வாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்களால் நடைபெற்றது !!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம், அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின், பிறை ஒன்றில் இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, வாழூர் அல் மஸ்ஜிதுர் ரைய்யான் ஜும்ஆ பள்ளி வாசலில், சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும், சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப்,வாழூர் அல் மஸ்ஜிதுர் ரைய்யான் ஜும்ஆ பள்ளி வாசலின் தலைமை இமாம், மௌலானா மௌலவி K.S. முஹம்மது ஆரிஃப்கான் ஆலிம் நிஜாமி, நூரி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்,பதினோரு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (03-01-2015) அன்று சனிக்கிழமை,பெருமானாரின் மீலாதுப் பெருவிழா,தமிழகத்தின் தலை சிறந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான, சென்னை பிலாலியா அரபுக்கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சி அஸர் தொழுகை முதல் இரவு 11.00
மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சுற்றுப்புற மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.
வெளியீடு --
சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளம்,
சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் வாழூர் கிளை.
www.chittarkottaisunnathjamath.blogspot.com.
Comments
Post a Comment