மலேசியத் தலைநகர்,கோலாலம்பூரில் நடை பெற்ற மாபெரும் மீலாதுப் பெருவிழா மற்றும் மீலாது ஊர்வலம் !!!


முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!    முஸல்லியன்!    முஸல்லிமா!
   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சுன்னத் ஜமாஅத் கோட்டையான, வளம் கொழிக்கும் மலேசியாவில்,
மலேசிய மொழியில் '' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் 
மீலாதுப் பெருவிழா மற்றும் மீலாது ஊர்வலம் ( 03-01 2015 ) சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி,மலேசியாவின் மாமன்னர்,மற்றும் பிரதமர்,தலைமையில்,அமைச்சர்கள், முன்னிலையில் 
மிகச்சிறப்பாக, மலேசிய அரசாங்கத்தால் நடத்தப்பட்டது.

இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில், கண்ணிய மிகு உலமாப் பெருமக்கள், 
மற்றும் இஸ்லாமிய அறிஞர் பெருமக்களுக்கு,
தொக்கோ '' மௌலிதுர் ரஸுல் '' என்ற சிறப்பு  விருதுகள் 
வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இது போன்று மலேசியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும்,அந்தந்த மாநிலங்களின் மாமன்னர்கள் மற்றும் முதலமைச்சர்களின் தலைமையில் நடைபெற்றது. '' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும்,மலேசியா முழுவதும், 
மலேசியா அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.

இச்சிறப்பு வாய்ந்த '' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவில்  
பல்லாயிரக்கணக்காணோர் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.

                                       இவ்வாண்டு மலேசியாவில் நடைபெற்ற 
'' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும் 
பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவின் 
வீடியோ காட்சிகள்.

முதல் பாகம்.



இரண்டாம் பாகம்.



மூன்றாம்  பாகம்.



 நான்காம் பாகம்.



இவ்வாண்டு மலேசியாவில் நடைபெற்ற
'' மௌலிதுர் ரஸுல் '' என்று சொல்லப்படும்
பெருமானாரின் மீலாதுப் பெருவிழாவின்
புகைப்படங்கள்.























வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு