஹாபிகளின் அண்டப்புழுகுகளுக்கு ஆதாரத்துடனும், வஹ்ஹாபிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுடனும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாட்டின் 0 3ம் நாள் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாபிழ் M. ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ MA. அன்னவர்கள் ஆற்றிய கெள்கை விளக்க சிறப்புரை.... வஹ்ஹாபிஸத்திற்குச் சாட்டையடி. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஜோதிடத்தைப் பொய்யாக்கிய P.B.ஸ்ரீனிவாஸ்

Image
     ஒரு மனிதன் எதிர் காலத்தை முழுமையாகவும் விரிவாகவும் ஜாதகத்தால் சரியாக கணித்துச் சொல்ல முடியாது என்பதற்கு இன்னுமொரு நிஜ உதாரணம் பிரபல பாடகர் P.B. ஸ்ரீனிவாஸ்.  இவர் பாடினார்.திரைத்துறையில் பிரபலமாகி இன்றும் இசை ரசிகர்களின் நெஞ்சம் மறக்காதவராக நெகில வைத்துக் கொண்டிருக் கிறார்.ஆனால் அவரைப்பற்றி ஆரம்பத்தில் ஜோதிடம் சொன்னது என்னவென்று தெரியுமா ? இந்தப் பையனின் ஜாதகப்படி சினிமா வாய்ப்பே இவனுக்கு இல்லை என்று தான் ஜோதிடர் சொன்னார்.இவர் பாடுவதில் ஆர்வமாகி பித்தாகிப் போன போது ஒரு ஜோதிடரிடம் அழைத்துக் கொண்டு போனார் அவருடைய அப்பா. “பையன் பாடுகிறான்.சினிமா பக்கம் போகணும்னு சொல்றான்.அதுக்கு இவன் ஜாதகத்தில் வாய்ப்பிருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க” அவருக்கு முன்னால் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த  ஸ்ரீனிவாஸைப் பார்த்து ஜோதிடர் சொன்னார் ; “பையன் சினிமா பக்கம் போகவே வாய்ப்பில்லை.  ஜாதகம் அப்படித்தான் சொல்றது”. எதிரே பெருங்கனவுடன் காத்திருந்த ஸ்ரீனிவாஸுக்கு  கோபம் வந்து விட்டது. நீங்க சொல்றது எல்லாம் நடக்குமா ? “சிலது நடக்கலாம்.சிலது...

புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் !!!

Image
மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம்  கஜ்ஜாலியில் ( 02-11-2014 ) ஞாயிற்றுக் கிழமை  இரவு 8.00 மணிக்கு,புனித ஆஷுரா தின  சிறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.  . அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின்  கண்ணியமிகு  தலைமை இமாம் மௌலானா  மௌலவி  அல்ஹாஃபிழ், அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி  ஹஜ்ரத் கிப்லா, அவர்கள் ,ஆஷுரா தினத்தைப்  பற்றியும்,கண்ணிய மிகு உலமாப் பெருமக்களின் சிறப்புகள்  பற்றியும் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.நிகழ்ச்சி  இறுதியில் ஹஜ்ரத் அவர்கள் உருக்கமான, சிறப்பு  துஆ ஓதி முடித்து வைத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 1 புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான் PART 2

பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் முதல்வர், '' நடமாடும் மதரஸா '' என்று அழைக்கப்படும்,மௌலானா மௌலவி மு.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு தொக்கோ மஅல் ஹிஜ்ரா என்ற உயரிய விருது !!!

Image
அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) 01-11-2014 அன்று பினாங்கில், முஸ்லிம் லீக் சார்பாக,இஸ்லாமிய வருடப் பிறப்பை முன்னிட்டு,நிம்மதியான வாழ்வு எங்கே? என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இச்சிறப்புக் கருத்துக் களத்தில்,   தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா. எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில்  பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,  பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் முதல்வர் மௌலானா மௌலவி மு.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத்  மற்றும்  பினாங்கு மதரஸா உஸ்வத்துன் ஹஸனாவின் ஆசிரியர்,அல்ஹாஃபிழ் மௌலானா ஹஸனுத்தீன்  மன்பயீ ஆகியோர் பங்கு பெற்றனர். இறுதியில் பினாங்கு தாருல் உலூம் தாவூதிய்யா மதரஸாவின் முதல்வர் மௌலானா மௌலவி மு.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்களுக்கு தொக்கோ மஅல் ஹிஜ்ரா என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இதில் ஏராளமானோர்  கலந்துகொண்டனர் வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள். ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு