மலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா மற்றும் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாபெரும் நினைவுப் பெருவிழா !!!
மலேசியத் திருநாட்டில் இன்ஷா அல்லாஹ்
எதிர் வரும் ஜமாத்துல் அவ்வல் பிறை 9- ஹிஜ்ரி
1436 ( 28- 02-2015) அன்று புத்ரா ஜெயாவில்,
masjid tuanku mizan zainal abidin ல்.பெருமானாரின்
மீலாதுப் பெருவிழாவும்,கௌதுல் அஃலம்
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு
அவர்களின் நினைவு விழாவும் மிகச்சிறப்பாக நடைபெற
உள்ளது.இதில் உலகம் முழுவதும் உள்ள சுன்னத் ஜமாஅத்
உலமாப் பெருமக்கள் வருகை தந்து சிறப்புப் பேருரையாற்ற இருக்கின்றார்கள்.ஆகவே இச்சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியில்,
அனைவரும், தவறாது கலந்துகொண்டு,அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சிறப்பு மிகு மாபெரும் பெருவிழா, மென்மேலும்
சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல்
ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி
துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்..
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment