Posts

Showing posts from May, 2012

இல்லற வாழ்க்கை இனித்திட

சென்னை குடும்ப நல கோர்ட்டில்  10  அறிவுரைகள் புதுமணத் தம்பதிகளே ,  அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாக !  அழகிய முறையில்    உங்கள்    இரு வரையும் ஒன்று சேர்த்து வைப்பானாக !!  ஆமீன் இருவரும் கோபப்படாதீர்கள் ஒரே சமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள் . வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்க விட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. எப்பொழுதுமே! விமர்ச்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள். கடந்த கால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். உலகத்திற்காக போலியாக வாழ்வதைக்காட்டினும், உங்களுக்காகவே வாழ்ந்துபாருங்களேன். மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள். மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்;- விவாதம் தவிர்க்க முடியாதது என்றால் கூடிய வரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணைவியுடன் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும் போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். இல்லற வாழ்க்கை இனித்திட மூன்று ...

லால்பேட்டையில் புனித மிகு புஹாரி ஷரீஃப் 36-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் துஆ மஜ்லிஸ்

Image
லால்பேட்டையில் புனித மிகு புஹாரி ஷரீஃப் 36-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் துஆ மஜ்லிஸ் மே 22 ஆம் தேதி செவ்வாய் மாலை புதன் இரவு 9-00 மணியளவில் லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் தாருத்தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முதல்வர், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், காரீ முஃப்தி, A.நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.லால்பேட்டை J.M.A.அரபுக் கல்லூரியின் முன்னால் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,முஃப்தி,S.அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவரும்,லால்பேட்டை அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி,அபுல் பயான்,ஷைகுல் ஹதீஸ்,A.E.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.இனாம் குளத்தூர் இன்ஆமுல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,ஆன்மீகப் பேரொளி,E.ஷாஹுல் ஹமீது ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைகளும்,உலமாப் பெருமக்களும் உரையாற்றினார்கள்.இறுதியில் லால்பே...

நாகூர் தர்ஹா ஷரீஃப்-455-வது ஆண்டு பெரிய கந்தூரிவிழா

Image
நாகூர் ஹஜ்ரத் குத்துபுல் அக்தாப் செய்யிது ஷாதாத் செய்யிதினா ஷாஹுல் ஹமீது காதிர் ஒலி கஞ்சவாய் கஞ்சபக்ஸ் பாதுஷா நாயகத்தின் பெரிய கந்தூரி விழா ஹிஜ்ரி 1433 ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றில் இருந்து ஜமாஅத்துல் ஆஹிர் பிறை பதிநான்கு வரை மிகச்சிறப்பாக நாகூர் ஷரீஃபில் நடைபெற்றது.மே மாதம் 5-ஆம் தேதி இரவு நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பெயரில் குர்ஆன் ஷரீஃப் ஓதி ஹதியா செய்யப்பட்டது, இது போன்று மலேசியத் தலைநகரில் தென் இந்தியப் பள்ளிவாசலில்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  இமாம்கள்,மேலப்பாளையம், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் S.S.அஹ்மது ஆலிம் பாகவி ஃபாஜில் தேவ்பந் ஹஜ்ரத்,மற்றும் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் நாசிர் அலி ஆலிம் உமரி ஹஜ்ரத் ஆகியோரது தலைமையில், ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து,ஜமாஅத்துல் ஆகிர் பிறை பத்து வரை பத்து தினங்கள்,தினமும் அஸர் தொழுகைக்குப் பின் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா (ரஹ்) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.இது போன்று பினாங்கு மாநிலம்,மற்றும் இலங்கையில் உள்ள கல்முனை நாகூர் தர்ஹாவிலும்,மௌலிது மஜ்லிஸ்கள்,திக்ரு மஜ்லிஸ்கள்...

ஜமாஅத்துல் அவ்வல் பிறை 3-முதல் ஜமாஅத்துல் அவ்வல் பிறை 25-வரை நடைபெற்ற சிறப்பு மஜ்லிஸ்கள்.

சென்னை வியாசர்பாடி,7-வது தெரு S.A.காலனியில் புதுப்பிக்கப்பட்ட ஷுபுஹானியா மஸ்ஜிது, மற்றும் மதரஸா திறப்புவிழா ஏப்ரல் 8-ஆம் தேதி நடைபெற்றது.விழாவில், மௌலானா A.K.சிப்கதுல்லாஹ் ஆலிம் பாகவிM.A.Mphil  அவர்கள் கிராஅத் ஓதினார்கள்.தாய்ச்சபைத் தலைவர்,பேராசிரியர் கே.எம். காதிர் முஹைதீன் அவர்கள் பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்கள். ஜமாலியா  அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி M.அப்துர் ரஹ்மான் ஆலிம் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத், மஸ்ஜித் மஃமூர் தலைமை இமாம்,மௌலானா O.S.M. இல்யாஸ் ஆலிம் காஸிமி ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.இறுதியில் மௌலானா A.M.M.இப்றாஹிம் ஆலிம் அவர்கள் துஆ ஓதினார்கள். மீலாது நபி (ஸல்)விழா, முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) நினைவு விழா,சுன்னத் ஜமாஅத் பேரியக்க கிளை துவக்கவிழா,ஆகிய முப்பெரும் விழா, சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் சார்பாக ஏப்ரல் 8-ஆம் தேதி,சென்னை தண்டையார்பேட்டை,நேதாஜிநகர்,3-வது தெருவில் உள்ள கீழக்கரை கல்வத்து நாயகம் மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் மௌலானா மௌலவி ஷாஹுல் ஹமீது ஆலிம் மஹ்ழரி அவர்கள்,கிராஅத் ஓதினார்கள்.மௌலானா ரஹ்மத்துல்லாஹ் ஆ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு